08-03-2021
மகளிர் தின வாழ்த்து!
மதம் என்னும்
மாடி கட்டி,
சாதி என்னும்
சுவற்றை எழுப்பி,
வேதத்தை
வேலியாக்கி,
கண்மூடிப்
பழக்கங்களை
கதவாக்கி,
ஏன் என்று
கேட்காதே
அது பாவம்,
என்று
கூக்குரலிடும்
மனிதத்
தன்மையற்ற
மனிதர்கள்
வாழும் இந்த
சமுதாயத்தில்………?
பேதையராய்ப்
பெண்டிரைக்
கண்டு,
அவர்களை
ஊமையராக்கி,
ஆமை
நிலையை
சமுதாயத்தில்
உருவாக்கி,
பெண்மை
என்றால்
விலை
என்ன என்று
கேட்கும்
சோரம் போன
மனிதர்கள்,
சோற்றலடித்த
பிண்டங்கள்,
அன்பும்
கருணையும்
இறந்த
உள்ளத்தைக்
கொண்ட
மனிதர்கள்,
வாழும் இந்த
சமுதாயத்தில்
ஒரு பெண்
சுயமரியாதையுடன்
தலை நிமிர்ந்து
தன்னம்பிக்கையுடன்
வாழ வேண்டும்
என்றால்
அவள் தன்
உரிமையைப்
பெற்றுத் தான்
வாழ வேண்டும்
உரிமை என்பது
பிச்சை கேட்டு
பெறுவது அன்று
போராடிப்
பெறுவது
பெண்ணே!
இந்த சமுதாயத்தில்
நீ உன்னுடைய
உரிமையைப்
பெறுவதற்காகப்
போராடு
எதிர்ப்பாற்றில்
நீராடு
ஏளனத்தை
புறந்தள்ளி
விட்டு
உண்மையானவர்களுடன்
உறவாடு
இந்த சமுதாயத்தில்
வாழ்வதற்கென்று
தனியாக
உனக்கென்று
ஒரு வேலை தேடு
சீரோடு
சிறப்போடு
புகழோடு
பேரோடு
கரவொலிகள்
எதிரொலிக்கும்
நீ இருக்கும்
திசைகளெங்கும்
கவலைகள்
காற்றோடு
கலக்கட்டும்
கலங்காதிரு
பெண்ணே
நாளைய
விடியல்
நிச்சயம்
உனக்குத் தான்!
-------என்றும் அன்புடன்
------K.பாலகங்காதரன்
-------M.Ed., LLB
-------08-03-2021
///////////////////////////////