February 26, 2020

பரம்பொருள்-பதிவு-140


             பரம்பொருள்-பதிவு-140

சகாதேவன் :
“என்னால்
ஏற்பட்டதல்ல
காலத்தால்
ஏற்பட்டது”

உலூபி :
“தவறை நீங்கள்
செய்து விட்டு
பழியை ஏன்
காலத்தின் மேல்
போடுகிறீர்கள் ? ”

சகாதேவன் :
“இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;
காலத்தை மீறி
எந்த ஒரு செயலும்
நடைபெறாது ; “

“நேற்று நடைபெற்றது ;
இன்று நடைபெற்றுக்
கொண்டிருப்பது ;
நாளை
நடைபெறப்போவது ;
அனைத்தும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;  

“காலத்தை மீறி
எதுவும் நடைபெறாது”

உலூபி :
“அரவானின்
பெயரை
சொல்லாமல்
நீங்கள்
மறைத்திருக்கலாமே ?”

சகாதேவன் :
“அரவானின் பெயரை
மறைப்பதால்
ஒரு பயனும்
ஏற்படப்
போவதில்லை”

“நான்
சொல்லாவிட்டாலும்
அரவானின் பெயரை
அனைவரும்
தெரிந்து
கொள்ளத்தான்
போகிறார்கள் ”

உலூபி :
“அப்படி என்றால்
சோதிட
சாஸ்திரத்தைப்
பயன்படுத்தி
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கப்போவதை
தடுத்திருக்கலாம்
அல்லவா?“

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலையும்
தடுத்து நிறுத்த
முடியாது - அந்த
செயலை
மாற்றியமைக்கத்
தான் முடியும் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
செய்யப்படும்
செயல்கள்
அனைத்தும்
நடக்கவிருக்கும்
செயலை மாற்றி
அமைப்பதற்கு
செய்யப்படும்
முயற்சிகள் தான்”

“அதனால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன்”

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத் தவிர
வேறு யாரும்
இந்த உலகத்தில்
இல்லையா?

சகாதேவன் :
“இரண்டு பேர்
இருக்கிறார்கள்”

உலூபி :
“கெளரவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தை பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்களை
நெருங்க
முடியாது
என்பதால்”

உலூபி :
“அப்படியென்றால்
பாண்டவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தைப் பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்கள்
நெருக்கமானவர்கள்
என்பதால்”

உலூபி :
“யார் அவர்கள்”

சகாதேவன் :
“சில கேள்விக்குரிய
விடையை
தெரிந்து கொள்ள
முயற்சி
செய்யக் கூடாது” .

“சில விஷயங்களை
தெரிந்து
கொள்ளாமல்
இருப்பதே நல்லது”  .

“நீங்கள் கேட்ட
கேள்விக்கு நான்
பதிலை சொன்னால்
உங்களுடைய
காதுகளை நீங்கள்
மூடிக் கொள்வீர்கள்”.

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-02-2020
//////////////////////////////////////////