April 07, 2020

பரம்பொருள்-பதிவு-181


              ஜபம்-பதிவு-429
             (பரம்பொருள்-181)

“அரவான்
உறவு முறைக்குள்
இருக்கிறான்  ;
உறவினனாக
இருக்கிறான் ;
என்பதற்காக
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியவில்லை
என்று
சொல்லும் - நீ
நாளை
நடக்கப் போகும்
குருஷேத்திரப்
போரில்
உன்னை
எதிர்த்து
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
எப்படி
கொல்லப்
போகிறாய் ? “

“அவர்கள்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ? “

“எனக்கு
எதிராக நின்று
கொண்டிருப்பவர்கள்
என்னுடைய
உறவினர்கள்
ஆகவே
அவர்களை
நான் கொல்ல
மாட்டேன்
என்று
சொல்வாயா “

“இங்கேயே
அரவான்
எனக்கு உறவாக
இருக்கிறான் ;
ஆகவே
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியாது - என்று
சொல்லும் நீ
எப்படி
நாளை
நடக்கப் போகும்
போரில்
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
கொல்லப்
போகிறாய் ? “

தர்மர் :
“உறவினர்களாக
இருப்பவர்கள்
நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
எனக்கு
எதிராக
நிற்கும் போது
உறவினர்களாக
நின்றால் தான்
நான் தயக்கம்
காட்ட
வேண்டும்  

“ஆனால்
அவர்கள்
அனைவரும் என்
முன்னால்
உறவினர்களாக
நிற்கப்போவதில்லையே
எதிரிகளாகத்
தானே நிற்கப்
போகிறார்கள் “

“எதிரிகளாக
நிற்கப்
போகிறவர்களை
கொல்வதில்
எனக்கு
எந்தவிதமான
தயக்கமும்
இல்லை  

“ஆனால்
இங்கேயோ
அரவான் என்
முன்னால்
எதிரியாக
நிற்கவில்லையே
உறவாகத் தானே
நிற்கிறான் “

“உறவாக 
நிற்பவனுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட
முடியும் “

“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் “

“அதனால்
தான் நான்
சொல்கிறேன்
அரவான்
தலையை
என்னால்
வெட்ட
முடியாது என்று  

(என்று
சொல்லி
விட்டு
அமைதியாக
நின்று
கொண்டிருந்தார்
தர்மர்)

கிருஷ்ணன் :
“பீமா…………………………………?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-180


              ஜபம்-பதிவு-428
            (பரம்பொருள்-180)

 (கிருஷ்ணன்
தர்மரை
அழைத்து
தர்மரிடம்
பேசினார்)

கிருஷ்ணன் :
“தர்மா ! நீ
அனைத்தும்
அறிந்தவன்  ;
உண்மையை
உணர்ந்தவன் ;
தர்மத்தை
கடைபிடிப்பவன் ;
பஞ்ச
பாண்டவர்களில்
பெரியவன்  ;
அதனால் தான்
அரவானுடைய
தலையை
வெட்டும்
மிகப்பெரிய
பொறுப்பை
உன்னிடம்
ஒப்படைத்திருக்கிறேன் “

“நீ தான்
அரவான்
தலையை
வெட்ட
வேண்டும் “

“வாளை
எடுத்துக் கொள்
தர்மா !
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு “

(தர்மர் வாளை
எடுக்கிறார் ;
அரவானைப்
பார்க்கிறார் ;
சிறிது நேரம்
நிற்கிறார் ;
கொஞ்ச நேரம்
யோசிக்கிறார் ;
வாளை
காளி தேவியின்
சிலையின்
முன்னால்
அப்படியே
வைத்து விட்டு
பின்னால்
அப்படியே
நடந்து வந்து
பழைய
இடத்திலேயே
நின்று
கொள்கிறார்)

தர்மர் :
“என்னால்
அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லை
வெட்டவும்
முடியாது”

கிருஷ்ணன் :
“அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லையா ?
அல்லது
வெட்ட
முடியாதா ? “

தர்மர் :
“வெட்ட
முடியவில்லை
என்ற
காரணத்தினால்
தான்
வெட்ட
முடியாது
என்றேன் “

கிருஷ்ணன் :
“அதைத் தான்
ஏன் என்று
கேட்கிறேன் “

தர்மர் :
“அரவான்
பச்சிளம்
பாலகனாக
இருக்கிறான்
அது
மட்டுமல்ல
அரவான்
உறவு
முறைக்குள்
இருக்கிறான் ;
உறவாகவே
இருக்கிறான் ; “

“உறவாக
இருக்கக்கூடிய
அரவானுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட முடியும்”

“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் ;
அதனால் தான்
அரவானை
என்னால்
வெட்ட
முடியாது
என்றேன் ; “

கிருஷ்ணன் :
“நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
உனக்கு
எதிராக நின்று
போர் செய்யப்
போகிறவர்கள்
யார் என்று
நினைத்தாய்  ? “

“எதிரிகள்
என்று
நினைத்தாயா
எதிரிகள்
இல்லையே !”

“அவர்கள்
அனைவரும்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ! “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-179


                  ஜபம்-பதிவு-427
                (பரம்பொருள்-179)

“கிருஷ்ணன் களப்பலி
நடக்கப்போகும்
காளிதேவி சிலை
இருக்கும் இடத்திற்கு
வந்து நின்ற போது
அங்கு நின்று
கொண்டிருந்த
பஞ்சபாண்டவர்கள்
அனைவரும்
அவருக்கு இரண்டு
கரங்களையும்
குவித்து வணக்கம்
செலுத்தினர் “

“பதிலுக்கு கிருஷ்ணனும்
வணக்கம் செலுத்தினார்”

“அரவான் கிருஷ்ணன்
காலில் விழுந்து
வணங்கினான் “

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“உன்னுடைய புகழ்
என்றும் நிலைத்து
இருக்கட்டும் அரவான் “

(கிருஷ்ணன்
பஞ்சபாண்டவர்கள்
பக்கம் திரும்பினார்)

“களப்பலிக்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
நான் சொன்னபடி
செய்து முடித்து
விட்டீர்களா ? “

தர்மர் :
“செய்து முடித்து
விட்டோம்  

“நாங்கள் எந்த
செயல்களை செய்ய
வேண்டும் என்று
எங்களிடம்
செய்யச் சொன்னீர்களோ
அந்த செயல்களை
செய்து முடித்து
விட்டோம் “

“களப்பலி
கொடுப்பதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து முடித்து
விட்டோம் “

“தங்கள் வரவுக்காக
காத்துக்
கொண்டிருந்தோம் “

“இப்போது
களப்பலி கொடுப்பதற்கு
தங்கள் உத்தரவிற்காக
காத்துக்
கொண்டிருக்கிறோம் “

கிருஷ்ணன் :
“உங்களிடம் நான்
ஏற்கனவே
சொன்னபடி
இன்று நடந்து
கொண்டிருந்த
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் “

“இப்போது
அமாவாசை நடந்து
கொண்டிருக்கிறது “

“நாளை தான்
அமாவாசை என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
துரியோதனன்
நாளைக்குத் தான்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத்
தேடி வருவான் “

“அரவானைத் தேடி
துரியோதனன் இன்று
வரமாட்டான்  

“அதனால்
இன்று நடந்து
கொண்டிருக்கும்
அமாவாசையில் - நாம்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கும் போது
துரியோதனனால்
நமக்கு எந்தவிதமான
இடையூறும்
ஏற்படப்போவதில்லை “

“அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
எந்தவிதமான
தடையையும் யாரும்
ஏற்படுத்தப்போவதும்
இல்லை “

“எந்தவிதத் தடையும்
இல்லாமல் நாம்
களப்பலியை
நடத்தலாம் “

“களப்பலி
கொடுப்பதற்குரிய நேரம்
நெருங்கி விட்டது”

“களப்பலியை நாம்
ஆரம்பிக்கலாம் “

“அரவான் நீ
தயாராக
இருக்கிறாயா ? “

அரவான் :
“நான் தயார்”

(என்று சொல்லிக்
கொண்டே அரவான்
தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
வசதியாக தரையில்
முட்டிகால்
போட்டுக் கொண்டு
இருந்தான் ;
தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
ஏதுவாக தன்னுடைய
தலையை தாழ்த்தி
வைத்துக்
கொண்டிருந்தான் ; )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////