பரம்பொருள்-பதிவு-18
(1) அனுக்ஞை
(அனுமதி
வாங்குதல்)
“கும்பாபிஷேகம்
தொடங்குவதற்கு
முன்பு
கும்பாபிஷேகத்தை
முன்னால்
நின்று
நடத்தி
வைப்பதற்கு
தகுதி
வாய்ந்த
ஒருவரை
;
ஆன்மீகத்தில்
நாட்டம்
கொண்ட
ஒருவரை
;
ஆன்மீக
செயலில்
உயர்ந்த
ஒருவரை ;
பொது
மக்கள்
தேர்ந்து
எடுக்கிறார்கள்
“
“இவ்வாறு
பொது
மக்களால்
தேர்ந்தெடுக்கப்
பட்டவர்
கும்பாபிஷேகத்தை
தலைமையேற்று
முன்னால்
நின்று
நடத்தி
வைப்பதற்கு ;
எல்லாம்
வல்ல
இறைவனின்
அனுமதியைப்
பெற
வேண்டும் ;
இதற்கு
அனுக்ஞை
என்று
பெயர் ;”
(2) விக்னேஸ்வர பூஜை
“கும்பாபிஷேகம்
எந்தவிதமான
இடையூறும்
இல்லாமல்
;
எந்தவிதமான
தடையேதும்
இல்லாமல்
;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல்
;
நடைபெறுவதற்காக
விநாயகப்
பெருமானை
வழிபடுகிறார்கள்
“
“விநாயகப்
பெருமானை
வழிபடுவதற்கு
கணபதி
ஹோமம்
செய்கிறார்கள்
;
இச்செயலுக்கு
அக்னியைப்
பயன்
படுத்த
வேண்டும்
என்று
ஆகமங்கள்
எடுத்து
உரைக்கின்றன ;”
“பூதகணங்களால்
இடையூறுகள்,
தாக்குதல்கள்
ஏற்படாதவாறு
கணங்களின்
தலைவனாகிய
மகாகணபதியை
நினைத்து
அவருக்குப்
பிரியமான
பொருளை
அக்னியில்
சமர்ப்பிக்கும்
வேள்விதான்
மகாகணபதி
ஹோமம் “
(3)வாஸ்து
சாந்தி
“ஆகமங்களிலும்
சிவமகா
புராணத்திலும்
வாஸ்து
புருஷனைப்
பற்றிக்
கூறப்பட்டுள்ளது “
“அந்தகாசுரன்
என்பவனை
கொல்வதற்காக
தேவர்கள்
சிவபெருமானிடம்
கோரிக்கை
வைத்தனர் ;
சிவபெருமானுடைய
வியர்வைத்
துளி
நிலத்தில்
விழுந்தது
அதிலிருந்து
மூவுலகத்தையும்
விழுங்கத்தக்க
ஒரு
பூதம்
தோன்றியது
;”
“அந்த
பூதம்
சிவனுடைய
அருளைப்
பெற்று
அந்தகாசுரனுடைய
உதிரத்தைக்
குடித்து
அதைக்
கொன்றது”
“பின்னர்
அந்த பூதம்
சிவபெருமானை
நோக்கித்
தவம்
இருந்து
பல
வரங்கள்
பெற்று
உலகத்தை
மிகப்
பெரும்
துன்பத்திற்கு
உள்ளாக்கியது
;
சிவபெருமான்
அக்கிரமம்
செய்து
கொண்டிருக்கும்
அந்த
பூதத்தை அடக்க
வேண்டும்
என்பதற்காக
அதிபவன்
என்பவரை
சிருஷ்டித்து
அனுப்பினார்
; “
“அதிபவன்
அந்தப்
பூதத்தை
மாயா
பாசங்களால்
கட்டிக்
கீழே
தள்ளினார் ;
பின்னர்-
அந்த
பூதத்தின்
உடலின்
மீது
53 தேவதைகளை
வசிக்கச்
செய்தார் ;
அவர்களும்
அந்தப்
பூதத்துக்குக்
கெடுதி
செய்யாமல்
அதனைப்
பாதுகாத்து
வருகின்றனர்
;”
“தேவர்கள்
அந்த அரக்கன்
மீது
வசித்ததால்
அந்த
அரக்கனுக்கு
வாஸ்து
புருஷன்
எனப்
பெயர்
கிடைத்தது
“
“இந்த
வாஸ்து புருஷனால்
குடமுழுக்கு
செயலுக்கு
கெடுதி
வராமல்
இருக்க
வேண்டும்
என்பதற்காக
- அந்த
53
தேவதைகளுக்கும்
பூஜை
பலி ஹோமம்
ஆகியவற்றால்
சாந்தி
செய்யும்
செயலுக்கு
வாஸ்து
சாந்தி
எனப்
பெயர் “
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
29-05-2019
/////////////////////////////////////////////////////