April 20, 2019

பரம்பொருள்-பதிவு-4


                      பரம்பொருள்-பதிவு-4

“நம் உடலில் கடவுள்
எங்கு இருக்கிறார்.
அவரை அடையக்கூடிய
வழி என்ன,
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் என்பதை
உணர முடியாமல்
இருப்பவர்களும்
கடவுளுடன் இணைந்து
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
இந்த மூன்று
விஷயங்களையும்
அடிப்படையாக வைத்து
இந்துமதக் கோயில்கள்
அன்று முதல்
இன்று வரை
கட்டப்பட்டு வருகின்றன “

“இந்த மூன்று
விஷயங்களை
அடிப்படையாக வைத்து
உலகில் உள்ள அனைத்து
இந்து மதக் கோயில்களும்
கட்டப்பட்டு இருந்தாலும்
முக்கியமான மூன்று
விஷயங்களை சூட்சுமமாக
தன்னுள் கொண்டு
இந்துமதக் கோயில்கள்
செயல்பட்டு வருகின்றன “

ஒன்று :
சக்தியை உற்பத்தி
செய்தல்

இரண்டு :
சக்தியை குவித்து
வைத்தல்

மூன்று :
சக்தியை பரிமாற்றம்
செய்தல்

“ உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களையும்
எடுத்துக் கொண்டால்
இந்துமதக் கோயில்கள்
ஒவ்வொன்றும்
ஒரு குறிப்பிட்ட
சக்தியை உற்பத்தி செய்து ;
அந்த சக்தியை
குவித்து வைத்து ;
அந்த சக்தியை
பரிமாற்றம் செய்து
கொண்டிருக்கும் ;
மிகவும் சக்தி வாய்ந்த
சக்தி மையங்களாகத்
திகழ்ந்து கொண்டு
இருக்கின்றன ;
இந்துமதக் கோயில்கள்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள் “

“இந்த பிரபஞ்சத்தில்
பல்லாயிரக்கணக்கில்
பல்வேறு விதமான
சக்திகள் இருக்கும் ‘போது “

“ஒரு குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து,
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள் செலுத்தி……………!

“ அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குள் சுற்றி
வரும்படி குவித்து………….!

கோயிலுக்கு கடவுளை
வணங்க வருபவர்கள்
குவித்து வைக்கப்பட்டுள்ள
அந்த குறிப்பிட்ட
சக்தியை மட்டும்
தங்களுக்குள் பரிமாற்றம்
செய்து கொள்ளும்
வகையில்……………………………..!

இந்துமதக் கோயில்களை
கட்டி வைத்திருக்கின்றனர்”

“இத்தகைய கடினமான
ஒரு மெய்ஞ்ஞான
விஷயத்தையும் ;
கற்பனையும் செய்து
பார்க்க முடியாத
அறிவுபூர்வமான
ஒரு விஷயத்தையும் ;
மக்கள் அனைவரும்
பயன்பெற வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன் நம்
முன்னோர்கள் செய்து
வைத்திருக்கிறார்கள் ; “

ஒன்று
சக்தியை உற்பத்தி
செய்தல்

“ கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பல்வேறு முறைகள்
கையாளப்பட்டாலும்
முக்கியமான
இரண்டு முறைகள்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
பயன்படுத்தப்படுகின்றன ”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி

“இந்த இரண்டு
நிலைகளில் பெறப்படும்
சக்தியையும் கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியானது உற்பத்தி
செய்யப்படுகிறது”

(அ) பிரஞ்சத்தின் மூலம்
பெறப்படும் சக்தி

“ஒரு கோயில் எந்த
சக்தியை அளிப்பதற்காக
உருவாக்கப்பட்டதோ
அந்த சக்தியை
பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கும் வகையில்
இந்துமதக் கோயில்கள்
அமைக்கப்பட்டிருக்கும்”

“கோயிலில் பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
பிரபஞ்ச சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதற்கு
கோபுரக் கலசங்கள்
பயன்படுத்தப்படுகின்றன”

--------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  20-04-2019
/////////////////////////////////////////////////////