August 02, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53

பாண்டிய நாட்டில்
உள்ள
பிசிர் என்ற ஊரில்
ஆந்தையார் என்பவர்
வாழ்ந்து வந்தார்
அவருடைய ஊரின்
பெயரான பிசிர்
மற்றும்
அவருடைய
இயற்பெயரான
ஆந்தையார் ஆகிய
இரண்டையும்
சேர்த்து அவர்
பிசிராந்தையார் என்று
அழைக்கப்பட்டார்.


கோப்பெருஞ்சோழன்
சோழ நாட்டில்
உறையூர் என்னும்
பகுதியை ஆண்டு
கொண்டிருந்தான்

பிசிராந்தையார்
சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
மீது  அளவற்ற
அன்பு கொண்டு
இருந்த காரணத்தினால்
கோப்பெருஞ்சோழனைப் பற்றி
நிறைய பாடல்களை
எழுதி இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆவல் கொண்டு
தன்னுடைய
வாழ்க்கையின்
நாட்களை கழித்துக்
கொண்டு இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசையை
தன் வாழ்க்கையின்
லட்சியமாகக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருந்தார்

கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசை
பிசிராந்தையார்
மனதில் இருந்தாலும்
பிசிராந்தையாரால்
கோப்பெருஞ்சோழனை
சந்திக்க முடியவில்லை
ஏனெனில்
பிசிராந்தையாருடைய
ஊரானது
பாண்டிய நாட்டில்
இருந்தது
அது சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
ஆளும்
சோழ நாட்டிலிருந்து
வெகு தொலைவில்
இருந்தததால்
பிசிராந்தையாரால்
உடனடியாக  
சோழ நாட்டிற்கு சென்று
கோப்பெருஞ்சோழனை
சந்தித்து
தன்னுடைய நட்பை
வெளிப்படுத்த
முடியவில்லை.
இந்த ஏக்கம்
பிசிராந்தையார்
மனதில் என்றும்
இருந்து கொண்டே
இருந்தது.

பிசிராந்தையாரின்
அளவற்ற புகழையும்,
வியக்க வைக்கும்
தமிழறிவையும்
கேள்விப்பட்ட
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார் மீது
உண்மையான
நட்புக் கொண்டு
இருந்தார்
பிசிராந்தையாரைச்
சந்திக்க வேண்டும்
என்ற பேராவலைக்
கொண்டு இருந்தார்
இருந்தாலும்,
கோப்பெருஞ்சோழனுடைய
அளவுக்கு அதிகமான
வேலைப் பளுவின்
காரணமாக
பிசிராந்தையாரைச்
சந்திக்க முடியவில்லை

இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்துக்
கொள்ளாமலேயே
அரசன், புலவன்
என்ற பேதம்
பாராட்டாமல்
உயர்வு, தாழ்வு
என்ற
மனப்பான்மை
கொள்ளாமல்
நட்புடன் பழகி
வந்தனர்.
அவர்கள் இருவரும்
தாங்கள் சந்தித்துக்
கொள்ளக்கூடிய
அந்த முக்கியமான
நாளை மிக ஆவலுடன்
எதிர்ப்பார்த்து
காத்துக் கொண்டிருந்தனர்

கோப்பெருஞ்சோழனின்
ஆட்சி நடந்து
கொண்டிருக்கும்போதே
அவருடைய இரண்டு
புதல்வர்களும்
ஆட்சியைக் கைப்பற்றி
அரியணை ஏறுவதற்காக
தன்னுடைய தந்தையான
கோப்பெருஞ்சோழனுக்கு
எதிராக போரிடத்
துணிந்தனர்,

இதனை
அறிந்து கொண்ட
கோப்பெருஞ்சோழன்
மன வேதனைப்பட்டு
ஆட்சியை விட்டு விட்டு
வடக்கிருந்து
உயிர் விடத்
துணிந்தான்

இவ்வுலகில்
வாழ்ந்தது
போதும் என்று
முடிவு செய்து,
இவ்வுலக
வாழ்க்கையைத் துறக்க
விரும்பும் அரசர்கள்
வடக்கிருந்து
உயிர் விடுதல்
என்பது
அக்காலத்திய மரபு

வடக்கிருத்தல் என்பது
தன்னுடைய
நாட்டில் உள்ள
ஆறு, குளம் போன்ற
நீர் நிலைகளுக்குச் சென்று
அதன் இடையே
மணல் திட்டு
ஒன்றை உருவாக்கி
வடக்கு திசை
நோக்கி
அமர்ந்தபடி
உண்ணா நோன்பிருந்து
மரணத்தை தழுவுவது
எனப்படும்

--------- இன்னும் வரும்
------------02-08-2018
//////////////////////////////////////////////