ஜபம்-பதிவு-455
(பரம்பொருள்-207)
“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நன்றாக வாழ
வேண்டும்
என்பதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்தவன்
அரவான்”
“அதனால் தான்
நான் சொல்கிறேன்
களப்பலியான
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்து
உயிர்த்தெழ செய்யும்
உயிர்த்தெழுதல்
இது வரை
யாரும் செய்யாத
உயிர்த்தெழுதல் ;
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதல்”
“இதுவரை
யாரும் செய்யாத
இனியும் யாரும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதலை
இப்போது செய்யப்
போகிறேன்”
“இப்போது
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுக்கப் போகிறேன் “
(என்று சொல்லிக்
கொண்டே கிருஷ்ணன்
அரவானுடைய
தலையைப்
பிடித்துக் கொண்டு
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுத்தார் )
கிருஷ்ணன் :
“அரவான் மெதுவாக
உன்னுடைய கண்களைத்
திறந்து பார்”
(அரவானுடைய
தலை
உயிர் பெற்றது
அரவான் மெதுவாக
கண்களைத் திறந்தான் ;
இந்த உலகத்தைப்
பார்த்தான் ;
தன் முன்னால்
நின்று கொண்டிருந்த
கிருஷ்ணனையும்
பஞ்ச
பாண்டவர்களையும்
தன்னுடைய
கண்களால் பார்த்தான் ; )
அரவான் :
“உங்கள்
அனைவரையும்
என்னுடைய
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன் ;
என்னுடைய
வணக்கத்தை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளுங்கள் ; “
(அனைவரும்
அரவானுக்கு வணக்கம்
செலுத்துகின்றனர் )
கிருஷ்ணன் :
“என்ன தெரிகிறது
அரவான் “
அரவான் :
“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள ஒவ்வொரு
பொருளிலும்
நீங்கள் இருப்பது
தெரிகிறது பரந்தாமா “
கிருஷ்ணன் :
“வேறு என்ன
தெரிகிறது அரவான் ? “
அரவான் :
“உங்களுக்குள் இந்த
பிரபஞ்சமே இருப்பது
தெரிகிறது பரந்தாமா “
கிருஷ்ணன் :
“ஞானம் என்பது
உனக்குள்
பிறந்திருக்கிறது ;
ஆன்மீகத்தின் மிக
முக்கியமான
வாயிலை நீ
இப்போது
கடந்திருக்கிறாய் ;
அதனால் தான்
பிரபஞ்ச ரகசியங்கள்
அனைத்தும் உனக்கு
தெரிய ஆரம்பித்து
இருக்கிறது “
“இன்னும் பல
விஷயங்களை
உனக்கு
வழங்குவதற்காக
இந்த உலகமே காத்துக்
கொண்டிருக்கிறது “
“அதற்கு அடித்தளம்
அமைக்கும் விதத்தில்
நீ கேட்டபடி
நடக்கப்போகும்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பதற்கு
வசதியாக
உன்னுடைய
தலையை இங்கே
கொண்டு வந்து
இந்த கம்பத்தில்
உன்னுடைய
தலையைப் பொருத்தி
வைத்திருக்கிறேன் “
“குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும் இடம்
முழுவதையும்
இப்போது உன்னுடைய
கண்ணால் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்”
“குருஷேத்திரப் போர்
நடக்கும் போது நீ
அனைத்தையும்
பார்க்கப்
போகிறாய்”
“குருஷேத்திரப்போர்
முழுவதையும்
பார்க்கக்கூடிய
பாக்கியம் உனக்குக்
கிடைத்திருக்கிறது “
----------- ஜபம் இன்னும்
வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////