March 03, 2020

பரம்பொருள்-பதிவு-145


           பரம்பொருள்-பதிவு-145

உலூபி :
"நீங்கள் எப்படி
அக்கா - என்
மகன் அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளித்தீர்கள் ?"

திரௌபதி :
"உலூபி  முதலில்
என் மகன் அரவான்
என் மகன் அரவான்
என்று தொடர்ந்து
சொல்லிக் கொண்டு
இருப்பதை நிறுத்து "

"என் மகன்
அரவான்
என் மகன்
அரவான் - என்று
ஒவ்வொரு முறை
நீ சொல்லும் போதும்
உன்னுடைய
வார்த்தையில்- நீ
அரவான் மேல்
வைத்திருக்கும்
பாசம் தான்
தெரிகிறது ;
ஆனால்
உறவுகளின் மேல்
நீ பாசம்
வைத்ததாகத்
தெரியவில்லை "

"நீ உறவுகளின் மேல்
உண்மையாகவே
பாசம் வைத்து
இருந்தால்
என்னுடைய மகன் 
அரவான்
என்னுடைய மகன்
அரவான் என்று
சொல்லிக் கொண்டு
இருக்க மாட்டாய் :
நம்முடைய மகன்
அரவான் என்று
தான் சொல்லிக்
கொண்டு இருப்பாய்"

"நீ உறவுகளின்
மேல் பாசம்
வைக்காத
காரணத்தினால் தான்
என்னுடைய மகன்
அரவான்
என்னுடைய மகன்
அரவான் - என்று
தொடர்ந்து சொல்லிக்
கொண்டிருக்கிறாய்"

"அரவானை நாங்கள்
உன்னுடைய மகனாக
நினைக்கவில்லை ;
எங்களுடைய
மகனாகத் தான்
நினைத்தோம் ;
அதனால் தான்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்க
ஒப்புதல் அளித்தோம் ;"

"அரவானை நாங்கள்
உன்னுடைய
மகனாக மட்டுமே
நினைத்து இருந்தால்
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளித்து
இருக்க மாட்டோம் :

"அரவானை நீ
உன்னுடைய மகன்
என்று நினைத்துக்
கொண்டிருக்கிற
காரணத்தினால்
தான் நாங்கள்
அனைவரும் உனக்கு
எதிரிகளாகத்
தெரிகிறோம் "

"அரவான்
சம்பந்தமாக
நாங்கள் செய்யும்
செயல்கள்
அனைத்தும்
உனக்கு தவறாகத்
தெரிகிறது "

"அரவானைப் பற்றி
நாங்கள் பேசும்
சொற்களில் உள்ள
நன்மைகள்
உனக்கு
தீமையாகவே
தெரிகிறது "

"அரவானை
எப்போது நீ நம்
அனைவருடைய
மகன் என்று
நினைக்கிறாயோ
அப்போது தான்
நாங்கள் அனைவரும்
உனக்கு
எதிரிகளாகத்
தெரியமாட்டோம் "

"அரவான்
சம்பந்தமாக நாங்கள்
செய்யும் செயல்கள்
உனக்கு தவறாகத்
தெரியாது "

"அரவானைப் பற்றி
நாங்கள் பேசும்
சொற்களில் உள்ள
நன்மைகள் உனக்கு
தீமையாகத்
தெரியாது  "

"அரவானை நீ
உன்னுடைய மகன்
என்று நினைக்கும்
வரை உனக்கு
எதுவுமே புரியாது "

"எதையும் விளக்கமாக
சொன்னாலும்
உனக்கு புரியாது "

"இருந்தாலும்
சொல்கிறேன் "

"இங்குள்ள
அனைவரும்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளித்ததற்கு
பல்வேறு
காரணங்களைச்
சொன்னாலும்
நான் ஒப்புதல்
அளித்தது
ஒரே ஒரு
காரணத்திற்காகத்
தான் "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-03-2020
//////////////////////////////////////////