June 22, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-29


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-29

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களைப் பற்றி
அறிந்து கொள்ள வேண்டுமானால்
நாம் நிறைய விவரங்களை
தெரிந்து கொள்ள
வேண்டியது அவசியமாகிறது,

உலகம் முழுவதும்
மனிதனால் செய்யப்படும்
பாவங்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று   : தெரிந்து
          செய்யும் பாவம்
இரண்டு : தெரியாமல்
          செய்யும் பாவம்

தெரிந்து
செய்யும் பாவத்தை
நேரடியாக செய்யும்
பாவம் என்றும்
தெரியாமல்
செய்யும் பாவத்தை
மறைமுகமாக
செய்யும் பாவம்
எனறும் சொல்லலாம்

ஒருவர் பாக்கெட்டில்
கொஞ்சம் பணம்
வைத்திருக்கிறார்  
அவருக்கு தெரியாமல்
அவருடைய பாக்கெட்டில்
வைத்திருக்கும்
பணத்தை திருடுவது
தெரிந்து செய்யும்
பாவம் அதாவது
நேரடியாக செய்யும்
பாவம்

குடும்பத் தலைவர்
ஒருவர் தினமும்
மதுபானம்
அருந்தி விட்டு
வருகிறார்
வீட்டை கவனிக்காமல்
மனைவி, மக்களைக்
கவனிக்காமல்
இருக்கிறார்.
சாப்பாட்டிற்காகவும்
குடும்பத்தை
நடத்துவதற்காகவும்
மனைவி, மக்கள்
மிகுந்த துயரம்
அடைகிறார்கள்
குடும்பத்தை
நடத்தமுடியாமல்
கஷ்டப்படுகிறார்கள்.

தான் மது அருந்துவதால்
தன்னுடைய குடும்பம்
பாதிக்கப்படுகிறது
தன்னுடைய மனைவி
மக்கள் கஷ்டப்படுகிறார்கள்
என்ற எண்ணம்
சிறிது கூட இல்லாமல்
மதுபானம் அருந்தும்
கெட்ட பழக்கமான
அதே தவறை செய்கிறார்
குடும்பத் தலைவர்.

இது தெரியாமல்
செய்யும் பாவம்
அதாவது மறைமுகமாக
செய்யும் பாவம்

பாவங்களில்
முக்கிய பாவமாக
கருதப்படுவது
நம்பிக்கை துரோகம்
நம்பிக்கை துரோகத்தை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : எதிர்பார்த்து
        காத்துக்
        கொண்டிருக்கும்போது
        செய்த நம்பிக்கை
        துரோகம்

இரண்டு : எதிர்பார்க்காமல்
          இருக்கும் போது
          செய்த நம்பிக்கை
          துரோகம்

ஒருவர் தன் மகளுக்கு
திருமணம் செய்ய
நாள் குறித்து விட்டு
திருமணம் செய்ய
தன் நண்பரிடம்
திருமணத்திற்காக
கொஞ்சம் பணம்
கடன் கேட்டார்
நண்பரும் தருகிறேன்
தருகிறேன் என்று
சொல்லி விட்டு
கடைசியில் பணம்
கொடுக்காமல்
ஏமாற்றி விடுகிறார்
  
கடைசியில் அவர்
வேறு ஒருவரிடம்
கடன் வாங்கி
திருமணத்தை முடித்து
விடுகிறார்
  
இது தான்
எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருந்து போது செய்த
நம்பிக்கை துரோகம்

நாம் ஒரு வியாபாரம்
செய்கிறோம்
நம்பிக்கையான நபர்
என்று ஒருவரை
சேர்த்துக் கொள்கிறோம்
அவருக்கு வியாபாரம்
பற்றிய எல்லா
விஷயங்களையும்
கற்றுத் தருகிறோம்
வியாபார தந்திரங்களை
கற்றுத் தருகிறோம்
பல்வேறு வியாபாரிகளை
அறிமுகப் படுத்துகிறோம்
வெவ்வேறு வியாபாரிகளிடம்
எவ்வாறு பழக வேண்டும்
என்பதை கற்றுத் தருகிறோம்

பல ஆண்டுகள் நம்முடன்
இருந்து நம்முடன்
வியாபார நுணுக்கங்களை
கற்றுக் கொண்டவர்
நம் நம்பிக்கைக்கு
உரியவர் என்று நாம்
யாரை நினைத்துக்
கொண்டிருந்தோமோ அவர்
நம்மை விட்டு
பிரிந்து சென்று
நம்முடைய
விரோதியிடமே சேர்ந்து
நமக்கு எதிராக
வியாபாரம் செய்கிறார்

இது தான்
எதிர்பார்க்காமல்
இருக்கும் போது செய்த
நம்பிக்கை துரோகம்

 ----------இன்னும் வரும்
////////////////////////////////////////////