October 17, 2022

ஜபம்-பதிவு-877 மரணமற்ற அஸ்வத்தாமன்-9 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-877

மரணமற்ற

அஸ்வத்தாமன்-9

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

குருதேவர்

சொன்னதை

எல்லாம் மனதில்

வைத்துக்

கொள்ளாதே

 

சத்தியமாக சொல்கிறேன்

நான் அரசனான

பிறகு என்னுடைய

ராஜ்ஜியத்தில்

பாதியை நான்

உனக்குத் தருவேன்

 

(துருபதனை

ஏற்றிக் கொண்டு

தேரானது

பாஞ்சால நாட்டை

நோக்கிச் சென்று

கொண்டிருந்தது)

 

துரோணர் :

குருதேவா

நானும் செல்ல

வேண்டிய நேரம்

வந்து விட்டது

 

அக்னிவேஸ்யர் :

நீ என்ன செய்யப்

போகிறாய்

துரோணா

 

துரோணர் :

பிராமணருக்கென்று

ஒதுக்கப்பட்ட பணியை

செய்யப்போகிறேன்

 

அக்னிவேஸ்யர் :

துரோணா

மனித வாழ்க்கையின்

நான்கு பிரிவுகளான

பிரம்மச்சரியம்,

கிரகஸ்தம்,

வனஸ்பிரஸ்தம்,

சன்னியாசம்

என்ற நான்கில்

நீ பீரம்மச்சரியத்தை

முடித்து

கிரகஸ்தனாகப்

போகிறாய்

 

பிரம்மச்சரியத்தை

முடிப்பதற்கு முன்னர்

தவமியற்றி

பிரம்மச்சரியத்தை முடி

 

துரோணர் :

அப்படியே செய்கிறேன்

குருதேவா

என்னை வாழ்த்தி

அனுப்புங்கள்

 

அக்னிவேஸ்யர் :

ஒரு தலைவனுக்கு

இருக்க வேண்டிய

ஐந்து தன்மைகளான

பொறுமை, நிதானம்,

தொலைநோக்கு பார்வை,

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்,

அனைவரையும்

கட்டுப்படுத்தும் திறமை

ஆகியவை

உன்னிடம் இருக்கிறது

 

வருங்காலத்தில்

நீ அரசனாகவோ

அல்லது

லட்சக்கணக்கானவர்களை

வழி நடத்திச் செல்லும்

தலைவனாகவோ ஆகலாம்

 

கிருபாச்சாரியார் வசிக்கும்

ஆசிரமத்திற்குச்

சென்று தவம் இயற்று

 

கிருபர் உன்னை

பார்த்துக் கொள்வார்

நீ வருவதை

கிருபாச்சாரியாருக்குத்

தெரிவிக்கிறேன்

 

என்னுடைய ஆசி

உனக்கு எப்போதுமே

உண்டு

 

(குருதேவர்

அக்னிவேஸ்யர்

துரோணரை

ஆசிர்வதிக்கிறார்

 

துரோணர்

கிருபாச்சாரியார்

வசிக்கும் ஆசிரமம்

இருக்கும் இடத்தை

நோக்கி சென்று

கொண்டிருக்கிறார்

 

மரணமற்றவனை

 

கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனை


மகனாகப்

பெறப்போகும் துரோணர்

கிருபாச்சாரியார்

வசிக்கும்

ஆசிரமத்தை

நோக்கிச் சென்று

கொண்டிருக்கிறார்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-876 மரணமற்ற அஸ்வத்தாமன்-8 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-876

மரணமற்ற

அஸ்வத்தாமன்-8

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

அரியணையைப் பற்றி

கவலைப்படாமல்

மக்களைப் பற்றி

கவலைப்படுபவர்களால்

தான்

மக்களுக்கு

தேவையானதைச்

செய்ய முடியும்

 

நான் அரியணையைப்

பற்றிக்

கவலைப்படாதவன்

 

நான் அரியணையில்

இருக்கும் வரை

என்னால் முடிந்தவரை

மக்களுக்கு

தேவையானதைச்

செய்வேன்

 

என்னை செய்ய

விடாமல் தடுத்தாலும்

செய்வேன்

 

இந்த உலகமே

எதிர்த்தாலும் நான்

சொன்னதை செய்து

முடிப்பேன்

 

வருங்காலத்தில் நான்

அரசனானதும்

என்னுடைய

ராஜ்ஜியத்தில் பாதியை

உனக்கு அளித்து

உன்னை அரசனாக்கி

ஷத்திரியர்கள்

மட்டுமே அரசாள

வேண்டும்

பிராமணர்கள்

அரசாளக்கூடாது

என்று இருக்கும்

நிலையை மாற்றுவேன்

 

புதிய பாதையை

உருவாக்குவேன்

 

இந்த உலகத்திற்கு

மாற்றம் என்றால்

என்ன என்று

உணர்த்துவேன்

 

நான் சொல்வதை

செய்வேன்

 

சத்தியம்

செய்கிறேன்

 

(அக்னிவேஸ்யர்

வருகிறார்)

 

அக்னிவேஸ்யர் :

துருபதா

 

சத்தியம்

செய்யக்கூடாது

 

அதுவும்

வருங்காலத்தைப்

பொறுத்து எந்த

ஒரு சத்தியமும்

செய்யக் கூடாது

 

வருங்காலத்தில்

என்ன நடக்கும் என்று

யாருக்கும் தெரியாது

 

வருங்காலத்தைப்

பொறுத்து சத்தியம்

செய்து விட்டு

நிறைவேற்ற

முடியாமல் போனால்

பகை உண்டாகி விடும்

அதனால்

முடிந்தால்

செய்கிறேன் என்று

தான் சொல்ல

வேண்டும்

 

முடிந்தால் செய்கிறேன்

என்று சொல்லி

விட்டு செய்ய

முடியாமல் போனால்

பகை என்பது ஏற்படாது

ஆனால்

சத்தியமாக

செய்கிறேன் என்று

சொல்லி விட்டு

செய்ய முடியாமல்

போனால்

பகை என்பது

ஏற்படும்

 

எனவே

முடிந்தால் செய்கிறேன்

என்று உன்னுடைய

நண்பனிடம் சொல்

 

ஆஸ்ரம வாசி:

குருதேவா

பாஞ்சால இளவரசரை

அழைத்துச் செல்ல

தேர் வந்திருக்கிறது

 

அக்னிவேஸ்யர் :

நீ கிளம்பலாம்

துருபதா

 

துருபதன் :

என்னை ஆசிர்வதித்து

வாழ்த்தி அனுப்புங்கள்

குருதேவா

 

அக்னிவேஸ்யர் :

துருபதா

 

அதிகாரம் உன்

கைக்கு வந்தவுடன்

அதை வைத்துக்

கொண்டு என்ன

நல்லவைகளை

எல்லாம் செய்ய

முடியுமோ

அந்த நல்லவைகளை

எல்லாம் செய்

 

அதிகாரத்தை 

வைத்துக் கொண்டு

எந்த

கெட்டவைகளையும்

செய்யாதே

 

(துருபதன் தேரில்

ஏறி அமர்கிறான்

துரோணர் அவரை

வழி அனுப்ப

அவன் அருகில்

வருகிறார்)

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-875 மரணமற்ற அஸ்வத்தாமன்-7 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-875

மரணமற்ற

அஸ்வத்தாமன்-7

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஷத்திரியர்

குலத்தில்

பிறக்கும்

ஷத்திரியர்கள்

மட்டுமே

அரசாள

வேண்டும்

 

துருபதன் :

சொல்வது

 

துரோணர் :

சாஸ்திரங்கள்

 

துருபதன் :

இந்த குலத்தில்

பிறந்தவர் தான்

இந்தத் தொழிலைச்

செய்ய வேண்டும்

இந்தக் குலத்தில்

பிறந்தவர்

இந்தத்

தொழிலைச்

செய்யக்கூடாது

என்று சொல்லும்

உரிமை

யாருக்கும்

கிடையாது

 

துரோணர் :

தகுதி

இருந்தால்

யாரும்

எந்தத்

தொழிலையும்

செய்யலாம்

என்கிறாயா

 

துருபதன் :

தகுதி

இருந்தால்

தான்

எந்த ஒரு

தொழிலையும்

யாரும்

செய்ய

முடியும்

என்றால்

யாராலும்

எந்த ஒரு

தொழிலையும்

செய்ய

முடியாது

 

ஒரு தொழிலை

செய்ய வேண்டும்

என்ற ஆர்வமும்

அதற்கேற்ற

உழைப்பை

அளிக்க

முடியும்

என்ற

மனதைரியமும்

யாருக்கு

இருக்கிறதோ

அவர் எந்த ஒரு

தொழிலையும்

செய்யலாம்

 

நான் அரசனான பின்

என் ராஜ்ஜியத்தில்

பாதியை

உனக்கு அளித்து

உன்னை அரசாள

வைக்கும் போது

யாராலும் எந்த

ஒரு தொழிலையும்

செய்ய முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

உணர்த்துவேன்

 

இந்த குலத்தில்

பிறந்தவர்

இந்தத் தொழிலைத்

தான் செய்ய

வேண்டும்

இந்தக் குலத்தில்

பிறந்தவர் இந்தத்

தொழிலைச்

செய்யக் கூடாது

என்ற நிலையை

மாற்றுவேன்

 

துரோணர் :

உன்னால் முடியுமா

 

துருபதன் :

மக்களுக்கு நன்மை

பயக்கும் சட்டங்கள்

அனைத்தும்

அரியணை

ஏறியவர்களால்

உருவாக்கப்பட்டு

நடைமுறைப்

படுத்தப்பட்டு

இருக்கிறது என்பது

உனக்குத் தெரியாதா

 

துரோணர் :

இந்த உலகம்

உன்னைச்

செய்ய விடுமா

 

துருபதன் :

உலகத்தைப் பார்த்து

பயப்படுபவனால்

எந்த ஒரு

செயலையும்

செய்ய முடியாது

உலகத்தைப் பார்த்து

பயப்படாதவர்களால்

தான் எந்த ஒரு

செயலையும்

செய்ய முடியும்

 

துரோணர் :

அரியணையிலிருந்து

உன்னை

இறக்கி விட்டால்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-874 மரணமற்ற அஸ்வத்தாமன்-6 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-874

மரணமற்ற

அஸ்வத்தாமன்-6

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

அப்படி

என்றால்

நாம்

விருப்பப்பட்டதை

இருவரும்

செய்ய

மாட்டார்களா

 

துரோணர் :

விருப்பட்டதை

செய்ய

மாட்டார்கள்

விதிப்படி தான்

செய்வார்கள்

 

துருபதன் :

விதிப்படி தான்

செய்வார்கள்

என்றால்

நாம் ஏன் இந்த

இருவரையும்

நாட வேண்டும்

இருவரும்

தேவையில்லையே

 

துரோணர் :

விதியையே

மாற்றும் சக்தி

இந்த

இருவருக்கும்

உண்டு

அதனால்

தான்

அவர்களை

நாட வேண்டும்

 

துருபதன் :

நம்பி

வந்தவர்களின்

விதியை

மாற்றி

நல்வாழ்வை

அவர்களுக்கு

ஏற்படுத்தித்

தரலாமே

 

துரோணர் :

எது தேவையோ

அதற்கு விதியை

மாற்றுவார்கள்

எதற்கு

தேவையில்லையோ

அதற்கு விதியை

மாற்ற வேண்டிய

அவசியம் இல்லை

என்று விட்டு

விடுவார்கள்

 

துருபதன் :

புரிந்து

கொள்வது

கடினமாக

இருக்கிறது

 

துரோணர் :

புரிந்து

கொள்ள

முயற்சி

செய்யாதே

 

உணர்ந்து

கொள்ள

முயற்சி

செய்

 

சிலவற்றை

புரிந்து

கொள்ள

முடியாது

உணர்ந்து

கொள்ளத்

தான்

முடியும்

 

துருபதன் :

உன்னுடைய

அறிவுக்கும்

திறமைக்கும்

நீ அரசனாக

வேண்டியவன்

 

அரசனுக்குரிய

அனைத்து

தகுதிகளும்

உன்னிடம்

இருக்கிறது

 

நாளை நான்

அரசனானால்

என்னுடைய

ராஜ்ஜியத்தில்

பாதியை நான்

உனக்குத் தருவேன்

 

துரோணர் :

பிராமணர்கள்

கடவுளுக்காகவே

அர்ப்பணிக்கப்பட்டவர்கள்

 

கடவுளுக்கு

சேவை

செய்யவே

பிறந்தவர்கள்

 

கடவுளுக்கும்

மனிதனுக்கும்

தொடர்பை

ஏற்படுத்துபவர்கள்

 

கடவுளுக்கும்

மனிதனுக்கும்

பாலமாக இருந்து

செயல்படுபவர்கள்

 

கடவுளுக்கு சேவை

செய்யும் புனிதமான

வேலையைச்

செய்யும்

பிராமணர்கள்

மக்களை ஆளும்

அரசன்

வேலையைச்

செய்யக்கூடாது

 

பிராமணர்கள்

அரசாளக்

கூடாது

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////