May 01, 2021

பதிவு-1-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-1-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

இடுக்கண் வருங்கால்

நகுக அதனை

அடுத்தூர்வது

அஃதொப்ப தில்

 

------திருக்குறள்

-----திருவள்ளுவர்

 

துன்பம் வரும் போது

சிரிக்க வேண்டும்.

துன்பத்தை எதிர்த்து

வெல்லவல்லது

அதனைப் போன்றது

எதுவும் இல்லை

என்பதே இந்தத்

திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து.

 

இந்த திருக்குறள்

சொல்லும் கருத்தை

மேற்கோள் காட்டி

ராஜபார்ட் ரங்கதுரை

என்ற படத்தில்

எம்.எஸ்.விஸ்வநாதன்

இசையில்,

கவியரசு கண்ணதாசன்

அவர்கள்

துன்பம் வரும்

வேளையில் சிரிங்க
என்று சொல்லி

வைத்தான்

வள்ளுவனும் சரிங்க

பாம்பு வந்து

கடிக்கையில்

பாழும் உயிர்

துடிக்கையில்

யார் முகத்தில்

பொங்கி வரும்

சிரிப்பு என்கிறார்.

 

அப்படி என்றால்

இந்தத் திருக்குறளை

திருவள்ளுவர் தவறாக

எழுதியிருக்கிறாரா?

என்ற கேள்வி

எழுகிறது.

 

அதுமட்டுமல்ல

இந்தத் திருக்குறளை

படிக்கும் அனைவரும்

இதன் அர்த்தத்தை

தெரிந்து கொள்ளும்

அனைவரும்

திருவள்ளுவர்

இந்தத் திருக்குறளை

தவறாக

எழுதியிருக்கிறாரா

என்ற சந்தேகத்தை

எழுப்பிய வண்ணம்

இருக்கின்றனர்.

 

எப்படி துன்பம்

வரும் போது

சிரிக்க முடியும்

திருவள்ளுவர்

தவறாகத் தான்

சொல்லி இருக்கிறார்

என்று பலர்

சொல்கிறார்கள்

அவர்கள் அனைவரும்

சொல்வதை

கேட்கும் போது

ஆமாம் திருவள்ளுவர்

தவறாகத் தான்

சொல்லி இருக்கிறார்

என்று திருவள்ளுவர்

எழுதிய இந்தத்

திருக்குறளின் மேல்

சந்தேகம் கொள்ளத் தான்

தோன்றுகிறது.

 

கவியரசு கண்ணதாசனும்

தன்னுடைய பாடலில்

இந்தத் திருக்குறளை

விமர்சனம்

செய்த பிறகு

திருவள்ளுவரும்

இந்தத் திருக்குறளை

தவறாகத் தான்

எழுதியிருககிறார்

என்று நம்மை

எண்ணத் தூண்டுகிறது.

திருவள்ளுவர் தான்

எழுதிய 1330

திருக்குறளில்

இந்தத் திருக்குறளை

தவறாக

எழுதியிருக்கிறாரா

இந்த உலகத்தில்

உள்ள பலபேர்

சொல்வது போல் ;

உயர்ந்தவர்கள்

சொல்வது போல் ;

சிறந்த மேதைகள்

சொல்வது போல் ;

அறிவிற் சிறந்தவர்கள்

சொல்வது போல் ;

கற்றறிந்தவர்கள்

சொல்வது போல் ;

திருவள்ளுவர்

இந்த திருக்குறளை

தவறாக எழுதி

இருக்கிறாரா ?

என்று எண்ணத்

தான் தோன்றுகிறது .

 

உலகப் பொதுமறை

என்று அனைவராலும்

கொண்டாடப்படும்

திருக்குறளில் எப்படி

தவறுகள் நிகழுவதற்கு

வாய்ப்புகள் இருக்கும் ;

திருக்குறள் எப்படி

தவறாக எழுதப்பட்டு

இருக்கும் ;

தெய்வப் புலவர்

திருவள்ளுவர்

என்று புகழப்படும்

திருவள்ளுவர்

எப்படி தவறான

ஒரு திருக்குறளை

எழதி இருப்பார் ;

என்று யாரும்

சிந்தித்துக்கூடப்

பார்ப்பது இல்லை ;

திருவள்ளுவர்

இந்தத் திருக்குறளை

சரியாகத் தான்

எழுதியிருக்கிறார்.

 

திருவள்ளுவர் எழுதிய

இந்தத் திருக்குறளை

நாம் தவறு என்று

சொல்வதற்குக் காரணம்?

அர்த்தத்தை உணர்ந்து

திருக்குறளை நாம்

சரியாக படிக்கவில்லை

என்பதும் ;

இந்தத் திருக்குறளுக்குள்

மறைந்திருக்கும்

உண்மையான

அர்த்தத்தை

நாம் சரியாக புரிந்து

கொள்ளவில்லை

என்பதும் ;

இந்தத் திருக்குறள்

சொல்லவரும்

அறிவுபூர்வமான

கருத்தை நாம் தெரிந்து

கொள்ள முயற்சி

செய்யவில்லை

என்பதும்  ;

தான் இந்தத்

திருக்குறளை

திருவள்ளுவர் தவறாக

எழுதியிருக்கிறார்

என்று நாம்

சொல்வதற்கு காரணம்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment