May 05, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-11


            ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-11

நாம் என்ன
சாப்பாடு
சாப்பிடுகிறோமோ
அந்த
சாப்பாட்டையே
விருந்தினருக்கும்
கொடுத்து
அந்த
சாப்பாட்டை
சாப்பிடச் சொல்வது
வேறுபாடு காட்டாமல்
உபசரிப்பது ஆகும்.

நாம் சாப்பிடும்
சாப்பாட்டை
நம்மை
தேடி வரும்
விருந்தினருக்கு
கொடுக்காமல்
தங்களுக்கு நல்ல
சாப்பாடு
விருந்தினருக்கு வேறு
ஒரு சாப்பாடு
என்று
வேறுபாடு காட்டி
விருந்தினர்களை
சாப்பாட்டை
போட்டு
சாப்பிடச் சொல்வது
வேறுபாடு காட்டி
உபசரிப்பது ஆகும்.

தங்கள்
வீட்டிற்கு வரும்
விருந்தினர்களை
முறைப்படி உபசரிக்காமல்
தங்களுக்கு
ஒரு சாப்பாடு
விருந்தினருக்கு
ஒரு சாப்பாடு என்று
வேறுபாடு காட்டி
உபசரிக்கும்
சொந்தக்காரர்கள்,
நண்பர்கள்,
சுற்றத்தார்கள்
ஆகியோருடைய
வீட்டிற்கு
செல்லக்கூடிய
இக்கட்டான
சூழ்நிலை ஏற்பட்டாலும்
தவிர்க்க முடியாத
சந்தர்ப்பம்
ஏற்பட்டாலும்
சந்தர்ப்ப சூழ்நிலையால்
அவர்களுடைய வீட்டில்
சாப்பிடக்கூடிய
நிலை ஏற்பட்டால்
நாம் சாப்பிடாமல்
இருக்க வேண்டும்

வேறுபாடு காட்டி
உபசரிப்பவர்கள்
வீட்டில்
சாப்பாட்டை
சாப்பிடாமல்
இருப்பவர்களுடைய
மிகப்பெரிய செயல்
கோடி ரூபாய்
மதிப்பு உடையது என்று
சொல்லலாம்
அல்லது
கோடி பொன் மதிப்பு
உடையது என்று
சொல்லலாம்

இது இரண்டாம் செயல்
இது இரண்டாம் கோடி
பெறும் செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
இது செய்ய வேண்டாம்
என்று ஔவையார்
சொன்ன செயல்

முதல் இரண்டு
செயல்களை
செய்ய வேண்டாம்
என்று
சொன்ன ஒளைவையார்
அடுத்த
இரண்டு செயல்களை
செய்ய வேண்டும்
என்று சொல்கிறார்.

எந்த இரண்டு
செயல்களை
ஔவையார்
செய்ய வேண்டும்
என்று சொல்கிறாரோ
அந்த இரண்டு
செயல்களைத்
தெரிந்து கொள்வோம்,

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////