May 01, 2021

பதிவு-10-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-10-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

அதாவது நமக்கு

துன்பம் வந்தால்

வேதனை இருக்கத்

தான் செய்யும்

கஷ்டம் இருக்கத்

தான் செய்யும்

மனவருத்தம்

இருக்கத் தான்

செய்யும்

ஆனாலும்

துன்பம் வரும் போது

நாம் யோசிக்க

வேண்டும்

வந்த இந்த

துன்பத்தால் நம்முடைய

பாவப்பதிவுகளில்

ஒன்றோ அல்லது

பலவோ கழிகிறது

என்பதையும்,

பாவப்பதிவுகள்

கழிவதன் மூலம்

நம்முடைய ஆன்மா

தூய்மையடைகிறது

என்பதையும்

முக்தியை நோக்கி

சென்று

கொண்டிருக்கிறோம்

என்பதையும்

இறவா நிலையையும்

பிறவா நிலையையும்

அடையப் போகிறோம்

என்பதையும்

நாம் நினைத்துப்

பார்க்க வேண்டும்

 

அவ்வாறு நினைத்துப்

பார்த்தோமேயானால்

துன்பம் வரும் போது

கஷ்டப்பட்ட நாம்

அதனுடைய பலன்

என்ன என்று

தெரியும் போது நாம்

மகிழ்ச்சியடைவோம்

எனவே,

நமக்கு துன்பம்

வரும் போது

நம்முடைய

பாவப்பதிவுகளில்

ஒன்று கழிகிறது என்று

எடுத்துக் கொண்டால்

நாம் மகிழ்ச்சி

அடைவோம்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

இடுக்கண் வருங்கால்

நகுக அதனை

அடுத்தூர்வது

அஃதொப்பது இல்

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

--------சுபம்

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

////////////////////////////////////////////////////

பதிவு-9-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-9-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

ஒருவர் கஷ்டப்படாமல்

நன்றாக இருக்கிறார்

வீடு குடும்பம்

வேலை குழந்தை

என்று நன்றாக

இருக்கிறார் என்றால்

அவருடைய

புண்ணியப்பதிவுகள்

கழிந்து

கொண்டிருக்கிறது

என்று பொருள்

 

புண்ணியத்தின்

பலனால் தான்

நாம் இப்படி

இருக்கிறோம் என்று

நினைக்கக் கூடாது

புண்ணியத்தின்

பலன் கழிந்து

கொண்டிருக்கிறது

என்று நினைக்க

வேண்டும்

நாம் நன்றாக

இருக்கிறோம் என்பதற்காக

நாம் எந்தவிதமான

புண்ணியத்தைத்

தரக்கூடிய செயல்கள்

எதுவும் செய்யாமல்

இருந்தால் 

நம்முடைய

புண்ணியப் பதிவுகள்

அனைத்தும் கழிந்து

பாவப்பதிவுகள்

மட்டுமே

எஞ்சி நிற்கும்

அப்புறம் நாம்

வீடு இழந்து

குடும்பத்தை இழந்து

குழந்தைகளை இழந்து

சொத்தை இழந்து

கஷ்டப்பட

வேண்டியது தான்

அதாவது

பாவப்பதிவுகளை

அனுபவிக்க வேண்டிய

நிலை வரும் போது

இத்தகைய

நிலைகள் தான் வரும்.

 

புண்ணியத்தின் பலனாக

நல்ல வாழ்க்கை

கிடைத்து அப்போது

பாவத்தை தரக்கூடிய

செயல்களைச் செய்து

கொண்டிருந்தால்

புண்ணியத்தின் பலன்

முடிந்து பாவத்தின்

பலன் ஆரம்பிக்கும்

போது அவர் மிகுந்த

துன்பத்திற்கு உள்ளாவர்

அந்த சமயத்தில் தான்

உயிர் போவது

அனைத்தையும் இழந்து

நடுரோட்டிற்கு செல்வது

அனாதையாக இந்த

உலகம் தனியே

தவிக்க விட்டு

விட்டுச் செல்வது

அவமானங்கள்

அசிங்கங்கள்

இழப்புகள் ஏற்படுவது

ஆகியவை உண்டாகும்

 

ஆகவே புண்ணியத்தின்

பலனாக நாம்

நன்றாக இருக்கும் போது

யாருக்கும் எந்தவிதமான

கெடுதலையும் செய்யாமல்

எந்த ஒரு

குடும்பத்தையும்

அழிக்காமல்

யாருடைய

மனதையும் புண்படுத்தாமல்

பிறருடைய மனம்

வருத்தப்படும்படி

நடந்து கொள்ளாமல்

பாவப்பதிவுகளை

உண்டாக்கிக் கொள்ளாமல்

புண்ணியத்தைத்

தரக்கூடிய செயல்களை

மட்டும் செய்து வந்தால்

புண்ணியத்தின்

பதிவுகள் கழிய கழிய

நாம் தொடர்ந்து

செய்து வரும்

நல்ல செயல்களால்

உண்டாகும்

நல்ல விளைவானது

புண்ணியத்தை

அளித்து

புண்ணியத்தின் பலன்

நம்மை காக்கும் என்பதை

நாம் நினைவில்

கொள்ள வேண்டும்

 

புண்ணியப் பதிவுகளால்

உண்டாகும் பலன்கள்

இனிமையாக இருக்கும்

அதனால் யாரும்

அதனை பெரிதாக

எடுத்துக் கொள்வதில்லை

 

ஆனால் பாவப்பதிவுகளால்

உண்டாகும் பலன்கள்

மிகவும்

கொடுமையாக இருக்கும்

கஷ்டமானதாக இருக்கும்

வலியைத்

தரக்கூடியதாக இருக்கும்

வேதனையை

அளிக்கக்கூடியதாக

இருக்கும்

எனவே

கஷ்டம் வந்தால்

அனைவரும்

வருத்தப்படுகிறோம்

 

கஷ்டம் வந்தால்

நாம் செய்த பாவத்தால்

வந்த கஷ்டத்தை

அனுபவிக்கிறோம்

என்று எடுத்துக்

கொள்ளக்கூடாது

கஷ்டம் வந்தால்

பாவப்பதிவுகளில்

ஒன்று கழிகிறது

என்று கணக்கில்

எடுத்துக் கொள்ள

வேண்டும்

பாவப்பதிவுகள்

கழிவதால்

நம்முடைய ஆன்மா

தூய்மை பெறுகிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

நம்முடைய

ஆன்மா முக்தி

என்ற மோட்ச

நிலையை அடைந்து

கொண்டிருக்கிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

நமக்கு கஷ்டம்

வந்தால் இத்தகைய

நிகழ்வுகள்

அனைத்தும் நடந்து

கொண்டிருக்கிறது

என்பதை நினைத்து

நாம் மகிழ்ச்சி

அடைய வேண்டும்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

பதிவு-8-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-8-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

ஆனால்

புண்ணியப் பதிவுகளை

உண்டாக்கும்

நல்ல செயல்களை

நாம் தொடர்ந்து

செய்து கொண்டிருக்க

முடியாது. புண்ணியப்

பதிவுகளை உண்டாக்கும்

செயல்களை நாம்

நிறுத்தினாலோ அல்லது

நம்மால்

புண்ணியப் பதிவுகளை

உண்டாக்கும் செயல்களை

செய்ய முடியாமல்

போனாலோ

பாவப்பதிவுகள் எழுந்து

தன்னுடைய பலன்களை

கொடுக்க

ஆரம்பித்து விடும்.

 

இதனால்

மேல் பதிவின் மூலம்

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை முழுவதுமாக

கழிக்க முடியாது.

 

அடியோடு அழித்தல்

மனிதனுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாக்களை

முழுவதுமாக கழிப்பதற்கு

சித்தவித்தை எனப்படும்

வாசியோகத்தால்

தான் முடியும்

 

வாசியோகத்தைப்

பயன்படுத்தித் தான்

மனிதனுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாக்களைக்

கழிக்க முடியும்

 

இவ்வாறு மனிதன்

தன்னுடைய செயல்களின்

மூலம் தானாகவே

முயற்சி செய்தால்

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை கழிக்கலாம்

 

மனிதன் தன்னுடைய

வாழ்க்கையில்

துன்பத்தால் ;

கஷ்டத்தால் ;

சோகத்தால் ;

கவலையால் ;

வேதனையால் ;

அவதியுற்றால்

செய்த பாவத்திற்குரிய

பலனை அனுபவிக்கிறான்

என்கிறோம்

 

இந்த உலகத்தில் வாழும்

மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப் பதிவுகளுக்குரிய

பலன்களை

அனுபவிக்கிறான் என்று

இந்த உலகத்தில் உள்ள

பெரும்பான்மையான

மக்களால்

சொல்லப்பட்டு வருகிறது ;

ஆனால் இந்த கருத்து

உண்மையாதல்ல ;

தவறான கருத்தாகும் ;

 

இந்த உலகத்தில்

வாழும் மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனின்

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப் பதிவுகளில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்.

அதாவது

ஒரு மனிதனுடைய

வாழ்க்கையில்

துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப்பதிவுகளுக்குரிய

பலன்களை

அனுபவிக்கிறான்

என்று பொருள்

எடுத்துக் கொள்ளக்கூடாது ;

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப்பதிவுகளுக்குரிய

பலன்களில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்

எடுத்துக்

கொள்ள வேண்டும்.

 

நம்முடைய வாழ்க்கையில்

ஒரு க‌ஷ்டம் வந்தால்

பாவத்தால் வந்த

பலன் கிடையாது

பாவப்பதிவு ஒன்று

கழிகிறது என்று பொருள்

 

அதைப் போல்

நம்முடைய வாழ்க்கையில்

இன்பம் வந்தால்

புண்ணியத்தில் ஒரு

பலன் கழிகிறது

என்று பொருள்

 

பாவப்பதிவுகள் எப்படி

கழிகிறதோ அவ்வாறே

புண்ணியப் பதிவுகளும்

கழிகிறது என்பதை

நாம் நினைவில்

கொள்ள வேண்டும்

 

நிறைய பேர்

சொல்வார்கள் நான்

கஷ்டப்படுகிறேன் பாவம்

செய்திருக்கிறேன் என்று

அப்படி என்றால்

அவர் செய்த

புண்ணியம் என்ன ஆனது

புண்ணியத்தை யாரும்

கணக்கில் எடுத்துக்

கொள்வதில்லை

 

நாம் நன்றாக

இருக்கிறோம் என்றால்

புண்ணியம்

செய்திருக்கிறோம்

என்று பொருள்

நாம் கஷ்டப் படுகிறோம்

என்றால் பாவம்

செய்திருக்கிறோம்

என்று பொருள்

 

ஒருவர் தன்

வாழ்நாளில்

கஷ்டப்பட்டுக் கொண்டு

மட்டும் இருக்க முடியாது

இன்பமாகவும் இருப்பார்

 

இன்பமும் துன்பமும்

கலந்துதான் வாழ்க்கை

அதாவது பாவப்பதிவுகளும்

புண்ணியப்பதிவுகளும்

சேர்ந்தது தான் வாழ்க்கை

 

பாவப் பதிவுகளுக்காக

கஷ்டத்தை

அனுபவிக்கிறோம்

என்றால்

புண்ணியப் பதிவுகளுக்காக

நாம் இன்பத்தை

அனுபவிக்கிறோம்

என்பதை நாம்

நினைவில்

கொள்ள வேண்டும்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

பதிவு-7-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-7-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

மனிதன் ஞானம்,

சமாதி, முக்தி என்ற

மோட்ச நிலை என்ற

ஆன்மீகத்தின் மூன்று

உயர் நிலைகளை

அறிந்தால் மட்டுமே

மனிதன்

இறவா நிலையையும் ;

பிறவா நிலையையும் ;

அடைய முடியும்

 

ஞானம் என்றால் என்ன?

சமாதி என்றால் என்ன?

முக்தி என்றால் என்ன ?

என்பதை எளிதான

உதாரணம் மூலம்

தெரிந்து கொள்ளலாம்.

 

ஒரு கிணற்றில்

தண்ணீர் இருக்கிறது

என்பது தெரிந்து

அந்த கிணற்றுக்குள்

எட்டிப்பார்த்து

கிணற்றுக்குள்

தண்ணீர் இருக்கிறது

என்பதை

அறிந்து கொண்டால்

அதற்கு பெயர் ஞானம்.

 

கிணற்றில்

வாளியை விட்டு

அந்த தண்ணீரை எடுத்து

தேவைப்படும்

நேரத்தில் அருந்தினால்

அதற்குப் பெயர் சமாதி.

 

நாமே கிணற்றில் விழுந்து

நாமே தண்ணீராகவே

மாறி விடுவது

முக்தி அல்லது

மோட்சம் எனப்படும்.

 

இது தான்

ஞானம் ;  சமாதி ;

முக்தி அல்லது மோட்சம் ;

என்பதற்கான விளக்கம்.

 

கர்மா என்றால்

என்ன என்பதையும்,

கர்மாவின் வகைகள்

எவை என்பதையும்,

கர்மா நம்முடைய

வாழ்க்கையில் எத்தகைய

விளைவுகளை

ஏற்படுத்துகிறது என்பதையும்,

கர்மா நம்முடைய

வாழ்க்கையில் எப்போது

வெளிப்படுகிறது என்பதையும்,

ஒவ்வொரு கர்மாவும்

எவ்வளவு காலம்

நம்முடைய வாழ்க்கையில்

பாதிப்புகளை உண்டாக்கும்

என்பதையும்,

எவ்வளவு நாட்கள்

கர்மா நம்முடைய

வாழ்க்கையில்

நீடிக்கிறது என்பதையும்,

கர்மா எப்போது

ஆரம்பித்து எப்போது

முடிகிறது என்பதையும்,

மூன்று கர்மாக்களில்

எந்த கர்மா

தன்னுடைய பலனைக்

கொடுக்கிறது என்பதையும்,

கர்மாவின் கால நேரம்

எவ்வளவு என்பதையும்,

யார் ஒருவர்

உணர்ந்திருக்கிறாரோ

அவரால் மட்டும் தான்

கர்மாக்களை தானே

செயல்களைச் செய்து

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முற்றிலுமாக

கழிக்க முடியும்

 

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

நாம் நமது

செயல்களின் மூலம்

மூன்று முறைகளைப்

பயன்படுத்தி கழிக்கலாம்

அதாவது இயற்கையாக

கழியும் கர்மாவை

நாமே நம்முடைய

செயல்களின்

மூலம் கழிக்கலாம்

 

ஒன்று

பிராயச்சித்தம்

 

இரண்டு

மேல் பதிவு

 

மூன்று

அடியோடு அழித்தல்

 

பிராயச் சித்தம்,

மேல் பதிவு ஆகிய

இரண்டு முறைகளின்

மூலம் மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முழுமையாக

கழிக்க முடியாது.

 

ஆனால்

அடியோடு அழித்தல்

என்ற முறையின் மூலம்

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முழுமையாக கழிக்கலாம்.

 

பிராயச்சித்தம்

எந்தெந்தத்

தவறுகளால் பிறருக்குத்

துன்பமும் வருத்தமும்

வந்ததோ அந்த

வருத்தத்தை நீக்கியும்

இழப்பு வந்தால்

ஈடு செய்தும்

ஆறுதல் சொல்லக்கூடிய

அளவிற்கு நம்

மனம் மாறி செயல்

புரிவோமானால்

அதுவே பிராயச்சித்தம்

எனப்படும்.

 

மேல் பதிவு

கெட்ட எண்ணங்களைத்

தவிர்த்து நல்ல

எண்ணங்களையே மனதில்

நினைத்து தொடர்ந்து

நன்மைகள் செய்து

கொண்டிருப்பதால்

உண்டாகும் விளைவினால்

புண்ணியப் பதிவுகள்

உண்டாகும். தொடர்ந்து

நல்லவற்றை செய்து

வரும் போது

புண்ணியப் பதிவுகள்

ஒன்றன் மேல்

ஒன்றாக பதிந்து

கொண்டே வரும்.

இந்த புண்ணியப்

பதிவுகள்

பாவப்பதிவுகள் எழா

வண்ணம் செய்யும்.

இதனால்

பாவப்பதிவுகள் எழாது.

தன்னுடைய

பலன்களைத் தராது.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////