காகபுசுண்டர் -வசிட்டர்
காகபுசுண்டர் யுகங்கள் பல கண்டவர் பிரளயங்கள் பலவற்றை பார்த்தவர் அவருடைய சிறப்புகளை பெருமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அரிய நுலான பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் நுhலை காகபுசுண்டர் எழுதியுள்ளார்
ராம பிரானின் குரு யார்? என்ற வினாவை எழுப்பினால் வசிட்ட முனிவர் என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும் ஆனால் வசிட்டரின் குரு யார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்
வசிட்டரின் குரு என்ற சிறப்புக்கு உரியவரும். ராம பிரானின் குருவான வசிட்டருக்கே உபதேசம் செய்தவர் என்ற சிறப்பைப் பெற்றவரும் தான் இந்த காகபுசுண்டர்
இந்த விவரங்களைப் பற்றி காகபுசுண்டரே கூறியிருக்கிறார் . அது அவருடைய நுhலான காகபுசுண்டர் பெருநுhல் காவியம்-1000 என்ற நுhலில் உள்ளது. அதை நாம் இப்பொழுது பார்ப்போம்.தானென்ற ஞானமதை வெளியதாகத்
தான்சொல்ல வேண்டுமென்று வசிஷ்டர் கேட்க
ஏனென்ற சித்தர் களும் வசிஷ்டரோடே
இட்டமுடன் றான்சேர் ந்து ஞானந்தன்னை
தேனென்ற அமுர் தம்போல் சொல்லவேண்டும்
திருவருளால் கடைத்தேறச் செய்யவேண்டும்
கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு
குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே
-----------------காகபுசுண்டர்---------பெருநுhல் காவியம் 1000---------
“””””தானென்ற ஞானமதை வெளியதாகத்
தான்சொல்ல வேண்டுமென்று வசிஷ்டர் கேட்க””””””
நான் யார்? என்ற வார்த்தை பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் வார்த்தை
ஆதி அந்தம் இல்லாத இறைவனின் ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வார்த்தை தான்சொல்ல வேண்டுமென்று வசிஷ்டர் கேட்க””””””
நான் யார்? என்ற வார்த்தை பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் வார்த்தை
ஞானம் அடையக் கூடிய வழிகளை தேடிக் கொண்டிருக்கும் யோகிகள், விளக்கம் கண்டுபிடித்து முக்தி நிலை அடையக் காரணமாக இருக்கும் வார்த்தை
சாகாக் கால், வேகாத் தலை, போகாப் புனல், நெருப்பாறு மயிர் ப்பாலம் கடந்து,
போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை யார் ஒருவர் அறிந்து கொண்டு ஆன்மீக பாதையில் செல்கிறார்களோ அவர்களால் மட்டும் தான் நான் யார்? என்பதின் ரகசியம் தெரிந்து கொண்டு ஞானம் அடைய முடியும்
அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள் அடக்கியுள்ள மிக உயர்ந்த வார்த்தையான நான் யார்? என்பதின் ரகசியம் உணர் ந்து ஞானம் அடையக் கூடிய வழிகளை எனக்குக் கூற வேண்டுமென்று வசிட்டர் கேட்டார்.“”””””””ஏனென்ற சித்தர் களும் வசிஷ்டரோடே
இட்டமுடன் சேர்ந்து ஞானந்தன்னை””””””””
நான் யார்? என்ற கேள்வியை எழுப்பி தங்களைத் தானே நான் யார் என்று கேட்டுக் கொண்டு ஞானம் அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொண்டு இருக்கும் ஏனைய சித்தர்களும், வசிட்டருடன் சேர்ந்து கொண்டு ஞானம் அடையக் கூடிய வழியை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்றனர்.
“”””””தேனென்ற அமுர்தம்போல் சொல்லவேண்டும்
திருவருளால் கடைத்தேறச் செய்யவேண்டும்””””””
தேனென்ற
உணவுப் பொருள்களில் தேன் ஒன்று மட்டும் தான் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கெட்டுப் போகாது.
தன்னிலை மாறாது நின்று சுவை பயக்கும் நாள் செல்லச் செல்ல புளிக்காது.
தேன் தான் கெடாததோடன்றி, தன்னில் ஊறவைத்த பேரீச்சம் பழம், திராட்சை, இஞ்சி முதலிய பொருள்களையும் கெட விடாது.
லேகியங்களில் தேன் கலப்பதன் கார்ணம் இது தான்.
தேனென்ற என்றால் உடலும் உயிரும் அழிவில்லாமல் இருக்கக் கூடிய வழியை எங்களுக்கு சொல்லுங்கள் என்று பொருள்
அமுர்தம் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி, ஆறு ஆதாரங்களைக் கடந்து பிரம்ம ரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது அமிர்தம் சுரக்கும்.
இதனை உண்பவர்க்கு பிறப்பு, இறப்பற்ற நிலை உண்டாகும்.
அமுர்தம் என்றால் உடலும் உயிரும், பிறப்பு, இறப்பு அற்ற நிலையை அடையக் கூடிய வழிகளை எங்களுக்கு சொல்லுங்கள் என்று பொருள்
கடை நிலை: (கடைத்தேற)இறைநிலையை கடை நிலை என்று சொல்வார்கள்.
கடை என்பதற்கு பிரம்மம், எல்லாம் வல்ல இறைநிலை என்று பொருள்.
உலகம் பஞ்சபூதங்களால் ஆனது உலகத்திற்கு முன்பாகவும், முடிவாகவும் உள்ளது இறைநிலை.
அது புலன்களுக்கு எட்டாதது வர்ணிக்க முடியாதது, வார்த்தையைக் கடந்தது.
கடை தேற என்றால்-கடவுளை உணரும் நிலையை, அடையும் நிலையை, கடவுளாக மாறும் நிலையை-என்று பொருள்.
தேனென்ற அமிர்தம்போல் சொல்லவேண்டும் திருவருளால் கடைத்தேறச் செய்ய வேண்டும் என்றால்
உடலானது அழிந்து கெட்டுப் போகாமல் உயிரும், உடலும் என்றும் ஒன்றாக இணைந்து, பிறப்பு, இறப்பு அற்ற நிலையை அடையக் கூடிய வழியை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றும் காகபுசுண்டர் தனது மனம் இரங்கி கடவுள் நிலையை அடையக் கூடிய வழிகளை எங்களுக்குச் சொல்லி எங்களைக் கடைத்தேறச் செய்ய வேண்டும் என்று பொருள்
“”””””””கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு
குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே””””””””
கோனென்ற என்றால்-அரசனைப் போல் அண்ட சாராசரங்களையும் தன் கட்டுக்குள் வைத்து, இயக்க விதி மாறாமல் காத்துக் கொண்டிருப்பவன் யார் என்பதையும், அதன் மூலம் எது? என்ற ரகசியத்தையும் அறிந்தவருமான காகபுசுண்டர் என்று அர்த்தம்.
கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே என்றால்
கடவுளை அடையக் கூடிய வழிகளை அறிந்து அதன் வழி சென்று அதை அடைந்தவன் காகபுசுண்டராகிய நான் என்ற ரகசியங்களை வசிட்டர்
உணர்ந்து தெரிந்து கொண்டதால் வசிட்டருக்கு ஞானம் அடையக் கூடிய வழிகளைச் சொன்னேன் என்கிறார் காகபுசுண்டர்