March 11, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-புறந்துhய்மை- பதிவு-22




             இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-புறந்துhய்மை- பதிவு-22

                  “”பதிவு இருபத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                                                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
அகத்தை துhய்மையாக எவ்வாறு வைத்திருக்க வேண்டும்
என்பதைப் பற்றி இயேசு உவமைகள் மூலம்
கீழ்க்கண்ட வசனங்கள் வாயிலாக விளக்குகிறார் :

மாயக்காரராகிய வேதபாரகரே ! பரிசேயரே ! உங்களுக்கு ஐயோ , போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள் ; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
                                                                         --------மத்தேயு - 23 : 25
                                                      
குருடனான பரிசேயனே ! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும் படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு
                                                                     -----------மத்தேயு - 23 : 26

அகத்திலே நஞ்சை வைத்துக் கொண்டு
புறத்திலே அமிர்தம் நிறைந்த வார்த்தை பேசுபவர் ;

அகத்திலே துரோகத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே நட்பின் இலக்கணமாகத் திகழ்பவர் ;

அகத்திலே பொய்யை வைத்துக் கொண்டு
புறத்திலே உண்மையின் வடிவமாக உலவுபவர் ;
   
அகத்திலே காமப் பிசாசை வைத்துக் கொண்டு
புறத்திலே காதல் கீதம் இசைப்பவர் ;

அகத்திலே அழிக்கும் எண்ணத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே கருணையின் வடிவமாக நடப்பவர் ;

அகத்திலே சுயநலத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே பொது நலம் கொண்டவர்  போல் பாசாங்கு செய்பவர் ;

அகத்திலே களங்கங்களை வைத்துக் கொண்டு
புறத்திலே கண்ணியவானாக திரிபவர்  ;

அகத்திலே வஞ்சனைகளை வைத்துக் கொண்டு
புறத்திலே கருணையின் இலக்கணமாய்த் திகழ்பவர் ;

அகத்திலே தன்னலத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே தியாகி வேடம் போடுபவர் ;

அகத்திலே அளவற்ற அழுக்குகளை வைத்துக் கொண்டு
புறத்திலே துhய்மையானயவராக உலா வருபவர் ;

இவ்வாறு பல்வேறுபட்ட தன்மைகளை தன்னுள் கொண்டு
                                    உண்மை உருவை மறைத்து ,
                                    பொய் வேஷம் போட்டு ,
                                   போலி வேடம் தரித்து ,
                                   உதட்டில் புன்னகையையும் ,
                                   வார்த்தையில் வசீகரத்தையும் ,
                                 முகத்தில் கவர்ச்சியையும் ,
                                  செயலில் பொய்மையையும் ,
                                  வைத்துக் கொண்டு திரியும்
             வேதபாரகரே!
             பரிசேயரே !

வேதபாரகர்  என்றால் அனைவருக்கும் தெரியும்
பரிசேயர்  என்றால் என்ன என்று பார்ப்போம் .

பரிசேயர் :
பரிசேயர் என்றால் பிரிந்து நிற்பவர் .
அதாவது சட்டத்தை மிக நுணுக்கமாக கடை பிடிக்கும்
பொருட்டுச் சாதாரண மக்களிடமிருந்து தம்மையே
பிரித்துக் கொண்டவர்  எனப்பொருள் .

இவர்கள் 10 கட்டளைகளைப் பல நுhறு சட்டங்களாகப் பகுத்து ,
613 துணைச் சட்டங்களாகப் பிரித்து அவற்றுக்கு அதிகாரப் பூர்வமான
விளக்கம் கொடுத்து வந்தார்கள்.

அத்தகைய வேதபாரகரையும் , பரிசேயரையும் பார்த்து இயேசு
அகத் துhய்மையை உவமை கொண்டு விளக்குவதன் மூலம்
இந்த சமுதாயத்திற்கு தேவையானவற்றை விளக்குகிறார் .

ஒரு பாத்திரத்தின் வெளிப்புறம் துhய்மையாக இருந்து
உட்புறம் துhய்மையாக இல்லையெனில்
அந்த பாத்திரத்தை நீர்  ஊற்றி வைப்பதற்கோ ?
பொருட்களை வைத்து பாதுகாப்பாக வைப்பதற்கோ ?
உணவுப் பண்டங்களைப் போட்டு வைப்பதற்கோ ?
காய்களை போட்டு சமைப்பதற்கோ ?
அரிசியை போட்டு சாதம் வடிப்பதற்கோ ?
எண்ணெய் ஊற்றி பலகாரம் செய்வதற்கோ ?
உபயோகப்படாது .

எந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும்
அதன் உட்புறம் துhய்மையாக இருக்க வேண்டும்
உட்புறம் துhய்மையாக உள்ள பாத்திரம் மட்டுமே நமக்கு பயன்படும்
உட்புறம் துhய்மையாக உள்ள பாத்திரம் மட்டுமே
பயன்படுத்தும் தகுதியை உடையது .

வெளிப்புற துhய்மையை மட்டுமே வைத்துக் கொண்டு
உட்புறம் துhய்மையில்லாத பாத்திரத்தை நாம் பயன்படுத்த முடியாது .
எதற்கும் பயன் படாது ஒன்றுக்கும் உதவாது .

அதைப் போல ,
அகத்தை அழுக்காக வைத்துக் கொண்டு ,
அழுகிய பிணத்தின் நாற்றத்தை அகத்தில் வைத்துக் கொண்டு ,
புறத்தே நல்லவர் போல் நடமாடுகிறீர்கள் .

இதனால் சமுதாயம் கெடுகிறது ;
மக்கள் கெடக்கூடிய நிலை உருவாகிறது ;
நல்லவர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது ;
                                           கருணை கொல்லப்படுகிறது ;
                                          இரக்கம் அழிக்கப்படுகிறது ;
                                          அன்பு சிதைக்கப்படுகிறது ;
                                         அறிவு முழுங்கடிக்கப்படுகிறது ;
                                         சிந்தனை புதைக்கப்படுகிறது ;
                                         பகுத்தறிவு எரிக்கப்படுகிறது ;
                                         முன்னேற்றம் தடைபடுகிறது ;
                                         இன்பம் குலைக்கப்படுகிறது ;
                                        துரோகம் சதிராட்டமாடுகிறது ;
                                        துன்பங்கள் உயர்த்தப்படுகிறது ;
                                        கவலைகள் முடிசூட்டப்படுகிறது ;
                                       ஆணவம் எள்ளிநகையாடுகிறது ;
                                       அறியாமை தவழ்கிறது ;
                                       ஏழ்மை உயர்கிறது ;
                                       வறுமை சிறக்கிறது ;
                                       துhய்மை அழுக்காகிறது ;
                                       உண்மை இறக்கிறது ;
                                       பொய்மை சிரிக்கிறது ;
                                        உவகைகள் அழுகிறது ;
                                        காலங்கள் மறைகிறது ;
                                        கடமைகள் தொலைகிறது ;
                                        பொறுமைகள் இறக்கிறது ;
                                        நிதானங்கள் மரிக்கிறது ;
                                        உழைப்பு வாடுகிறது ;
                                       சோம்பல் துளிர்க்கிறது ;
                                       வாழ்க்கை வெறுக்கிறது ;
                                       மனிதத்தன்மை அழிகிறது ;
                                       நீதி விலையாகிறது ;
                                      சட்டம் சிறையாகிறது ;
                                      அநீதி ஆனந்தமாகிறது ;
                                      சாத்தான் வளர்கிறது ;

எனவே அகத்தை துhய்மைப் படுத்துங்கள் என்கிறார்  இயேசு .



திருக்குறள்    :

              “”“புறந்துhய்மை நீரான் அமையும் அகந்துhய்மை
                   வாய்மையால் காணப் படும்””””
                                             ---------திருவள்ளுவர்------திருக்குறள்---

சிந்தனையை சிலந்தி வலை பின்னி இருக்கிறதா ?
உள்ளத்தை கரையான் அரித்து விட்டிருக்கிறதா ?
அறிவை அறியாமை சூழ்ந்து இருக்கிறதா ?
அன்பை அரக்கத்தனம் ஆண்டு கொண்டு இருக்கிறதா ?
கருணையை கள்ளத்தனம் அடிமைப் படுத்தி வைத்து இருக்கிறதா ?
இரக்கத்தை நயவஞ்சகம் நசுக்கிக் கொண்டு இருக்கிறதா ?
பொது நலத்தை சுயநலம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறதா ?

( அல்லது )
                              அன்பு அரசாட்சி செய்கிறதா ?
                             ஆணவம் அடங்கி கிடக்கிறதா ?
                             இரக்கங்கள் பூத்து குலுங்குகிறதா ?
                             ஈகை உயர்ந்து இருக்கிறதா ?
                             எளிமை நாட்டியம் ஆடுகிறதா ?
                             ஏழ்மை மதிக்கப் படுகிறதா ?
                            ஐம்புலன் ஒடுங்கி இருக்கிறதா ?
                            ஓற்றுமை போற்றப் படுகிறதா ?
                            ஓருயிராக உணரப் படுகிறதா ?
                            ஓளஷதகுணம் நிரம்பி இருக்கிறதா ?

நல்லெண்ணங்கள் சிறந்து விளங்குகிறதா ?
துரோகங்கள் துண்டிக்கப் படுகிறதா ?
உண்மைகள் விதைக்கப் படுகிறதா ?
பொய்மைகள் புதைக்கப் படுகிறதா ?
களங்கங்கள் கழற்றப் படுகிறதா ?
அழுக்குகள் நீக்கப் படுகிறதா ?
துhய்மைகள் போற்றப் படுகிறதா ?
நற்பண்புகள் ஏற்றம் பெறுகிறதா ?
கருணைகள் வளர்க்கப் படுகிறதா ?

என்ற இரு வேறுபட்ட ,இரு நிலைகள் கொண்ட ,
இரு துருவங்களை,
அகத்தில் உள்ள மாறுபட்ட நிலைகளை ,
எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் .

புறத்தை நீரால் துhய்மைப் படுத்தலாம் ,
பன்னீரால் நீராட்டலாம் ,
வாசனை திரவியங்களால் குளிப்பாட்டலாம் .

பல்வண்ண ஆடைகளை ,
உயர்தரமான ஆடைகளை ,
கவர்ச்சிகரமான ஆடைகளை ,
மதி மயக்கும் ஆடைகளை ,
அணிவிக்கலாம் .

சந்தனம் ,ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களால்
வாசனைக்கு உட்படுத்தலாம் .

தங்கம் ,பிளாட்டினம் , பஞ்சலோகம் ,முத்து ,வைரம்
பவளம் ,மாணிக்கம் ,புஷ்பராகம் என்று பலவித அணிகலன்களை
கொண்டு அழகு செய்யலாம் .

புறம் துhய்மையாக இருக்கிறது
அழகாக இருக்கிறது - என்று
வெளிக் காட்டிக கொள்ளலாம் .
அகம் துhய்மையாக இருக்கிறதா இல்லையா?
என்பதை எவ்வாறு உணர்வது

பேசும் பேச்சும் ; செய்யும் செயலும் ;
ஒன்றாக இருக்க வேண்டும் .
அப்பொழுது தான் அகம் துhய்மையாக இருக்கிறதா ?
அழுக்காக கரைப்படிந்து இருக்கிறதா ?
என்று உணர்ந்து கொள்ள முடியும் .

நான் ,
ஏழ்மையைக் கண்டு வருந்துபவன் ;
ஏழையைக் கண்டு இரங்குபவன் ;
துன்பத்தைக் கண்டு துயர்  துடைப்பவன் ;
ஆபத்து என்று வந்தவர்க்கு அபயம் அளிப்பவன் ;
கண்ணீருடன் வருபவர்க்கு உதவும் கரமாக இருப்பவன் ;
கொடுமை கண்டு கொதிப்பவன் ;
தவறுகளைக் கண்டு மிதிப்பவன் ;
ஏமாற்றுபவர்களை கழுவில் ஏற்றுபவன் ;
பகைவனை பஞ்சாக்கி காற்றில் துhற்றுபவன் ;

என்று வீர வசனம் பேசிவிட்டு ,
உதவி என்று அபயக்கரம் நீட்டி
துன்பத்தை நீக்குங்கள் என்று ஓடிவரும்
ஏழைக்கு உதவாமல் ஓடி ஒளிந்து கொள்பவர் ;
அகம் அழுக்கால் கரை படிந்திருக்கிறது என்றும்
துன்பம் நீக்கி அவர்  வாழ்வு சிறக்க செயற்கரிய செயல் செய்பவர் ;
                  அகம் துhய்மையாக இருக்கிறது ;
                               உண்மையாக இருக்கிறது ;
                                நேர்மையாக இருக்கிறது ;
                                களங்கமற்று இருக்கிறது ;
                                அழுக்கற்று இருக்கிறது ;
என்பதை உணர்ந்து கொள்ளலாம் ;

ஒருவன் பேசும் உண்மையிலிருந்து
அவன் மனத்துhய்மை உடையவன் என்பதை அறியலாம்
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :
இயேசு ,புறத்தே எவ்வளவு தான் நல்லவனாக நடித்தாலும்
அகத்தே அழுக்கு நிறைந்து இருந்தால்
புறத்தே உங்கள் உண்மை நிலையை வெளிக்காட்டி விடும்
ஆகவே அகத்தை முதலில் துhய்மைப் படுத்துங்கள் என்கிறார்  .


அவ்வாறே ,
திருவள்ளுவரும் ,புறத்தே எவ்வளவு தான் நல்லவனாக நடித்தாலும்
உங்கள் பேச்சும் ,செயலும்
ஒன்றுக்கொன்னு மாறுபட்டு செயலைச் செய்யும் போது
உங்கள் அகம் அழுக்கடைந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டி விடும்
எனவே முதலில் அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார் .

இயேசு , அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார் .

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார்.

                      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஇருபத்துஇரண்டு  ந்தான்முற்றே “”