March 07, 2020

பரம்பொருள்-பதிவு-151


           பரம்பொருள்-பதிவு-151

அரவான் :
“ஆமாம் ! நான்
பாண்டவர்கள்
சார்பாகத் தான்
களப்பலியாகப்
போகிறேன் “

“பாண்டவர்கள்
சார்பாக
களப்பலியாவதற்கு
ஒப்புதல்
கொடுக்கிறாயா என்று
நீங்கள்
என்னிடம் கேட்டு
என்னுடைய
ஒப்புதலைப்
பெற்ற போது
நான் கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“உன்னுடைய
ஒப்புதல்
மட்டும் போதாது
உன்னுடைய தாய்
தந்தை மற்றும்
உன்னுடன் இரத்த
சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் கேட்கப்
போகிறேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று
விட்டேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“ஆனால் நீங்கள்
நாளை
அமாவாசை என்று
சொன்னபோது
தான் நான்
முழுவதுமாக
தெரிந்து கொண்டேன் “

“நான்
பாண்டவர்களுக்காகத்
தான் களப்பலியாகப்
போகிறேன் என்று “

“ஏனென்றால் நாளை
அமாவாசை
கிடையாது ;
நாளை மறுநாள்
தான் அமாவாசை ;
நாளை நடைபெற
இருக்கும்
சதுர்த்தசி திதியை
அமாவாசை
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நாளை
களப்பலியாவதற்கு
தயாராக இரு
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நான் ஒன்றைத்
தெளிவாகத்
தெரிந்து கொண்டேன் “

“இந்த உலகம்
நிம்மதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக  ;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
பாண்டவர்கள்
சார்பாக
என்னை
களப்பலியாக
கொடுக்க வேண்டும்
என்பதற்காக ;
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றுவதற்குத்
தேவையான
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்பதைத்
தெரிந்து கொண்டேன் “

“அதனால் தான்
நான் சொன்னேன்
பாண்டவர்கள்
சார்பாக நான்
களப்பலியாகப்
போகிறேன் என்று “

கிருஷ்ணன் :
“அற்புதம் அரவான்
அற்புதம் “

“காலத்தை
கணிக்கக் கூடிய
உன்னுடைய
அற்புதமான
சக்தியையும் ;
தொலை நோக்குப்
பார்வையுடன்
சிந்திக்கும்
உன்னுடைய
சிந்திக்கும்
திறனையும் ;
கண்டு நான்
வியக்கிறேன் “

“இந்த உலகம்
கண்டிராத
அற்புதப் பிறவி நீ ! “

“யாராலும் கணிக்க
முடியாத அற்புத
ஞானி நீ ! “

“யாருடனும் ஒப்பிட
முடியாத
அற்புதமானவன் நீ ! “

“நீ செய்யப் போகும்
தியாக செயலுக்கு
நீ கேட்ட படி
நான் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்கிறேன் “

“கேள் அரவான் கேள் “

“உன்னுடைய
இரண்டு
வரங்களைக் கேள் “

“உனக்கு
என்ன வரம்
வேண்டும் கேள் “

“கேள் அரவான் கேள்”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-03-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-150


            பரம்பொருள்-பதிவு-150

(அரவானுடைய
மாளிகைக்குள்
கிருஷ்ணன் நுழைகிறார் ;
கிருஷ்ணனைக்
கண்டவுடன் அரவான்
ஓடோடி வந்து
கிருஷ்ணனுடைய காலில்
விழுந்து வணங்குகிறான்)

அரவான் :
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா ! "

கிருஷ்ணன் :
"நீ செய்யப் போகும்
தியாகத்திற்கு
என்னுடைய ஆசிகள்
உனக்கு என்றுமே
உண்டு அரவான்"

அரவான் :
"அமருங்கள் பரந்தாமா"! "

(இருக்கையில் அமர்ந்த
கிருஷ்ணன் அரவானைப்
பார்த்து பேசத்
தொடங்குகிறார் )

கிருஷ்ணன்  :
"ஒரு முக்கியமான
விஷயத்தை உன்னிடம்
சொல்வதற்காகவே
வந்தேன் அரவான் "

அரவான் :
"சொல்லுங்கள் பரந்தாமா "

கிருஷ்ணன் :
"பாண்டவர்கள் சார்பாக
உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன்னுடைய தாய்
தந்தை மற்றும் உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று விட்டேன் ;
அது மட்டுமல்ல
நாளை அமாவாசை
என்பதை உனக்கு
ஞாபகப் படுத்தி விட்டு
செல்லலாம் என்று வந்தேன் ; "

"அது மட்டுமல்ல
துரியோதனன்
வரவில்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
களப்பலியாவதற்கு
நீ தயாராக இருக்கிறாயா
என்பதைக் கேட்டு விட்டு
செல்லலாம் என்று வந்தேன் "

"அது மட்டுமல்ல
நீ என்னிடம் ஏதேனும்
கேட்க விரும்புகிறாயா
என்பதைக் கேட்டு
விட்டு செல்லலாம்
என்று வந்தேன் "

"சொல் அரவான் சொல்
என்னிடம் ஏதேனும்
கேட்க விரும்புகிறாயா?"

அரவான்  :
"ஆமாம் "

"எனக்கென்று சில
ஆசைகள் இருக்கிறது "

"அது என்னுடைய
மனதிற்குள் இருக்கிறது "

"அந்த ஆசைகளை
நிறைவேற்ற வேண்டும்
என்ற எண்ணம்
எனக்கு இருக்கிறது "

"தாங்கள் எனக்கு இரண்டு
வரங்களை அளித்தால்
என்னுடைய மனதிற்குள்
நான் வைத்திருக்கும்
என்னுடைய ஆசைகள்
நிறைவேறும் "

"தாங்கள் எனக்கு இரண்டு
வரங்களை அளிப்பீர்களா ? '

கிருஷ்ணன்  :
"உன்னை களப்பலியாக
கேட்டு வந்த
துரியோதனனிடம் இரண்டு
வரங்களைக் கேட்டாயா ? "

அரவான்  :
"கேட்கவில்லை "

கிருஷ்ணன்  :
"துரியோதனனிடம்
கேட்காத போது
என்னிடம் மட்டும் ஏன்
இரண்டு வரங்கள்
கேட்கிறாய்?"

"நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"எதற்காக
அளிக்க வேண்டும்  "

"எந்தவிதமான போட்டியும்
இல்லாமல் பாண்டவர்கள்
சார்பாக மட்டும் - நீ
களப்பலியானால் - நீ
கேட்கப் போகும்
இரண்டு வரங்களை
உனக்கு அளிக்கலாம் "

"அமாவாசை தினத்தன்று
துரியோதனன் வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்கள் சார்பாக
நீ களப்பலியாவாய் ;
துரியோதனன் வந்து
விட்டால் நீ
துரியோதனனுக்காகத்
தானே களப்பலியாக
முடியும் ; "

"அப்படி இருக்கும் போது
நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"நான் உனக்கு இரண்டு
வரங்களைத் தந்த பிறகு
நீ துரியோதனனுக்காக
களப்பலியானால் நான்
உனக்கு தந்த இரண்டு
வரங்கள் வீணாகிப் போகாதா ? "

"எதையுமே நிச்சயித்து
சொல்ல முடியாத
நிலையில் இருக்கும் போது
நான் ஏன் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும்

அரவான்  :
"தாங்கள் தான் எனக்கு
இரண்டு வரங்களை
அளிக்க வேண்டும் ? "

"ஏனென்றால் நான்
தங்களுடைய
வேண்டுகோளுக்கிணங்கத்
தானே களப்பலியாகப்
போகிறேன் "

"ஏனென்றால் நான்
பாண்டவர்கள் சார்பாகத்
தானே களப்பலியாகப்
போகிறேன் "

கிருஷ்ணன்  :
"என்னது நீ பாண்டவர்கள்
சார்பாக களப்பலியாகப்
போகிறாயா  ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-03-2020
//////////////////////////////////////////