பரம்பொருள்-பதிவு-149
புரோகிதர் :
“பூஜைகளையும்
;
ஹோமங்களையும்
;
மந்திரங்களையும்
;
சொல்வதன்
மூலம்
காலத்தை
மாற்றி விட
முடியுமா ?
“
கிருஷ்ணன் :
“காலத்தை
மாற்றி விட
முடியாது “
புரோகிதர் :
“காலத்தை
மாற்றி
விட முடியாது
என்றால்
பின்பு எதற்காக
மக்கள் இதனை
செய்கிறார்கள்
;
நாமும்
இவைகளை
எதற்காக
நாளை
செய்ய
வேண்டும் ;”
கிருஷ்ணன் :
“பூஜைகளையும்
ஹோமங்களையும்
மந்திரங்களையும்
செய்வதன் மூலம்
நம்மால்
காலத்தை
மாற்றி விட
முடியாது “
“காலத்தை
மாற்றுவதற்காக
இவைகளை
எல்லாம் நாம்
செய்யவில்லை
“
“பின்பு எதற்காக
இவைகளை
செய்கிறோம்
என்றால்
சம்பந்தப்பட்ட
கடவுளை
வரவழைப்பதற்காகத்
தான் இவைகளை
எல்லாம்
செய்து
கொண்டிருக்கிறோம்
“
“ஆமாம் நாம்
எந்த ஒன்றை
பெறுவதற்காக
எந்த ஒன்றை
செய்கிறோமோ
அந்த ஒன்றுடன்
சம்பந்தப்பட்ட
கடவுளை
வரவழைப்பதற்காகத்
தான் இவைகளை
எல்லாம்
செய்து
கொண்டிருக்கிறோம்
“
“சம்பந்தப்பட்ட
கடவுள்கள்
வந்து விட்டால்
காலம்
தன்னால் மாறி
விடப்போகிறது
“
“அதனால்
தான் நான்
சொல்கிறேன்
அமாவாசையன்று
செய்ய
வேண்டிய
பூஜைகளையும் ;
நடத்த
வேண்டிய
ஹோமங்களையும்
;
சொல்ல
வேண்டிய
மந்திரங்களையும்
;
சதுர்த்தசி
திதியான
நாளை
செய்வதற்கு
நம் நாட்டில்
உள்ள
தகுதியான
புரோகிதர்களை
தேர்ந்தெடுங்கள்
“
“தகுதியான
ஆட்களை
தேர்ந்தெடுத்த
பிறகு
அமாவாசையன்று
செய்ய
வேண்டிய
அனைத்து
ஆன்மீக
விஷயங்களையும்
செய்யத்
தொடங்குங்கள்
“
“காலத்தை
மாற்றுவது
எப்படி என்பதை
நான் பார்த்துக்
கொள்கிறேன்
“
“அதற்கு
முன்னர்
நான் ஒரு
முக்கியமான
நபரை பார்க்க
வேண்டும்
அவரை
பார்த்து விட்டு
வருகிறேன் “
புரோகிதர் :
“யார் அவர்
? “
கிருஷ்ணன் :
“வேறு யார்
அரவான் தான்
“
(என்று சொல்லி
விட்டு
அரவானைக்
காண
கிருஷ்ணன்
சென்று
கொண்டிருந்தார்)
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
06-03-2020
//////////////////////////////////////////