January 09, 2020

பரம்பொருள்-பதிவு-113


            பரம்பொருள்-பதிவு-113

துரியோதனன் :
“மகனே அரவான் !
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையே
ஏற்பட்ட பிரச்சினையைத்
தீர்ப்பதற்காக பல்வேறு
வகையானவர்களால் பல்வேறு
நிலைகளில் நடத்தப்பட்ட
அனைத்து சமாதானப்
பேச்சுவார்த்தைகளும்
தோல்வியில் முடிந்துவிட்ட
காரணத்தினால் ,
சமாதானத்தின்
அனைத்து கதவுகளும்
அடைக்கப்பட்டு விட்டது “

“இதனால்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே போர் நடப்பது
என்பது முடிவாகி விட்டது ;
போரை நடத்துவதற்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
இருவரும் செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்பது உனக்குத் தெரியும் ;”

“போரில் நான் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக களப்பலி
கொடுப்பதற்கு தீர்மானித்தேன் “

“32 லட்சணங்கள் உள்ளவராக
இருக்க வேண்டும் ;
எதிர்ரோமம் படைத்தவராக
இருக்க வேண்டும்.;
ஆகிய இரண்டு
தன்மைகளையும்  ஒருங்கே
கொண்டவரைத் தான்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும்
என்பதையும்  ;
அத்தகையவரை
களப்பலியாகக்
கொடுத்தால் மட்டுமே
வெற்றி பெற முடியும்
என்பதையும் ;
தெரிந்து கொண்டேன் ”

“களப்பலியாக  கொடுப்பதற்கு
தகுதி பெற்றவர்களில்
சிறந்த ஒருவனாக நீ
இருக்கிறாய் என்பதையும்  ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதி வாய்ந்தவர்களில்
உயர்ந்தவனாகக்
கருதப்படுவதும்
நீ தான் என்பதையும் ;
தெரிந்து கொண்டேன் “

“கேட்பவர் எதிரியாக
இருந்தாலும் ;
கேட்கப்படுவது எதுவாக
இருந்தாலும் ; - எந்தவித
மறுப்பும் சொல்லாமல்
தானம் தரக்கூடிய
உயர்ந்த மனப்பான்மை
கொண்டவன் நீ
என்பதையும் நான்
தெரிந்து கொண்டேன் “

“அதனால் நானே உன்னை
நேரில் சந்தித்து
போரில் நான் வெற்றி
பெறுவதற்காக களப்பலியாக
உன்னுடைய உயிரை
எனக்குத் தருவாயா ?
என்று கேட்டு உன்னுடைய
சம்மதத்தைப் பெறுவதற்காக
உன்னைத் தேடி நானே
நேரில் வந்தேன் ;

“களப்பலியாக உன்னுடைய
உயிரை எனக்குத்
தருவாயா அரவான் ?”

(துரியோதனனின்
வார்த்தைகளைக் கேட்ட
அரவானுக்கு எந்தவிதமான
அதிர்ச்சியும் ஏற்படவில்லை
சர்வ சாதாரணமாக
பதில் அளித்தான்)

அரவான் :
“என்னுடைய உயிரை
களப்பலியாகத் தருகிறேன்
பெரிய தந்தையே  ! “

“களப்பலியாக என்னுடைய
உயிரைத் தருவதற்கு
சம்மதிக்கிறேன்
பெரிய தந்தையே ! “

என்று சொன்ன அரவானின்
வார்த்தைகளைக் கேட்ட
துரியோதனன்………………………!

“ஆயிரம் பேர் சுற்றி
வளைத்து கொல்லத்
துடித்தாலும் அத்தனை
பேர்களையும் கொன்று
குவித்து பகைவர்களை
கதி கலங்கச் செய்வதற்கு
உலகத்திலேயே பெரிய
வீரனாகவும் ;
அஞ்சா  நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்கவேண்டிய
அவசியமில்லை “

“போர்க்களத்தில் நின்று
கிழிந்து தொங்கும்
சதையுடனும் ; - அறுந்து
கிடக்கும் நரம்புகளுடனும் ;
உடலில் வழியும்
ரத்தத்துடனும்  ;
எதிரிகளுடன் போரிடுவதற்கு
உலகத்திலேயே பெரிய
வீரனாகவும் ; அஞ்சா
நெஞ்சம் கொண்டவனாகவும் ;
இருக்க வேண்டிய
அவசியமில்லை “

“எங்கிருந்தோ வந்த அம்பு
இதயத்தை கிழித்து
முதுகின் வழியாக
வெளியே வந்து - நின்று
கொண்டிருந்த போதும் ;
அதை எடுத்து தூர
எறிந்து விட்டு தொடர்ந்து
போர் செய்வதற்கு
உலகத்திலேயே
பெரிய வீரனாகவும் ;
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்க வேண்டிய
அவசியமில்லை “

“ஆனால் தன்னைத் தானே
களப்பலி கொடுப்பதற்கு
உலகத்திலேயே
பெரிய வீரனாகவும்  ;
உலகத்திலேயே
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும்  ;
கண்டிப்பாக இருந்தே
ஆக வேண்டும் “

“இத்தகைய இரண்டு
தன்மைகளைக்
கொண்டவனால் மட்டுமே
தன்னைத் தானே களப்பலி
கொடுக்க முடியும்  

“களப்பலியாக
என்னுடைய உயிரைத்
தருகிறேன் என்று
அரவான் சொன்ன
வார்த்தையிலிருந்து
அரவான் - உலகத்திலேயே
பெரிய வீரனாகவும்  ;
உலகத்திலேயே
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்கிறான் என்பதைப்
புரிந்து கொண்டான்
துரியோதனன் “

“விண்ணை முட்டும்
மலையாக உயர்ந்து
நிற்கும் அரவான் முன்பு
தான் ஒரு சிறு குன்றாக
நிற்பதை உணர்ந்து
கொண்டான் துரியோதனன் “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 09-01-2020
//////////////////////////////////////////