November 28, 2022

சூழ்ச்சி முடிவு - பதிவு-4 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-4

திருக்குறள்

 

நாளை உங்களுக்கும்

என்னுடைய

கணவருக்கும்

இடையே நடக்கும்

போரில் நீங்கள்

என்னுடைய கணவரை

கைது செய்யுங்கள்

 

ஆனால்

கொல்லக்கூடாது

என்னுடைய கணவரைக்

கொல்ல மாட்டேன்

என்ற வாக்குறுதியை

மட்டும் எனக்கு

அளியுங்கள்

அது போதும்

என்றாள்

ரோக்ஸானா

 

நான் எப்போது

உங்களை

என்னுடைய

தங்கையாக ஏற்றுக்

கொண்டேனோ

அப்போதே

உங்கள் கணவரான

அலெக்ஸாண்டர்

எனக்கு

தங்கையின் கணவர்

ஆகி விட்டார்

 

தங்கையின்

கணவரை

எப்படி நான்

கொல்வேன்

 

நாளை நடக்கும்

போரில்

அலெக்ஸாண்டரை

நான் கைது

செய்வேன்

ஆனால் கொல்ல

மாட்டேன் என்ற

வாக்குறுதியை

உங்களுக்கு

அளிக்கிறேன்

என்றார் போரஸ்

 

மறுநாள்

அலெக்ஸாண்டருக்கும்

போரஸுக்கும் இடையே

பயங்கரமான

போர் நடைபெற்றுக்

கொண்டிருந்தது

ஒரு கட்டத்தில்

அலெக்ஸாண்டரின்

குதிரையான

பியூசிபேலஸை

நோக்கி போரஸ்

தனது ஈட்டியை

எறிந்தான்

கீழே விழுந்த

பியூசிபேலஸ்

குதிரையானது

துடி துடித்து

இறந்தது

 

அலெக்ஸாண்டர்

தன்னுடைய

உயிரையே

வைத்திருந்த

அலெக்சாண்டரின்

குதிரையான

பியூசிபேலஸ்

இறந்தது

இந்தப்

போரில் தான்

 

பியூசிபேலஸ்

குதிரையின்

மேல் அமர்ந்து

கொண்டு இருந்த

அலெக்ஸாண்டர்

குதிரையின்

மீதிருந்து

கிழே விழுந்தான்

 

அலெக்ஸாண்டர்

அருகில் வந்த

போரஸ்

அலெக்ஸாண்டரின்

தலையை வெட்டி

கொல்வதற்காக

வாளை

ஓங்கும் போது

தன்னுடைய

மணிக்கட்டுப்

பகுதியில்

கட்டப்பட்டிருந்த

கயிறைக்

கவனித்தான்

 

அலெக்ஸாண்டர்

மனைவி

ரோக்ஸானாவுக்கு

கொடுத்த வாக்குறுதி

நினைவில் வந்ததால்

அலெக்ஸாண்டரைக்

கொல்லாமல்

வாளைக் கீழே

இறக்கினான்

போரஸ்

 

ஏன் ஓங்கிய

வாளை கீழே

இறக்கி விட்டாய்

எதற்காக

தடுமாறுகிறாய்

என்னைக் கொன்று

உன்னுடைய

பகை உணர்ச்சியைத்

தீர்த்துக் கொள்

என்றான்

அலெக்ஸாண்டர்

 

நாங்கள் வாக்கு

கொடுத்து விட்டால்

அதை உயிரைக்

கொடுத்தாவது

நிறைவேற்றுவோம்

கொடுத்த

வாக்கை விட

பெரியதாக

நாங்கள் எதையுமே

நினைப்பதில்லை

எங்களுக்கு

கொடுத்த வாக்கு

தான் முக்கியம்

அதற்காக நாங்கள்

எது

வேண்டுமானாலும்

செய்வோம்

 

நான் உன்னுடைய

மனைவி

ரோக்ஸானாவுக்கு

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

என்னுடைய

தங்கையாக

ஏற்றுக் கொண்டதால்

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

உன்னைக் கொல்ல

மாட்டேன்

கைது மட்டுமே

செய்வேன் என்று

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

கொடுத்த வாக்கை

என்றுமே நாங்கள்

மீறியதில்லை

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

 

சூழ்ச்சி முடிவு - பதிவு-3 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-3

திருக்குறள்

 

நேர் வழியைப்

பின்பற்றி போரஸுடன்

போர் செய்தால்

வெற்றி பெற

முடியாது

சூழ்ச்சி செய்தால்

மட்டுமே வெற்றி

பெற முடியும்

என்பதைத்

தெரிந்து கொண்ட

அலெக்ஸாண்டர்

சூழ்ச்சி செய்து

வெற்றி பெற

நினைத்து

தன் மனைவி

ரோக்ஸானாவை

போரஸிடம்

அனுப்பி

வைத்து விட்டு

தான் மட்டும்

மறு கரையில்

நின்று கொண்டான்

 

தன்னை சந்திக்க

அலெக்ஸாண்டரின்

மனைவி வருகிறார்

என்ற செய்தியைக்

கேட்ட போரஸ்

எதிரியாக இருந்தாலும்

அலெக்ஸாண்டரின்

மனைவி ஒரு அரசி

எனவே ஒரு

அரசிக்குரிய

அனைத்து

மரியாதையை

அவருக்குக் கொடுத்து

அழைத்து வாருங்கள்

என்று

கட்டளையிட்டான்

 

போரஸின்

உத்தரவுப்படியே

அரசிக்குரிய

அனைத்து

மரியாதைகளுடன்

அலெக்ஸாண்டரின்

மனைவி ரோக்ஸானா

அழைத்து

வரப்பாட்டார்

 

அதுமட்டுமில்லை

போரஸ் தனக்கு

சமமான ஒரு

இருக்கையில்

அலெக்ஸாண்டரின்

மனைவி

ரோக்ஸானாவை

அமரச் செய்தான்

 

போரஸைச் சந்திக்க

ரோக்ஸானா வந்தவுடன்

இருவரையும்

தனிமையில்

சந்திக்க வைத்து

விட்டு அனைவரும்

அந்த இடத்தை

விட்டுச் சென்று

விட்டனர்

 

உங்கள் நாட்டில்

ஒரு வினோத

பழக்கம் இருக்கிறது

என்று

கேள்விப்பட்டேன்

தங்கைகள் தன்னுடைய

அண்ணனுக்கு கைகளில்

ஒரு கயிறு

கட்டுகின்றனர்

உங்களை நான்

என்னுடைய

அண்ணனாக

நினைக்கிறேன்

நீங்களும்

என்னை

உங்களுடைய

தங்கையாக

ஏற்றுக் கொள்வீர்களா

நீங்கள் என்னை

உங்களுடைய

தங்கையாக

ஏற்றுக் கொண்டால்

இந்தக் கயிறை

உங்கள் கைகளில்

நான் கட்டுகிறேன்

என்றாள்

ரோக்ஸானா

 

உங்களை நான்

என்னுடைய

தங்கையாக

ஏற்றுக் கொள்வதில்

எனக்கு எந்தவிதமான

தடையும் இல்லை

உங்களை நான்

என்னுடைய

தங்கையாக

ஏற்றுக் கொள்கிறேன்

 

நீங்கள் தாராளமாக

என்னுடைய கையில்

கயிறைக் கட்டலாம்

அந்தக் கயிறைக்

கட்டுங்கள்

என்றான்

போரஸ்

 

கையில் கயிறைக்

கட்டினால்

அது வாக்குறுதியின்

அடையாளம் ஆயிற்றே

நீங்கள் எனக்கு

ஒரு வாக்குறுதி

அளிக்க வேண்டுமே

என்றாள்

ரோக்ஸானா

 

உங்களை

நான் தங்கையாக

ஏற்றுக் கொள்ள

முடிவு எடுத்து

விட்ட பிறகு

நீங்கள் என்ன

சொல்கிறீர்களோ

அதை நான்

செய்கிறேன்

 

உங்களுக்கு

நான் என்ன

செய்ய வேண்டும்

என்ன

வாக்குறுதியை

அளிக்க வேண்டும்

என்றான் போரஸ்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

சூழ்ச்சி முடிவு - பதிவு-2 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-2

திருக்குறள்

 

உலகத்தையே தன்

காலடியில் கொண்டு

வர வேண்டும் என்று

இரத்த வெறி பிடித்து

அலைந்து

கொண்டிருந்த

அலெக்ஸாண்டரை

எதிர்த்து நின்று

போராடி

அலெக்ஸாண்டருக்கே

மரணபயத்தைக்

காட்டிய

போரஸ் தான்

மாவீரன்

என்று சொல்லுக்குத்

தகுதி உடையவர்

 

அலெக்ஸாண்டர்

கிரேக்கத்தில்

மாசிடோனியா

பகுதியை ஆண்டவர்

போரஸ் என்ற

புருஷோத்தமன்

இந்தியாவில் பஞ்சாப்

பகுதிகளை ஆண்டவர்

அலெக்ஸாண்டருக்கும்

போரஸ் என்ற

புருஷோத்தமனுக்கும்

கி.மு.326-ஆம் ஆண்டு

ஜீலம் நதிக்கரையில்

ஹைடாஸ்பேஸ்

என்னுமிடத்தில்

போர் நடைபெற்றது

 

போர் என்றால்

அப்படி ஒரு போர்

உக்கிரமான போர்

யாரும் நினைத்து கூட

பார்க்க முடியாத போர்

அலெக்ஸாண்டர் தன்

வாழ்நாளில்

சந்தித்திராத போர்

அலெக்ஸாண்டருக்கு

மரண பயத்தைக்

காட்டிய போர்

அலெக்ஸாண்டர்

மரணத்தின் வாசலை

தொட்டு விட்டு

வந்த போர்

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

மரண பயத்தால்

அலறித் துடித்த

போர்

 

இந்தப் போரில் தான்

அலெக்ஸாண்டரும்

அவருடைய

படை வீரர்களும்

முதன் முதலாக

யானைப் படையைக்

கண்டு மிரண்டனர் 

யானைப் படையுடன்

போர் செய்வதற்கு

பயந்தனர்

 

போரஸின் படையில்

200 போர் யானைகள்

இருந்தன அவைகள்

சாதாரண யானைகள்

கிடையாது

 

போர்ப் பயிற்சி பெற்ற

யானைகள் ஒரு

யானையைப்

பழக்குவது

அவ்வளவு எளிதான

காரியம் கிடையாது

ஒரு யானையைப்

பழக்குவதற்கு

குறைந்தது

பத்து முதல்

பதினைந்து

ஆண்டுகள் ஆகும்

 

போரஸின் படையில்

இருந்த ஒவ்வொரு

யானைக்கும் ஒரு

பெயர் உண்டு

அந்த யானையின்

பெயரைச் சொல்லியோ

கையை அடித்தோ

விசில் அடித்தோ

என்ன வேலையைச்

செய்யச்

சொல்கிறோமோ

அந்த வேலையை

அப்படியே செய்யும்

வகையில்

பழக்கப்பட்டிருந்தன

அந்த யானைகள்

 

யானைப் படையைத்

தோற்கடிக்கும்

வழி தெரியாத

அலெக்ஸாண்டரும்

அவருடைய

படை வீரர்களும்

போர் செய்யவே

பயந்தனர்

 

தன்னிடம் அடிபணிந்த

தட்ச சீலம் அம்பியிடம்

யானைப் படையைத்

தோற்கடிக்கும் வழியைத்

தெரிந்து கொண்ட

அலெக்ஸாண்டர்

யானையின்

தும்பிக்கையை

வெட்டினான்

 

யானையின் கால்களில்

காயங்களை

ஏற்படுத்தினான்

யானைகளைப்

போரிடாமல்

செய்து அவைகளைக்

கொன்றான்

 

யானைகளை மட்டும்

அல்ல மக்களையும்

கொன்று குவித்தான்

அலெக்ஸாண்டர்

இதனால் ஜீலம் நதி

இரத்த சிவப்பாக

மாறி ஓடியது

 

இருந்தாலும்

அலெக்ஸாண்டர்

போரஸுடன்

நேருக்கு நேராக

நின்று போர்

செய்யவில்லை

மறைந்து மறைந்து

போர் செய்தான்

கோழையைப் போல்

போரஸுக்கு பின்னால்

மறைந்து நின்று

போர் செய்தான்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

சூழ்ச்சி முடிவு - பதிவு-1 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-1

திருக்குறள்

 

சூழ்ச்சி முடிவு

துணிவெய்தல்

அத்துணிவு

தாழ்ச்சியுள்

தங்குதல் தீது

 

திருக்குறள்—671

 

ஆராய்ந்து

எண்ணுவதற்கு

எல்லை துணிவு

கொள்வதே ஆகும்.

அவ்வாறு

கொண்ட துணிவு

காலந் தாழ்த்து

நிற்பது குற்றமாகும்

என்று

இத்திருக்குறளுக்கு

பொதுவாக விளக்கம்

சொல்லப்படுகிறது.

 

சூழ்ச்சி செய்தால்

தான் ஒரு

செயலில் வெற்றி

பெற முடியும்

என்றால்,

சூழ்ச்சி

செய்வதற்கான

சந்தர்ப்பத்திற்காகக்

காத்திருந்து

அந்த சந்தர்ப்பம்

வரும் போது

கால தாமதம்

செய்யாமல் வந்த

சந்தர்ப்பத்தைப்

பயன்படுத்தி

சூழ்ச்சி செய்தால்

வெற்றி பெற

முடியும் என்று

இத்திருக்குறளுக்கு

தெளிவாக

விளக்கம்

சொல்லலாம்.

மாவீரன் என்றால்

தன் நாட்டின்

மீது படை

எடுத்து வந்த

எதிரியை போர்

செய்து புறமுதுகு

காட்டி ஓட

வைப்பவனும்

எதிரிப் படையுடன்

போர் செய்து தன்

நாட்டுக்காக

போரில்

இறப்பவனும் தான்

மாவீரன் என்று

சொல்ல முடியும்

 

அலெக்ஸாண்டர்

நாடு பிடிக்கும்

ஆசையில் பல்வேறு

நாடுகளின் மேல்

படை எடுத்தவன்.

 

மக்களை இரக்கமின்றி

கொன்று குவித்தவன்.

நாட்டில் இரத்த

ஆற்றை அல்ல

கடலையே

ஓட விட்டவன்

நாட்டில் உள்ள

வளங்களை

எல்லாம் அழித்தவன்

நாட்டில் உள்ள

செல்வ வளங்களை

எல்லாம் கொள்ளை

அடித்தவன்

அப்படிப்பட்ட

அலெக்ஸாண்டரை

எப்படி மாவீரன்

என்று

சொல்ல முடியும்

 

கிரேக்கத்தில்

உள்ளவர்கள்

வேண்டுமானாலும்

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

சொல்லிக்

கொள்ளட்டும்

 

கிரேக்கத்தில்

உள்ள வரலாற்று

ஆசிரியர்கள்

வேண்டுமானாலும்

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

எழுதி வைத்துக்

கொள்ளட்டும்

 

அதில் தவறில்லை

அது அவர்களுடைய

விருப்பம்

 

ஆனால், இந்தியாவில்

உள்ள மக்களே

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

சொல்வது தான்

வருத்தப்பட

வேண்டிய

விஷயம்.

 

இது மிகப்பெரிய

தவறு.

 

இந்திய நாட்டின்

மீது படை

எடுத்து வந்து

பல்லாயிரக்கணக்கான

மக்களைக்

கொன்று குவித்த

அலெக்ஸாண்டரை

இந்திய நாட்டு

மக்களே மாவீரன்

என்று சொல்வது

எப்படி சரியாக

இருக்கும்

 

உண்மையிலேயே

மாவீரன் என்ற

சொல்லுக்கு

பொருத்தமானவர்

யார் என்றால்

அது போரஸ் என்ற

புருஷோத்தமன் தான்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////