June 15, 2019

பரம்பொருள்-பதிவு-25


                      பரம்பொருள்-பதிவு-25

11.கும்பாபிஷேகம்

“பிரதானமாக
இருக்கக்கூடிய ;
முக்கியமாக
இருக்கக்கூடிய ;
கும்பத்தை
தலைமை ஆசாரியன்
(அல்லது)
முக்கியமான
ஆசாரியன் தலையில்
எடுத்துக் கொண்டு
சகலவிதமான
உபசாரங்களுடன்
கோயிலை
சுற்றி வந்து
கர்ப்பக் கிரகத்தில்
நுழைய வேண்டும் ”

“கர்ப்பக் கிரகத்தில்
நுழைந்து கும்பத்தை
கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலைக்கு முன்னால்
வைக்க வேண்டும்”

“எல்லாம் வல்ல
இறைவனை வணங்கி ;
மந்திர ஜபம் செய்து ;
கும்பத்தில் உள்ள நீரை
கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலையின் மீது
அபிஷேகம்
செய்ய வேண்டும் “

“பிராண பிரதிஷ்டை
மூலம் உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலையானது
கும்பாபிஷேகம்
செய்யப்பட்ட பின்
கடவுள் சிலைக்குள்
இருக்கும்
கடவுள் சக்தியானது
இயங்கும்
சக்தியைப் பெறுகிறது ;
தன்னை நாடி வரும்
அன்பர்களுக்கு
அருள் வழங்கும்
சக்தியைப் பெறுகிறது ”

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்து இருக்கும்
இறைவன்
உருவம் ;
அருவம் ;
அருவாரூபம் ;
என்ற மூன்று நிலைகளில்
இந்த உலகத்தில்
எழுந்தருளி இருந்தாலும் ;
இந்த பிரபஞ்சத்தில்
அருவாரூபத்தில் இருக்கும்
இறைவனையும் ;
அருவத்தில் இருக்கும்
இறைவனையும் ;
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
உணர முடியாமல்
இருக்கிறார்கள்
என்ற காரணத்தினால் ;
மக்கள் அனைவரும்
இறைவனை எளிதாக
உணரக்கூடிய நிலையில் ;
பார்க்கக்கூடிய நிலையில் ;
இருக்கும் வகையில் ,
மக்கள் அனைவரும்
உருவத்தில்
இறைவனை வணங்க
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
இறைவனை
கடவுள் சிலைக்குள்
எழுந்தருளச் செய்து
இருக்கிறார்கள் ;”

“கடவுள் சிலைக்குள்
எழுந்தருளிய இறைவன் ;
கும்பாபிஷேகம்
முடிந்த பின்
கண்களால்
காணக்கூடிய நிலையில்
கடவுள் சிலையாக
ஒரு உருவமாக
காட்சியளிக்கிறான் “

“இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்து இருந்து ;
இந்த பிரபஞ்சம்
முழுவதையும்
தன்னுள் வைத்து
காப்பாற்றிக்
கொண்டிருந்த இறைவன் ;
கடவுள் சிலை என்ற
ஒரு உருவத்திற்குள்
அடைபட்டாலும் ;
இந்த உலகத்தில்
உள்ள அனைத்தையும்
கட்டிக் காப்பாற்றிக்
கொண்டே இருக்கிறான் ; “

“இது போன்றே
கோயிலுள்ள
ஏனைய பரிவார
தேவதைகளுக்கும் ;
கோபுர ஸ்தூபிகளுக்கும் ;
அவைகளுக்கென்று
ஒதுக்கப்பட்ட கும்பங்களை
மந்திர பூர்வமாய் செய்த
ஜபங்களின் மூலம்
கும்பங்களில்
முழுமை அடைந்து
இருக்கும் கடவுள்
சக்தியை அபிஷேகம்
செய்வதால்
கோயிலானது இறைவன்
வசிக்கும் வீடாக
மாறி விடுகிறது ;

“பாவத்தைப்போக்கி
புண்ணியத்தை நல்கும்
புண்ணியஸ்தலமாக
மாறி விடுகிறது ;”

“ துன்பப் படுபவர்களின்
துயரைத் துடைக்கும்
கலங்கரை விளக்கமாக
மாறி விடுகிறது ; “

“ இல்லாதவர்கள்
வாழ்வதற்கு
தேவையானதை
வழங்கும் அருள்
கூடமாக மாறி
விடுகிறது ;”

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
தீர்த்துக் கொள்ள
முடியாதவர்களுக்காக
உண்டாக்கப்பட்ட
கோயிலானது ;
கும்பாபிஷேகம்
முடிந்தபின்
தன்னை நாடி
வந்தவர்களுக்கு
அனைத்தையும்
வாரி வழங்கி
அருள்பாலிக்கும்
புண்ணியம் மிக்க
ஸ்தலமாக மாறி
விடுகிறது ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 15-06-2019
//////////////////////////////////////////////////////////////