July 26, 2019

பரம்பொருள்-பதிவு-49

          பரம்பொருள்-பதிவு-49

திருஞான சம்பந்தர் :
"நீங்கள் ஏற்றுக் கொள்ள
நான் என்ன செய்ய
வேண்டும்?"

மக்கள் :
"இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்ப வேண்டும்"

"சிவம் உண்மையான
கடவுள் என்றால் ,
நீங்கள் சிவத்தின்
உண்மையான அடியவர்
என்றால், இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்ப வேண்டும்"

"இறந்த பூம்பாவையை
நீங்கள் உயிரோடு
எழுப்பி விட்டீர்கள் என்றால்
நாங்கள் அனைவரும்
சிவத்தை கடவுளாக
ஏற்றுக் கொண்டு
சைவமதத்தை தழுவி ;
சிவ மந்திரத்தை
அனுதினமும் உச்சரித்து ;
சைவ நெறிகளை
பின்பற்றி வாழ்கிறோம் ;"

"நாங்கள் மட்டுமல்ல
இந்த ஊர் மொத்தமும்
நீங்கள் வணங்கும்
கடவுளான சிவமே
உண்மையான கடவுள்
என்று ஏற்றுக் கொள்கிறோம் ;
அதைப்போல உம்மையும்
அந்த சிவத்தின் அருள்
பெற்றவர் என்பதையும்
ஏற்றுக் கொள்கிறோம் ;"

திருஞான சம்பந்தர் :
"இறைவா விதியின்
கைகளுக்குள் என்னையும்
சிக்க வைத்து விட்டாய் ;

இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்ப வேண்டும்
என்பது தான் உன்னுடைய
சித்தம் என்றால் 
காலத்தின் கட்டாயத்தைக்
கருத்தில் கொண்டு ,
சூழ்நிலையின் அவசியத்தை
கருத்தில் கொண்டு ,
ஊழ்வினையின் தாக்குதலை
கருத்தில் கொண்டு ,
கர்மவினையின் மிச்சத்தைக்
கருத்தில் கொண்டு ,
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன் !"

"அண்ட சராசரங்கள்
அனைத்தையும்
படைத்து ; காத்து ;
அழித்து; அருள் செய்து ;
மறைத்துக் ;
கொண்டிருப்பது
ஆதி அந்தம் இல்லாத
பரம்பொருளான
சிவமே என்பதை- இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக இறந்த
பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன் !"

"உலகில் உள்ள மதங்களில்
உயர்ந்த மதம்
சைவமதமே என்பதையும் ;
உலகில் உள்ள மந்திரங்களில்
உயர்ந்த மந்திரம்
சிவனுடைய மந்திரமே
என்பதையும் ;
உலகில் உள்ள புனிதமான
நூல்களில் சைவ
மதத்தில் உள்ள
நூல்களே புனிதமான
நூல்கள் என்பதையும் ;
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இறந்த
பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன் !"

"உலகில் உள்ள கோடிக்
கணக்கான கடவுள்களில்
மெய்யான கடவுள் சிவம்
மட்டுமே என்பதையும் ;
உலகில் உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களையும் ஏற்றுக்
கொள்வது சிவம்
மட்டுமே என்பதையும் ;
உலகில் உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களை கழித்து ;
கர்மாவை எரித்து ;
பிறப்பு இறப்பு
சுழற்சியை அறுத்து ;
ஞானத்தை கொடுத்து ;
முக்தி பேற்றை
அளிக்கக் கூடிய சக்தி
சிவத்திற்கு மட்டுமே
உள்ளது என்பதையும் ;
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இறந்த
பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன்!"

"தாய் மதத்தில் தான்
வணங்கிய கடவுளின்
சக்தியை அறிவு பூர்வமாக
உணர்ந்து கொள்ள
முடியாதவர்கள் அந்நிய
மதத்திற்கு சென்று அந்நிய
கடவுளை வணங்கியவர்கள்
கூட சைவமதத்தைத் தழுவி,
சிவத்தை வணங்கி,
சிவ மந்திரத்தை
அனுதினமும் உச்சரிக்க
வைக்க வேண்டும்
என்பதற்காக இறந்த
பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன்  "

"ஆம் இறந்த
பூம்பாவையை
உயிரோடு எழுப்புகிறேன்!"

(என்று
திருஞான சம்பந்தர்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
பதிகம் பாடத் தொடங்கினார்)

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 26-07-2019
//////////////////////////////////////////////////////////

July 25, 2019

பரம்பொருள்-பதிவு-48

                   பரம்பொருள்-பதிவு-48

திருஞான சம்பந்தர் :
“சிவனின் மகிமையை
இந்த உலகத்தில் உள்ள
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக பல்வேறு
செயல்களைச் செய்ய
வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சிவநாமத்தை இந்த
உலகத்தில் உள்ள
அனைவரும் ஏற்றுக்
கொண்டு உச்சரித்து
சிவனை அடைந்து
பிறவிக் கடனை
முடிக்க வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்தோடு
செயல்களைச்
செய்ய வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சைவநெறியின்
கொள்கைகளை
இந்த உலகம் எங்கும்
பரவும்படிச் செய்து
சைவநெறி தழைத்தோங்க
வேண்டும் எனற
காரணத்திற்காக
செயல்களைச் செய்ய
வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சிவனில் இரண்டறக்
கலந்தவன் ;
சிவனின் அருளைப்
பெற்றவன் ;
சிவனின் புகழை
பரப்ப வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும் ;”

“நீங்கள் ஒப்புக் கொள்ள
வேண்டும் என்றால்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பும்
அற்புதத்தை நான்
செய்து தான் ஆக
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீகளா?”

மக்கள் :
“உங்களுக்கு முன்பு
இருந்தவர்கள்
பல்வேறு விதமான
அற்புதங்களை செய்து
காட்டி இருக்கிறார்களே!”

“பல்வேறு விதமான
அற்புதங்களைச் செய்து
காட்டித் தானே
இந்த உலகத்தில்
வாழ்ந்திருந்தவர்கள்
தங்களுடைய
கொள்கைகளையும்
தங்களுடைய
மதங்களையும்
நிறுவி இருக்கிறார்கள் “

“அத்தகைய
பல்வேறுவிதமான
அற்புதங்களில் ஒன்று
தானே இறந்தவரை
எழுப்புகின்ற அற்புதமும்”

“அப்படி இருக்கும் போது
நீங்கள் மட்டும் ஏன்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்ப
மறுக்கிறீர்கள்”

திருஞான சம்பந்தர் :
“இறந்த பூம்பாவையை
உயிரோடு நான்
எழுப்பினால் தான்
நான் வணங்கும்
சிவனின் சக்தியையும்
சிவனின் அருள் பெற்ற
என்னுடைய
சக்தியையும்
நீங்கள் ஏற்றுக்
கொள்வீர்களா?”

“ஒருவர் செய்யும்
அற்புதத்தை வைத்து
அவர் வணங்கும்
கடவுளின் சக்தியையும்;
கடவுளின் அருள்
பெற்ற அவருடைய
சக்தியையும்; எந்த
அளவுகோல் கொண்டு
கணக்கீடு செய்வீர்கள்”

“ஒருவர் செய்யும்
அற்புதத்தை வைத்து
அவர் பெற்ற கடவுள்
சக்தியை எந்த
அளகோலையும்
வைத்து கணக்கீடு
செய்ய முடியாது”

மக்கள் :
“எங்களுக்கு கணக்கீடு
பற்றி எல்லாம்
எதுவும் தெரியாது”

“அதைத் தெரிந்து
கொள்வதற்கு நாங்கள்
விருப்பப்படவும் இல்லை”

“எங்களுக்கு தெரிந்தது
அற்புதம் மட்டுமே”

“இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பி
நீங்கள் அற்புதம்
செய்தால் மட்டுமே
நீங்கள் வணங்கும்
சிவன் உயர்ந்த
சக்தி படைத்தவர்
என்பதையும் ;
நீங்களும் அந்த
சிவனின் அருள்
பெற்றவர் என்பதையும்;
நாங்கள் ஏற்றுக்
கொள்வோம்

திருஞான சம்பந்தர் :
“இல்லாவிட்டால்”

மக்கள் :
“நாங்கள் ஏற்கனவே
சொல்லியது தான்
ஏற்றுக் கொள்ள மாட்டோம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 25-07-2019
////////////////////////////////////

July 24, 2019

பரம்பொருள்-பதிவு-47


                  பரம்பொருள்-பதிவு-47

மக்கள் :
“ஒரு சாரர் என்று
நீங்கள் யாரை
குறிப்பிடுகிறீர்கள்?”

திருஞான சம்பந்தர் :
“அண்ட சராரசரங்கள்
அனைத்தையும் இயக்கி
காப்பாற்றி வழி
நடத்திக் கொண்டிருக்கும்
இறைவனுடைய
அற்புதமான சக்தியை
புரிந்து கொள்ள
முடியாத நிலையில்
இருப்பவர்களும்;
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
உண்மை என்றால் என்ன
என்று உணராமல்
இருப்பவர்களும் ;
இறைவன் நம்முடைய
உடலில் சிரசில் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ,
இறைவனை
அடையக்கூடிய வழி
எது என்பதையும் ,
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது
எது என்பதையும் ,
உணராமல் இருப்பவர்களும் ;
இறந்தவரை எழுப்புவது
என்பது மிகப்பெரிய செயல் ;
அந்த செயலைச் செய்பவர்
மிகப்பெரியவர் ;
அந்த செயலைத் தான்
மிகப் பெரிய அற்புதம் ;
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் “

மக்கள் :
“அப்படி என்றால்
இறந்தவரை எழுப்புவது
என்பது தேவையற்ற
செயல் என்ற கருத்தைக்
கொண்டிருப்பவர்கள் யார்
என்று நீங்கள் நினைக்கிறீர்கள்”

திருஞான சம்பந்தர் :
“நமது உடலில் சிரசில்
கடவுள் எந்த இடத்தில்
இருக்கிறார் என்பதை
அறிந்து ;
அவரை அடையக்கூடிய
வழி எது என்பதை
அறிந்து ;
அவரை அடையப்
பயன்படுத்தக் கூடியது
எது என்பதை அறிந்து ;
அதனைப் பயன்படுத்தி
எல்லாம் வல்ல
இறைவனுடன் இரண்டறக்
கலந்து எல்லாம் வல்ல
பரம்பொருளே இந்த
உலகம் அனைத்தையும்
இயக்கி காப்பாற்றி வழி
நடத்திக் கொண்டு
இருக்கிறது என்று
பரம்பொருளை உணர்ந்தவர்கள்
இறந்தவரை எழுப்பும் செயல் ;
தேவையற்ற செயல் என்பதை
உணர்ந்து இருக்கிறார்கள் ; “

“ சுருக்கமாகச்
சொல்லப்போனால்
உண்மை என்றால் என்ன
என்பதை உணர்ந்தவர்கள்
இறந்தவரை எழுப்புவது
தேவையில்லாத
செயல் என்பதை
உணர்ந்திருக்கிறார்கள் “

மக்கள் :
“உங்களுக்கு தமிழ்
வார்த்தைகளை வைத்து
விளையாடத் தெரியும் ;
என்பது இங்குள்ள
அனைவருக்கும் தெரியும் ;  
உங்களிடம் இருக்கும் 
அந்த தமிழை வைத்து
வார்த்தைகளால் விளையாடி
எங்களிடமிருந்து
தப்பிக்க பார்க்கிறீர்கள் ; “

திருஞான சம்பந்தர் :
“ தப்பிக்க வேண்டிய
அவசியம் எனக்கு
எப்போதுமே ஏற்பட்டதில்லை
நான் உண்மையைச்
சொன்னேன் உங்களுக்கு
புரியவில்லை !”

“உங்களுக்கு புரியவைக்க
வேண்டும் என்று
எவ்வளவோ முயற்சி
செய்தேன் முடியவில்லை!”

“நான் என்ன செய்ய
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்”

மக்கள் :
“இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுத்து இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்ப வேண்டும் - நீங்கள்
இந்த அற்புதத்தை
செய்தால் மட்டுமே
நீங்கள் இறைவனுடைய
அடியவர் என்பதையும் ;
இறைவனின் அருள்
பெற்றவர் என்பதையும்
நாங்கள் ஏற்றுக்
கொள்வோம் “

திருஞான சம்பந்தர் :
“செய்யாவிட்டால்”

மக்கள் :
“ஏற்றுக் கொள்ள மாட்டோம்”

திருஞான சம்பந்தர் :
“அற்புதம் செய்தால்
மட்டும் தான் - நான்
இறைவனின் அருள்
பெற்றவன் என்பதையும்;
நான் வணங்கும்
இறைவன் சக்தி
நிறைந்தவர் என்பதையும்
ஏற்றுக் கொள்வீர்களா ?”

“நான் பேசும் வார்த்தைகள்
இறைவனின் வார்த்தைகள்
என்பதையும்;
என் மூலமாக இறைவன்
வெளிப்படுத்தும் வார்த்தைகள்
என்பதையும் ; நீங்கள்
அறியவில்லையா?”
இறைவன் என் மூலமாக
எந்த ஒன்றை வெளிப்படுத்த
நினைக்கின்றானோ - அந்த
ஒன்றை என் மூலமாக
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறான் என்பதை
நீங்கள் உணரவில்லையா?”

மக்கள் :
“இதை எல்லாம்
உணரக்கூடிய சக்தி
எங்களுக்கு இல்லை;
நீங்கள் இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்பி அற்புதம்
செய்தால் மட்டுமே
நீங்கள் வணங்கும்
இறைவன் உண்மையான
இறைவன் என்பதையும்;
தாங்கள் இறைவனின்
அருள் பெற்றவர்
என்பதையும் ;நாங்கள்
ஒப்புக் கொள்வோம் ;”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 24-07-2019
//////////////////////////////////////////////////////////

July 23, 2019

பரம்பொருள்-பதிவு-46


             பரம்பொருள்-பதிவு-46

திருஞான சம்பந்தர் :
“அண்ட சராசரங்கள்
அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கி ; காப்பாற்றி ;
வழிநடத்தும் செயல்களைச்
செய்து கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச் செயல்
அற்புதமில்லையா ? ”

“விதையிலிருந்து செடியும் ;
செடியிலிருந்து பூவும் ;
பூவிலிருந்து காயும் ;
காயிலிருந்து கனியும் ;
இவைகள் ஒவ்வொன்றும்
வரிசை முறை மாறாமல்
தகுந்த காலத்தில்
வெளிப்படும் வகையில்
செயல்கள் அனைத்தையும்
செய்து கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச் செயல்  
அற்புதமில்லையா ? “

“தாயின் வயிற்றுக்குள்
இருக்கும் குழந்தைக்கு
உயிர் வாழ்வதற்குத்
தேவையானவைகள்
அனைத்தையும் வழங்கும்
செயல்களைச் செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச் செயல்
அற்புதமில்லையா ? “

“ நம்முடைய உடலுக்குள்
இருக்கும் உறுப்புகள்
அனைத்தும்
இயக்க ஒழுங்கு மாறாமல்
கால ஒழுங்கு மாறாமல்
தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கும் வகையில்
செயல்களைச் செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச் செயல்
அற்புதமில்லையா ? “

“நமக்கு வெளியேயும்
நமக்கு உள்ளேயும்
இதைப்போல எண்ணற்ற
அற்புதங்களை
தொடர்ந்தாற்போல்
அன்றாடம் நிகழ்த்திக்
கொண்டிருக்கும்
ஆண்டவனின் இந்தச்
செயல்கள் அனைத்தும்
அற்புதமில்லையா?”

“ஆண்டவர் தொடர்ந்து
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
இந்த அற்புதங்களோடு
இறந்தவரை எழுப்பும்
செயலை ஒப்பிடும்போது
இறந்தவரை எழுப்பும்
செயல் ஒன்றும் எனக்கு
அற்புதமாகத் தெரியவில்லை?”

மக்கள் :
“ இந்த மண்ணில் வாழ்ந்த
பலர் இறந்தவர்களை
உயிரோடு எழுப்பி
இருக்கிறார்களே!
அதைப்பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?”

“இறந்தவரை எழுப்பும்
செயல் அற்புதம்
இல்லை என்று
சொல்ல வருகிறீர்களா?”

“அற்புதம் இல்லை
என்றால் அவர்கள்
எந்த காரணத்திற்காக
இறந்தவரை
எழுப்பினார்கள்”

திருஞான சம்பந்தர் :
“அவர்கள் விதியின்
கைகளுக்குள் மாட்டிக்
கொண்டு காலத்தால்
செய்த தவிர்க்க
முடியாத செயலாகத்
தான் இருக்கும் ;
அதனை அவர்கள்
விருப்பப்பட்டு செய்து
இருக்க மாட்டார்கள் ;
சமுதாயத்தின்
வற்புறுத்தலின் பேரில் தான்
செய்து இருப்பார்கள் ;
தங்களுடைய கொள்கையை
நிலை நாட்டுவதற்காகத்
தான் செய்து
இருப்பார்களே தவிர
தாங்கள் புகழ் அடைய
வேண்டும் - செல்வாக்கு
பெற வேண்டும் - என்ற
நோக்கத்துடன் செய்து
இருக்க மாட்டார்கள் ;
சுருக்கமாகச் சொல்லப்
போனால் அவர்கள் அதை
காலத்தின் தேவை கருதித்
தான் செய்து இருப்பார்கள் ;”

“இன்னும் விளக்கமாக
சொல்ல வேண்டும் என்றால்
எஞ்சிய கர்மாவின்
தாக்குதலால் தான் ;
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டியதால் தான் ;
ஆண்டவர் இட்ட
கட்டளையை ஏற்று
செயல்படுத்தியதால் தான் ;
காலத்தின் கட்டாயம்
கருதி செயல்பட்டதால் தான் ;
சூழ்நிலையின்
அவசியம் கருதி
செயலைச் செய்ய
வேண்டி இருந்ததால் தான் ;
இறந்தவரை எழுப்பி
இருப்பார்கள் ;’

“வேறு எந்த ஒரு
காரணத்திற்காகவும்
இறந்தவரை எழுப்பும்
செயலைச் செய்து
இருக்க மாட்டார்கள் ;”

மக்கள் :
“ அப்படியானால்
இறந்தவரை எழுப்புவது
என்பது மிகப்பெரிய
செயல் என்று
நினைத்துக் கொண்டிருக்கும்
மக்களைப் பற்றி
நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்-------------------? “

திருஞான சம்பந்தர் :
“மக்கள் அனைவரும்
அப்படி நினைப்பதில்லை
மக்களில் ஒரு
சாரார் மட்டுமே
இறந்தவரை எழுப்புவது
மிகப்பெரிய செயல்
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்………………..?“

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 23-07-2019
//////////////////////////////////////////////////////////