இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அடக்கம்-பதிவு - 29
“”பதிவு இருபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
வசனம் -1:
“புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் , பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.”
---------மத்தேயு - 20 : 25
மொழியின் பெயரால் பிரிந்து கிடப்பவர்கள் ;
சாதியின் பெயரால் வேறுபட்டுக் கிடப்பவர்கள் ;
மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கிடப்பவர்கள் ;
பக்தியின் பெயரால் கண்மூடிக் கிடப்பவர்கள் ;
ஆன்மீகத்தில் பெயரால் அறியாமையில் கிடப்பவர்கள் ;
ஆகியோரின் இயலாமையை
தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ,
மொழியை வளர்த்துக் காட்டுகிறேன் ;
சாதியை பரப்பிக் காட்டுகிறேன் ;
மதத்தை நிறுத்திக் காட்டுகிறேன் ;
பக்தியை விளக்கிக் காட்டுகிறேன் ;
ஆன்மீகத்தில் உயர்த்திக் காட்டுகிறேன் - என்று
வீர வசனங்கள் பலவற்றைப் பேசி ,
தன்னை உயர்த்திக் கொள்பவர் ;
தன்னை வளர்த்துக் கொள்பவர் ;
தன்னுடைய நிலையை சிறப்பித்துக் கொள்பவர் ;
சுகத்தில் மூழ்கித் திளைப்பவர் ;
மகிழ்ச்சிக் கடலில் நீந்துபவர் ;
தன்னை தலைவராக மாற்றிக் கொண்டு ,
தன்னை தலைவராக உயர்த்திக் கொண்டு ,
அறியாமையில் கிடப்பவர்களை
அடிமையாக வைத்துக் கொண்டு
சுகபோகங்களில் திளைக்கின்றனர்.
அத்தகையவர்கள்,
அத்தகைய தன்மையை உடையவர்கள் ,
தங்களை தலைவராக காட்டிக் கொண்டவர்கள் ;
தங்களை தலைவராக வெளிப்படுத்திக் கொண்டவர்கள் ;
தங்களை தலைவராக பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்;
தங்களை தலைவராக முன்னிலைப் படுத்திக் கொண்டவர்கள்;
மொழியின் மேல் வெறி
சாதியின் மேல் வெறி
மதத்தின் மேல் வெறி ஆகியவற்றை மனதில் கொண்டு
அன்பையும் , கருணையும் மக்கள் மனதில் விதைக்காமல்
மக்கள் மனதில் வெறியை விதைத்து விட்டதால்
மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுப் பிரிந்து கிடக்கின்றனர்.
மக்கள் பிரிந்து கிடக்கும் வரை ,
மக்கள் செயலற்று இருக்கும் வரை ,
மக்கள் சுயநினைவற்று இருக்கும் வரை ,
மக்கள் அறியாமையில் உழலும் வரை ,
மக்கள் குழம்பிக் கிடக்கும் வரை ,
மக்கள் அறிவு தெளிவு பெறாத வரை ,
மக்கள் யோசிக்கும் திறன் இல்லாமல் இருக்கும் வரை தான்
மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் ;
மக்களை அடிமையாக நடத்த முடியும் ;
தங்கள் வாழ்வை செழிப்பாக்க முடியும் ;
தங்கள் வாழ்வை இடையூறு இல்லாமல் செலுத்த முடியும் ;
தங்கள் வாழ்வை கவலை இல்லாமல் கழிக்க முடியும் ;
தங்கள் வாழ்வை இன்பத்துடன் நடத்த முடியும் ;
தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டே போக முடியும் ;
இதற்கு மாறாக ,
மக்கள் சிந்திக்கும் திறன் பெற்றால் ,
மக்கள் அறிவில் தெளிவு பெற்றால் ,
மக்கள் சுயஉணர்வு பெற்றால் ,
ஆளும் வர்க்கத்தின் அச்சாணி கழன்று விடும் ,
அடிமையாக்கும் சிந்தனை தகர்ந்து விடும் ,
சிம்மாசனங்கள் உடைபட்டு விடும் ,
செங்கோல்கள் கயலான் கடைக்கு ஓடிவிடும் ,
சுகபோக வாழ்க்கை தகர்ந்து விடும் ,
சொத்துக்கள் புதைந்து விடும் ,
செல்வங்கள் மரணித்து விடும் - என்ற காரணத்திற்காக
தங்கள் வாழ்வு கவலைப்பட்டு விடக்கூடாது ,
தங்கள் வாழ்வு சிதைக்கப்பட்டு விடக்கூடாது ,
தங்கள் வாழ்வு கலைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,
மக்களை அறியாமையில் வைத்து
பிளவுகளை உண்டாக்கி ,
பிரிவுகளை ஏற்படுத்தி ,
சண்டைகளை உருவாக்கி ,
ரத்த ஆறை ஓடவிட்டு ,
தாங்கள் தலைவர்களாகவும்
தங்களுடைய தலைவர் பதவியை
தக்க வைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.
அறியாத நெஞ்சம்
புரியாத மனம்
தெரியாத உணர்வு
ஆகியவற்றை விழிகளில் தேக்கி நெஞ்சில் நிறுத்தி
வார்த்தையில் செதுக்கி
உலாவும் உள்ளன்பு கொண்ட நெஞ்சம்
பகைபாராத மனம்
ஆகியவற்றில் கூட நஞ்சு ஊற்றப்பட்டது .
ஆளும் வர்க்கம்,
ஆளத்துடிக்கும் வர்க்கம் ,
அடிமைப்படுத்தும் வர்க்கம்,
உயர்ந்தோர் என்று தன்னை காட்டிக் கொள்ளும் வர்க்கம் ,
மக்கள் மனதில் அடிமைத்தனத்தை விதைத்து
அவர்களை அடிமையாக்கி
தனக்கு காவலாக்கி
தனக்கு ஏவலாக்கி
தலைவர்களாக இருக்கின்றனர்.
அத்தகையவர்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் .
அவர் செயல்பாடுகளை உணர்ந்திருக்கிறீர்கள் என்கிறார் இயேசு .
வசனம் - 2 , 3:
“உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது ; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் , அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரனாயிருக்கக் கடவன்.”
--------மத்தேயு - 20 : 26
“உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் ,அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக் கடவன்.”
---------மத்தேயு - 20 : 27
தான் எல்லாம் தெரிந்தவன்
தான் எல்லாம் அறிந்தவன்
தான் எல்லாம் உணர்ந்தவன்
அறிவில் சிறந்தவன் - என்ற
ஆணவத்தை மனதில் கொண்டு சுற்றித் திரிந்தால்
வாழ்வில் எதையும் கற்றுக் கொள்ளவும் முடியாது
யாரும் கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள்
யாரும் கற்றுக் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கவும் மாட்டார்கள்.
சமுதாயம் அத்தகையவர்களை உதாசீனப்படுத்தும் ;
ஏளனப்பார்வை பார்த்து சிரிக்கும் ;
அகம்பாவம் பிடித்தவன் என்று சொல்லி கோபக்கணை தொடுக்கும் ;
எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான் என்று பேசும் ;
சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறான் என்று சொல்லும் ;
அத்தகைய நிலை கொண்டவர்களால்
தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்பவர்களால்
தன்னுடைய நிலையை சமுதாயத்தில்
உயர்வாக காட்டிக் கொள்பவர்களால்
இந்த சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் தான்
ஆளாக வேண்டுமே ஒழிய எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
அனைத்தும் தெரிந்திருந்தாலும் ;
எல்லாம் அறிந்திருந்தாலும் ;
உண்மை புரிந்திருந்தாலும் ;
நியாயம் தெரிந்திருந்தாலும் ;
நீதி விளங்கியிருந்தாலும் ;
சட்டம் அறிந்திருந்தாலும்;
வியாபாரம் பண்ணியிருந்தாலும் ;
கலைகள் கற்றிருந்தாலும் ;
அனுபவங்கள் பெற்றிருந்தாலும் ;
மறைபொருள் விளங்கியிருந்தாலும் ;
ரகசியங்கள் வெளிப்பட்டிருந்தாலும் ;
சூட்சுமங்கள் புரிந்திருந்தாலும் ;
ஆதிஅந்தம் தெளிவுபெற்றிருந்தாலும் ;
மடமைகள் விலகியிருந்தாலும் ;
அறியாமை நீங்கியிருந்தாலும் ;
ஏழ்மை ஒதுங்கியிருந்தாலும் ;
சிந்தனை சீர்பெற்றிருந்தாலும் ;
செயல்கள் வலுப்பெற்றிருந்தாலும் ;
உயர்வுகள் அரியனைஏறியிருந்தாலும் ;
புகழ்கள் முடிசூட்டப்பட்டிருந்தாலும் ;
இன்பங்கள் ஏற்றம் பெற்றிருந்தாலும் ;
தனக்கு எதுவும் தெரியாவர் போலவும்
எதுவும் அறியாதவர் போலவும்
அடக்கமாகவும் ,எளிமையாகவும், பணிவாகவும் இருந்து
தன்னை தன் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவர்
பதவி பெற்றவர் ; அதிகாரம் உடையவர் ; தலைவர் ஆனவர் ;
சமுதாயத்தில் எளிமையாக நடந்து கொண்டால்,
அவர் கற்றுக் கொள்ள ஆசைப் பட்டால்
இந்த உலகம் ஓடி வந்து கற்றுக் கொடுக்கும் .
அவர் பேசுவதை இந்த உலகம் செவி கொடுத்து கேட்கும் .
அவர் செய்யும் செயலுக்கு இந்த உலகம் ஒத்துழைப்பு கொடுக்கும் .
அவர் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கும்.
எளிமையானவர் முன்பு ,
தன்னை தாழ்த்திக் கொள்பவர் முன்பு ,
இந்த உலகம் அடிபணியும்
அவர் மேல் புகழ்மாலை போடும்
அவர் மேல் பாமாலை பாடும்.
அவர் பேச்சுக்கு இந்த அவனி கட்டுப்படும்
உறவுகள் உறவுபடும்
நட்புகள் ஏற்றம் பெறும்
அன்புகள் விளக்கம் பெறும் .
தன் நிலையை தாழ்த்தி இந்த
சமுதாயத்தில் எளிமையாக நடந்து கொள்கிறவன்
இந்த சமுதாயத்தால் மதிக்கப் படுவான்
தன் நிலையை உயர்த்தி இந்த
சமுதாயத்தில் ஆணவத்துடன் நடந்து கொள்கிறவன்
இந்த சமுதாயத்தால் மிதிக்கப்படுவான்.
வார்த்தைகளால் வறுக்கப்படுவான்.
ஏளனங்களால் பொசுக்கப்படுவான்.
எனவே உங்களில் யாராவது பெரியவனாக , உயர்ந்தவனாக,
முதல்வனாக ,தலைவனாக ,வழி நடத்துபவனாக,
மாறவேண்டும் என்று நினைத்தால்
ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால்
நீங்கள் இந்த சமுதாயத்தில் எளியவனாகவும் ;
சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவனாகவும்;
உதவி செய்யும் சிந்தனை உடையவனாகவும் ;
எல்லோர்க்கும் கீழோனாய் ;
கடைநிலை ஊழியனாய் ;
சேவகனாய் இருக்கும் மனநிலை கொண்டு
செயல்பட்டால் தான் நீங்கள் அடைய நினைத்த இலக்கை
அடைய முடியும் என்கிறார் இயேசு .
திருவள்ளுவர்:
“”””அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்”””
-----திருவள்ளுவர்----திருக்குறள்---
முத்தமிழான ,
இயல் வடிவாக படைக்கப்படும் படைப்புகள் ,
இசை வடிவாக படைக்கப்படும் படைப்புகள் ,
நாடகம் வடிவாக படைக்கப்படும் படைப்புகள்,
கால மாற்றத்தால் ,
இலக்கியம் வடிவாக படைக்கப்படும் படைப்புகள்,
ஓலி வடிவாக படைக்கப்படும் படைப்புகள்,
ஓலி - ஒளி வடிவாக படைக்கப்படும் படைப்புகள்,
திரையுலகத்தின் மேம்பட்ட படைப்புகள் ,
சின்னத்திரை வடிவாக படைக்கப்படும் படைப்புகள் ,
வெள்ளித்திரை வடிவாக படைக்கப்படும் படைப்புகள்,
என பல்வேறு வடிவங்களில்
படைப்புகள் படைக்கப்படுகிறது.
படைப்புகள் வெளிவிடப்படுகிறது .
அவ்வாறு படைக்கப்படும் படைப்புகள்
சிந்தனையில் நிறுத்தப்படுகிறது ;
சீர்துhக்கி பார்க்கப்படுகிறது ;
பலநிலைகளில் விமர்சிக்கப்படுகிறது ;
சிலமனங்களால் போற்றப்படுகிறது ;
சிலரால் இகழப்படுகிறது ;
வரலாறால் செதுக்கப்படுகிறது ;
அழியாத காவியமாகிறது ;
மேலும் மக்கள் மனங்களில் படைப்புகள் ,
உவகையை பூக்க வைக்கிறது ;
சிந்தனையை திறக்க வைக்கிறது ;
அன்பை உணர வைக்கிறது ;
பாசத்தைக் காட்ட வைக்கிறது ;
வரலாறை அறிய வைக்கிறது ;
பக்தியை வளர்க்க வைக்கிறது ;
கடவுளை பார்க்க வைக்கிறது ;
ஆன்மீகத்தில் தெளிய வைக்கிறது ;
இரக்கத்தை வளர வைக்கிறது ;
கருணையில் நனைய வைக்கிறது ;
உண்மையை புதுப்பிக்க வைக்கிறது ;
பொய்மையை மாற்ற வைக்கிறது ;
புதுமைகளை பிறக்க வைக்கிறது ;
பழமைகளை புதைக்க வைக்கிறது ;
கண்ணீரை துடைக்க வைக்கிறது ;
கவலைகளை மறக்க வைக்கிறது ;
துன்பங்களை துறக்க வைக்கிறது ;
பண்புகளை பெற வைக்கிறது ;
உண்மைகளை உணர வைக்கிறது ;
நல்லவைகளை அறிய வைக்கிறது ;
தீயவைகளை கழிய வைக்கிறது ;
ரகசியங்களை விளங்க வைக்கிறது ;
சூட்சுமங்களை பெற வைக்கிறது ;
கடவுளை புரிய வைக்கிறது ;
பக்தியை பரப்ப வைக்கிறது ;
எண்ணங்களை செதுக்க வைக்கிறது ;
தரம் மிக்க படைப்புகள்,
தரணி ஆளும் படைப்புகள் ,
காலத்தை வென்று நின்ற படைப்புகள்,
போன்ற படைப்புகளை படைக்கும் படைப்பாளிகள்
தங்கள் படைப்புகள் காலத்தால் காவியமாக வேண்டும்
மக்களால் பேசப்பட வேண்டும்
நல்லது என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்
என்று படைப்புகளை படைப்பார்களே அல்லாமல் ,
தாங்கள் பெயர் பெற வேண்டும்
தாங்கள் புகழப்பட வேண்டும்
தாங்கள் போற்றப்பட வேண்டும்
தாங்கள் முன்னிறுத்தப்பட வேண்டும்
தாங்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்
என்று படைப்பதில்லை .
தாங்கள் அடக்கமாகவும் ,எளிமையாகவும்
பின்னால் இருந்து கொண்டு படைப்புகளை முன்னே நிறுத்துவதால்
தன்னை அடக்கமாக்கி ,எளிமையாக்கி
தன் படைப்புகளை முன் நிறுத்துவதால்
சமுதாயத்தால் அவர்கள் உயர்த்தப்படுகிறார்கள்.
அடக்கம் அவர்களை உயர்த்துகிறது .
அமரருள் என்றால் அமர்ந்த அருள் எனப்படும்
தான் என்ற தன்முனைப்பு அதாவது ஆணவம்
அடங்கிய நிலை அமர்ந்த அருள்.
தான் என்ற தன்முனைப்பு நீங்கி
அடக்கம் கொண்டு செய்யப்படும்
எந்த செயலும் ஒருவரை வாழ்க்கையில்
உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் .
தன்னால் படைக்கப்படும் படைப்புகளை
முன்னிறுத்த வேண்டும் ;
முதன்மைப்படுத்த வேண்டும் ;
பாராட்டுதலுக்கு உட்படுத்த வேண்டும் ;
போற்றுதலுக்கு உயர்த்தப்பட வேண்டும் ;
வரலாறை படைக்க வேண்டும் ;
தரணி வியக்க வேண்டும் ;
மனங்கள் நெகிழ வேண்டும் ;
என்று நினையாமல்,
தன்னை முதன்மைப்படுத்தி ,
தன் சிந்தனையை முதன்மைப்படுத்தி ,
தன் திறமையை முதன்மைப்படுத்தி ,
தான் புகழப்பட வேண்டும் என்று அடக்கமாக இல்லாமல்
தன்னை முதன்மைப்படுத்தி காரியம்
ஆற்றுபவர்களுடைய படைப்புகள்
சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
புறக்கணிக்கப்படுகிறது.
தான் என்ற தன்முனைப்பு கொண்டு
ஆணவத்துடன் அடக்கம் இல்லாமல்
செய்யப்படும் படைப்புகள் செயல்கள்
சமுதாயத்தால் தாழ்த்தப்படுகிறது .
தன்னை உயர்த்தவேண்டும்
தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கில்
செய்யப்படும் செயல்களை சமுதாயம் ஏற்பதில்லை
சமுதாயம் அங்கீகரிப்பதில்லை .
தான் என்ற தன்முனைப்பு நீங்கி
ஆணவம் நீக்கப்பட்டு செய்யப்படும் செயல்கள்
அடக்கத்துடன் செய்யப்படும் செயல்கள்
ஒருவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்
வாழ்க்கையை உயர்த்தும்
மகிழ்ச்சியை உண்டாக்கும் .
தான் என்ற தன்முனைப்பு கொண்டு
ஆணவத்துடன் அடக்கம் இல்லாமல் செய்யப்படும் செயல்கள்
ஒருவனை வாழ்க்கையில் தாழ்த்தும்.
வாழ்க்கையில் இருள் நிலையை உண்டாக்கும்
துன்பத்தை ஏற்படுத்தும்
அடக்கம் உடைய வாழ்க்கை
அருள் நிறைந்ததாக இருக்கும் !
அடக்கம் இல்லாத வாழ்க்கை
இருள் நிறைந்ததாக இருக்கும்!
என்கிறார் திருவள்ளுவர்.
இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்:
இயேசு ,
அடக்கத்துடன் ஒருவன் செயலைச் செய்தால்
அவன் இந்த சமுதாயத்தால் மதிக்கப்படுவான் .
அடக்கம் இல்லாமல் ஒருவன் செயலைச் செய்தால்
அவன் இந்த சமுதாயத்தால் மிதிக்கப்படுவான் என்கிறார்.
அவ்வாறே ,
திருவள்ளுவரும் ,
அடக்கத்துடன் ஒருவன் செயலைச் செய்தால்
அவன் இந்த சமுதாயத்தால் உயர்த்தப் படுவதுடன்
அவன் வாழ்க்கை அருள் நிறைந்ததாக இருக்கும்.
அடக்கம் இல்லாமல் ஒருவன் செயலைச் செய்தால்
அவன் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவதுடன்
அவன் வாழ்க்கை இருள் நிறைந்ததாக இருக்கும் என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஇருபத்துஒன்பது ந்தான்முற்றே “”