April 07, 2021

பதிவு-4 - ஊரார்-பழமொழி

 

பதிவு-4 - ஊரார்

பழமொழி

 

என்னிடம் வந்த

அந்த அம்மா தம்பி

எனக்கு உடம்பு

சரியில்லை

மயக்கமாக

இருக்கிறது

உட்காருவதற்கு

நீயாவது இடம்

கொடுப்பாயா

என்று கேட்டார்..

நான் எழுந்து

உட்கார்த்து

கொள்ளுங்கள்

என்று என்னுடைய

இருக்கையை

அவரிடம் கொடுத்தேன்

அவரும் நான்

கொடுத்த என்னுடைய

இருக்கையில்

அமர்ந்து கொண்டார்

 

இக்காட்சியைக்

கண்ட என்னுடைய

நண்பன் கோபத்தில்

இருந்தான் - அவன்

கோபத்தில் இருந்தது

அவனுடைய முகத்தைப்

பார்த்த போதே

தெரிந்தது

 

நான் நீண்ட நேரம்

நின்று கொண்டு

வந்தேன்.

எனக்கு உடல்நிலை

சரியில்லாத

காரணத்தினால்

என்னால் நிற்க

முடியவில்லை

இருந்தாலும் நான்

சமாளித்து நின்று

கொண்டு வந்தேன்

 

பேருந்தை விட்டு

இறங்கும் இடம்

வந்ததும் நானும்

என்னுடைய நண்பனும்

இறங்கினோம்

என்னுடைய நண்பன்

என்னிடம் கோபம்

கொண்டு உனக்கு தான்

உடம்பு சரியில்லை

அல்லவா

ஏன் உன்னுடைய

இருக்கையை கொடுத்து

எழுந்து நின்றாய்

என்று கேட்டான்

 

நண்பா நான்

சென்னையில்

இருக்கிறேன்

என்னுடைய அம்மா

தென்காசியில்

தனியாக இருக்கிறார்

அப்பா இறந்ததிலிருந்து

அம்மா தென்காசியில்

தனியாகத் தான்

இருக்கிறார்,

 

என்னுடைய அம்மா

தென்காசியில்

முக்கிய விஷயமாக

பேருந்தில்

செல்லும் போது

நிற்க முடியாமல்

உட்காருவதற்கு

யாரிடமாவது

இருக்கை கேட்கக்

கூடிய நிலை

வந்தால்

நான் செய்த

புண்ணியத்தின்

பலனானது

அதாவது என்னிடம்

உட்காருவதற்கு

இடம் கேட்ட

அந்த அம்மாவிற்கு

நான் என்னுடைய

இருக்கையைக்

கொடுத்து

உதவி செய்ததின்

மூலம் உண்டான

புண்ணியத்தின்

பலனானது

என்னுடைய

அம்மாவை

காப்பாற்றும்

 

அதாவது

யாராவது என்னுடைய

அம்மாவிற்கு

உட்காருவதற்கு

இடம் கொடுத்து

உதவுவார்கள் என்ற

காரணத்தினால் தான்

நான் அந்த

அம்மாவிற்கு

உட்காருவதற்கு 

என்னுடைய

இருக்கையைக்

கொடுத்தேன்

என்றேன்

 

இது தான் ஊரார்

பிள்ளையை ஊட்டி

வளர்த்தால் தன்

பிள்ளை தானே

வளரும் என்பதற்கான

அர்த்தம்

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

 

 

பதிவு-3 - ஊரார்-பழமொழி

 

பதிவு-3 - ஊரார்

பழமொழி

 

ஊரார் பிள்ளை என்று

சொல்லப்படும்

இந்த உலகத்தில்

வாழ்ந்து

கொண்டிருக்கும்

மனிதர்களில்

யாருக்கு என்ன

உதவி தேவையோ

அந்த உதவியை

அவர்களுக்கு

செய்வதின் மூலம்

கிடைக்கும்

புண்ணியமானது

தன் பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

தன்னைச்

சார்ந்தவர்களான

தந்தை தாய்

சகோதரன் சகோதரி

கணவன் மனைவி

குழந்தை என்று

இவர்களில் யாருக்கு

வேண்டுமானாலும்

அந்த புண்ணியத்தின்

பலன் சென்று சேர்ந்து

அவர்களின் வாழ்வின்

தரத்தை உயர்த்தும்

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை தானே

வளரும் என்ற

பழமொழிக்கு அர்த்தம்

 

வெளிநாடு சென்று

வேலை செய்தால்

மட்டுமே தன்னுடைய

குடும்பத்தின் கடனை

அடைக்க முடியும்

தன்னுடைய

குடும்பத்தை

காப்பாற்ற முடியும்

என்ற சூழ்நிலை

வரும் போது

தன்னுடைய

மனைவியையும்

தன்னுடைய

கைக்குழந்தையையும்

தனியே இந்தியாவில்

விட்டு விட்டு

அமெரிக்கா

செல்கிறான் கணவன்

 

அமேரிக்காவில்

வேலை செய்து

கொண்டிருக்கும்

கணவன் ஊரார்

பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

அந்த நாட்டில்

வாழும் மக்களில் உதவி

தேவைப்படுபவர்களுக்கு

உதவிகள்

செய்யும் போது

செய்த உதவியின்

மூலம் கிடைத்த

புண்ணியத்தின்

பலனானது தன்

பிள்ளை என்று

சொல்லப்படக்கூடிய

தன்னுடைய

மனைவிக்கும்

குழந்தைக்கும்

வாழும் வாழ்க்கைக்கு

பாதுகாப்பாக

இருப்பதோடு

வாழ்வின் தரத்தை

உயர்த்துவதற்கு

ஒரு வழியாகவும்

இருக்கும்

 

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

என்பதற்கான

அர்த்தம்

 

இந்த உண்மைக்

கதையையும்

கேளுங்கள்

 

எனக்கு உடல்நிலை

சரியில்லாத நிலை 

ஒரு நாள்

ஏற்பட்ட போது

கண்டிப்பாக

ஒருவரை பார்த்தே

ஆக வேண்டும்

என்பதை தவிர்க்க

முடியாத நான்

எனக்கு என்றும்

துணையாக இருக்கும்

என்னுடைய நண்பனை

அழைத்துக் கொண்டு

பேருந்தில் பயணம்

செய்ய முடிவு

எடுத்தேன்

 

நீண்ட தூரம் பயணம்

செய்ய வேண்டி

இருந்ததால்

பேருந்தில் ஏறி

இருவருக்கும்

இருக்கை இருக்கிறதா

என்று பார்த்தபோது

ஒரு இருக்கை

மட்டுமே காலியாக

இருந்தது - அந்த

இருக்கையை பார்த்ததும்

என்னுடைய நண்பன்

என்னை அந்த

இருக்கையில்

அமரவைத்து விட்டு

அவன் நின்று

கொண்டான்

நான் ஜன்னல்

அருகில்

அமர்ந்திருந்தவரின்

அருகில் அமர்ந்து

கொண்டேன்

 

உடல் வலி

கால்வலி

ஆகியவற்றால்

அவதிப்பட்டு

நோயின் தாக்குதலால்

தாக்கப்பட்ட நான்

வேதனையுடன்

அமர்ந்து

கொண்டிருந்தேன்

அந்த நேரம் பார்த்து

ஒரு அம்மா

அந்த பேருந்தில்

அமர்ந்து

இருந்தவர்களிடம்

அவர் உட்காருவதற்காக

அந்த பேருந்தில்

இருந்த பலரிடம்

இடம் கேட்டுக்

கொண்டிருந்தார்

யாரும் அந்த

அம்மாவிற்கு

உட்காருவதற்கு இடம் 

கொடுக்கவில்லை.

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

பதிவு-2 - ஊரார்-பழமொழி

 

பதிவு-2 - ஊரார்

பழமொழி

 

முதலில் தங்கி

இருக்கும் வீட்டை

விட்டு வெளியே வந்து

இந்த பரந்த

உலகத்தைப் பாருங்கள்

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

அற்புதமான

காட்சியையும் பாருங்கள்.

இந்த உலகத்தில்

பரந்து வாழும்

பல்வேறு தன்மை

கொண்ட மனிதர்கள்

அனைவரையும்

உற்று பாருங்கள் 

 

உயர்ந்தவர் தாழ்ந்தவர்

ஏழை பணக்காரர்

படித்தவர் படிக்காதவர்

என்ற பேதம் நீக்கி

அனைவரையும்

மனிதர்கள்

என்ற நிலையில்

ஆண் பெண் திருநர்

என்ற வார்த்தைக்குள்

அடக்கிக் கொண்டு

பாருங்கள்

அப்பொழுது

தான் தெரியும்

இவர்கள் அனைவருமே

வேறு ஒருவர் பெற்ற

பிள்ளைகள் என்று.

அதாவது

ஊரார் பெற்ற

பிள்ளைகள் என்று.

ஆமாம்

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கக்கூடிய

இவர்கள் தான்

ஊரார் பெற்ற

பிள்ளைகள்

 

ஊரார் பிள்ளை

என்றால்

தன்னுடைய மனைவி

என்று சுயநலத்துடன்

குறுகிய எல்லைக்குள்

நின்று பொருள்

கொள்ளக்கூடாது.

 

ஊரார் பிள்ளை

என்றால்

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கக் கூடிய

மனிதர்கள்

என்று பொருள்

கொள்ள வேண்டும்.

 

தன் பிள்ளை என்றால்

தன்னுடைய பிள்ளை

என்று சுயநலத்துடன்

குறுகிய எல்லையில்

நின்று பொருள்

கொள்ளக் கூடாது. 

 

தன்னுடைய பிள்ளை

என்றால் தன்னைச்

சார்ந்தவர்கள்

என்று பொருள்

கொள்ள வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்கள்

என்றால் அது

தந்தையாக இருக்கலாம்

தாயாக இருக்கலாம்

சகோதரனாக இருக்கலாம்

சகோதரியாக இருக்கலாம்

கணவனாக இருக்கலாம்

மனைவியாக இருக்கலாம்

குழந்தையாக இருக்கலாம்

 

ஊட்டி வளர்த்தால்

என்றால்

உணவை ஊட்டி

வளர்ப்பது

என்று பொருள்

கொள்ளக்கூடாது.

 

ஊட்டி வளர்த்தால்

என்றால்

யார் ஒருவருக்கு

எந்த ஒன்றை

கொடுத்தால்

அவர் வாழ்க்கையில்

வளர்வாரோ

அந்த ஒன்றை

அவருக்கு கொடுத்து

அவர் வாழ்க்கையில்

உயர்வதற்கு தேவையான

உதவிகள் செய்ய

வேண்டும் என்று பொருள்

 

அதாவது ஒருவர்

கல்வி கற்க

விரும்பினால்

அந்த கல்வியை

அவருக்கு கற்றுக்

கொடுத்து அவர்

வாழ்க்கையில்

உயர்வதற்கு

தேவையான

செயல்களைச் செய்வது

 

ஒருவர் வியாபாரத்தில்

நஷ்டம் அடைந்தால்

அவருக்குத் தேவையான

பொருளுதவி செய்து

அவர் வாழ்க்கையில்

உயர்வதற்கு

தேவையான

செயல்களைச் செய்வது

 

ஒருவர் ஆன்மீகத்தில்

உயர் நிலை அடைய

முயற்சி செய்தால்

அவருக்கு

தேவையானதைச்

சொல்லிக் கொடுத்து

அவர் ஆன்மீகத்தில்

உயர்வதறகுத்

தேவையான

உதவிகளைச் செய்வது..

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

 

பதிவு-1 - ஊரார்-பழமொழி

 பதிவு-1 - ஊரார்

பழமொழி

 

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

 

-----பழமொழி

 

வேறு ஒருவர்

வீட்டில் பிறந்து

வளர்ந்து

திருமணம் செய்து

தனக்கு மனைவியாக

வந்த பெண் என்ற

காரணத்தினால்

அந்த பெண்ணை

ஊரார் பெண்.

என்று சொன்னார்கள்

 

மனைவியாக வந்த

அந்த பெண்ணை

தன்னுடைய

பராமரிப்பில் வைத்து

ஊட்டி வளர்க்கும் போது

அந்த பெண்ணின்

வயிற்றில் வளரும்

தன்னுடைய

குழந்தையானது

தானே வளரும்

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

என்பதற்கு

சொல்லப்பட்ட

அர்த்தம்

 

இவ்வாறு சொல்லப்பட்ட

அர்த்தத்தை சிந்தித்து

நோக்கும் போது

நமக்குள் பல்வேறு

கேள்விகள் எழுந்த

வண்ணம் இருக்கிறது.

 

தன்னுடைய மனைவியின்

வயிற்றில் வளரும்

குழந்தை தன்னுடைய

குழந்தை என்றால்

தன்னுடைய மனைவிக்கு

அந்த குழந்தையின்

மீது உரிமை

உண்டா இல்லையா

என்ற கேள்வி எழுகிறது.

 

தன்னுடைய மனைவியின்

வயிற்றில் தன்னுடைய

குழந்தை வளர

வேண்டும் என்ற

காரணத்திற்காக

மட்டும் தான்

தன்னுடைய

மனைவியை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

என்ற கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய

குழந்தையை சுமக்கவில்லை

என்றால் தன்னுடைய

மனைவிக்குத்

தேவையான உணவை

ஊட்டி வளர்க்க

வேண்டுமா அல்லது

வேண்டாமா என்ற

கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தையை

சுமக்கும் காலங்களைத்

தவிர்த்து தன்னுடைய

குழந்தையை சுமக்காத

காலங்களில் எல்லாம்

தன்னுடைய மனைவிக்குத்

தேவையான உணவை

ஊட்டி வளர்க்க

வேண்டுமா அல்லது

வேண்டாமா என்ற

கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

கர்ப்பமே தரிக்கவில்லை

என்றால் தன்னுடைய

மனைவிக்குத் தேவையான

உணவை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

அல்லது வேண்டாமா

என்ற கேள்வி எழுகிறது

 

எளிமையாக சொல்ல

வேண்டும் என்றால்

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தையை

சுமக்கும் காலங்களில்

மட்டும் தான்

தன்னுடைய மனைவிக்குத்

தேவையான

உணவை அளித்து

தன்னுடைய மனைவியை

ஊட்டி வளர்க்க

வேண்டும்

மற்ற காலங்களில்

எல்லாம் தன்னுடைய

மனைவிக்கு தேவையான

உணவை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

அல்லது வேண்டாமா

என்று கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தை

ஆகியோரை மட்டும்

காப்பாற்றும் வகையில்

செயல்பட வேண்டும்

என்று சுயநலத்தை

வலியுறுத்தி இப்பழமொழி

சொல்லப்படவில்லை.

 

இந்தப் பழமொழியின்

அர்த்தம் தன்னுடைய

மனைவி தன்னுடைய

குழந்தை என்று

சுயநல நோக்கத்துடன்

செயல்படுபவர்களுக்காகவும்

சுயநலத்துடன்

வாழ்பவர்களுக்காகவும்

சொல்லப்பட்டவில்லை.

 

இந்த பழமொழி

பொதுநலத்துடன்

செயல்படும்போது

ஏற்படும் நல்ல

நிகழ்வுகளைப்

பற்றி சொல்கிறது.

 

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////