ஜபம்-பதிவு-444
(பரம்பொருள்-196)
“நான்
அரவான் என்று
உன்னுடைய
பெயரைச் சொல்லி
ஓங்கி குரலை
எழுப்பியதும்
நீ சற்றும்
தாமதிக்காமல்
இடது கையால்
உன்னுடைய
தலையில் உள்ள
தலை முடியைப்
பிடித்துக்
கொண்டு ;
உன்னுடைய
வலது கையில்
உள்ள வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்ட வேண்டும்
; “
“வலது கையில்
உள்ள வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்டிய பிறகு
வலது கையில்
உள்ள வாளை
வானத்தைப்
பார்த்து
தூக்க வேண்டும்
வெட்டிய வாளின்
கூர்மையான
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
இருக்கவேண்டும்
“
“தலையை வெட்டி
முடித்த அதே
நேரத்தில்
இடது கையால்
தலையில் உள்ள
தலையின்
முடியைப் பிடித்து
தலையை
உடலிலிருந்து
பிரித்து எடுத்து
கையினால்
இடது பக்கம்
தலையை தூக்கி
பிடித்துக்
கொள்ள வேண்டும்
“
“இடது கையால்
தலை முடியைப்
பிடித்து
தூக்கியவாறு
வைத்துக்
கொள்ள வேண்டும்
“
“நீ உன்னுடைய
தலையை
வெட்டிய பிறகு
எப்படி இருக்க
வேண்டும் என்றால்
தலை இல்லாமல்
உடல் மட்டுமே
பூமியில் நிற்க
வேண்டும் “
“வலது கையில்
வெட்டப்பட்ட
வாளின்
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
வலது பக்கம்
இருக்க வேண்டும்
“
“வெட்டப்பட்ட
தலையில் உள்ள
முடியை இடது
கையால் தூக்கி
பிடித்த நிலையில்
வெட்டப்பட்ட
தலையானது
இடது பக்கம்
இருக்க வேண்டும்
“
“வெட்டப்பட்ட
தலையிலிருந்து
சொட்டும்
இரத்தமானது
பூமியை நனைத்தபடி
இருக்க வேண்டும்
“
“இந்த செயலைத்
தான் நீ
செய்ய வேண்டும்
“
“இதில் எந்த
ஒரு
விஷயத்தையும்
மறந்து விடக்கூடாது
“
“நான்
சொன்னவைகளை
நன்றாக மனதில்
வைத்துக் கொள்
அரவான் “
அரவான் ;
“அடுத்து என்ன
நடக்கும் “
கிருஷ்ணன்
:
“அடுத்து என்ன
நடக்கும்
என்பதைப்பற்றி
கவலைப்படாதே
அரவான் !
நீ தலையை
வெட்டிய பிறகு
என்ன நடக்கப்
போகிறது என்பதை
நீ உணர்ந்து
கொள்ளத்தான்
போகிறாய் “
“அதனால் எதைப்
பற்றியும்
கவலைப்படாதே
“
“அனைத்தையும்
நான் பார்த்துக்
கொள்கிறேன்
“
“நீ உன்னுடைய
தலையை வெட்டி
காளிதேவிக்கு
படைப்பதற்காக
தயாராகக் காத்துக்
கொண்டு
மட்டும் இரு
“
அரவான் :
“நான் தயாராக
இருக்கிறேன்
பரந்தாமா !
“
கிருஷ்ணன்
:
“சரி”
“நான் அரவான்
என்று ஓங்கி
உன்னுடைய பெயரை
கூப்பிட்டதும்
சற்றும் தாமதிக்காமல்
நான் சொன்னபடி
நீ உன்னுடைய
தலையை
வெட்ட வேண்டும்
“
“தயாராக இரு
அரவான்
தயாராக இரு
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
13-04-2020
//////////////////////////////////////////