June 01, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-நயனிலன்- பதிவு-42



        இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-நயனிலன்- பதிவு-42   

         “”பதிவு நாற்பத்திஇரண்டை விரித்துச் சொல்ல
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

மரம் நல்லதென்றால் , அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள் ; மரம் கெட்டதென்றால் , அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள் ; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
                                                              --------மத்தேயு - 12 : 33

வீரியன் பாம்புக் குட்டிகளே , நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க , நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
                                                             -------மத்தேயு - 12 : 34

நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான் . பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான்.
                                                        ---------மத்தேயு - 12  :  35

மனுஷர்  பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
                                                         ----------மத்தேயு - 12 : 36

ஏனெனில் , உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய் அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்மானிக்கப் படுவாய் என்றார் .”
                                                          ----------மத்தேயு -12 : 37

மனிதர்களைப் புரிந்து கொள்வது கடினம்
பேசும் வார்த்தைகளை வைத்தோ
செயல்படும் முறைகளை வைத்தோ
வெளிப்படுத்தும் நடத்தைகளை வைத்தோ
ஒருவன் நல்லவனா?  கெட்டவனா? என்று தீர்மானிக்க முடியாது .

அகத்தில் அழுக்கை வைத்துக் கொண்டு
புறத்திலே நல்லவன் போல் நடிப்பவன்,
அகத்திலே நல்லவற்றால் நிரப்பப்பட்டு
புறத்திலே நல்லவைகளை வெளிப்படுத்துபவன்,
என்ற இரு வேறுபட்ட நிலைகளில்
மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான்.

எண்ணம் துhய்மையாக இருந்தால்
செயல் துhய்மையாக இருக்கும்.
எண்ணம் துhய்மையற்று இருந்தால்
செயல் துhய்மையற்று இருக்கும்.

எண்ணம் துhய்மைப்பட வேண்டும் ;
எண்ணம் நெறிப்பட வேண்டும் ;
எண்ணம் ஒழுங்குப்பட வேண்டும் ;                                                            
எண்ணம் முறைப்பட வேண்டும் ;
எண்ணம் சீர்பட வேண்டும் ;

எண்ணம் துhய்மைப்பட சொல் துhய்மைப்படும் ,
சொல் துhய்மைப்பட செயல் துhய்மைப்படும்,
செயல் துhய்மையுடன் வெளிப்பட வாழ்க்கை வளம் பெறும்.
வாழ்க்கை வளம் பெற்று சிறப்புடன் திகழ வேண்டுமானால்
மனதில் அகத்தில்
    நல்லவற்றை விதைக்க வேண்டும்
    கெட்டவற்றை ஒதுக்க வேண்டும்
    உண்மையை நாட வேண்டும்
    பொய்களை விரட்ட வேண்டும்.

அகம் களங்கமற்று இருந்தால்
மாசு நிறைந்து இருந்தால்
பித்தலாட்டத்தால் சூழ்ந்து இருந்தால்
வஞ்சனையால் நிரப்பப்பட்டு இருந்தால்
சொல் துhய்மை கெட்டு
செயல் துன்பத்தின் பயனை சுமந்து கொண்டு வரும்.

அகத்திலே கெட்டதை வைத்துக் கொண்டு வெளியே
நல்லதை பேச முடியாது
நல்லதை செய்ய முடியாது.

அகத்திலே நல்லவை இருந்தால் மட்டுமே
புறத்திலே நல்லவை பேச முடியும்
நல்லவை செய்ய முடியும்.

அகத்திலே அழுக்கை வைத்துக் கொண்டு
புறத்திலே நல்லவனாக ரொம்பநாள் நடிக்க முடியாது.
சிலரை பலநாள் ஏமாற்றலாம்
பலரை சிலநாள் ஏமாற்றலாம்
ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் , எக்காலத்தும் ,
ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது .
ஒருவன் பேசும் வார்த்தையும் , அவன் நடந்து கொள்ளும் விதமும்
அவன் எண்ணம் துhய்மையானதா
அவன் அகம் துhய்மையானதா
என்பதை வெளிப்படுத்தி விடும்.

மரத்தைப் பற்றி தெரிய வேண்டுமானால்
அது கொடுக்கும் கனியை வைத்து தெரிந்து கொள்ளலாம்
உண்ணக் கூடிய நல்ல கனியைக் கொடுத்தால்
அம்மரம் நல்லமரம் என்றும்,
உண்ண முடியாத உணவுக்கு பயன்படாத , உதவாத, பயன்படாத
கனியைக் கொடுத்தால்
அம்மரம் நல்லமரம் இல்லை ;
உதவக் கூடிய மரம் இல்லை ;
பயன் தரக்கூடிய மரம் இல்லை ;
என்று கனியை மையமாக வைத்து
கனி கெட்டதென்றால் மரம் கெட்டதென்றும்
கனி நல்லதென்றால் மரம் நல்லதென்றும்
உணர்ந்து கொள்ளலாம் .

மரமானது அது கொடுக்கும் கனியின் தன்மையைப் பொறுத்து
நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளலாம் .

அதைப்போல ,
பாம்பைப் போல நச்சுத்தன்மை கொண்டவர்களே
அகத்திலே நஞ்சை வைத்துக் கொண்டு
புறத்திலே அழகாக இருப்பது போல
காட்டிக் கொள்ளும் பாம்பைப் போன்றவர்களே

நீங்கள் அகத்தை களங்கமாக்கி , கரை படிய வைத்து,
எண்ணங்களை துhய்மையற்று வைத்திருக்கும் போது
எப்படி வெளிப்படையாக உண்மையை பேசுவீர்கள்
நல்லவைகளை வெளிப்படுத்துவீர்கள்
நல்லவிதமாக நடந்து கொள்வீர்கள்
அகத்திலே சாக்கடை இருக்கும் போது
புறத்திலே அழுக்குதானே வெளிப்படும்
துhய்மையா வெளிப்படும் .

சாக்கடையில் குதித்து விளையாடும் பன்றி
சாக்கடையை விட்டு வெளிவந்தாலும்
அதன் மீது சாக்கடை நாற்றம் வீசும்
அதைப்போல ,
அகம் சாக்கடையாக நிரப்பப் பட்டிருக்கும் போது
அதில் ழூழ்கி எழும் எண்ணமானது
சொல்லாக வெளிப்படும் போது சாக்கடை வாசனையும்
செயலாக வெளிப்படும் போது சாக்கடை தன்மையும்
தானே வெளிப்படும் .

அகத்தை நல்லவைகளால் , அன்பினால்,  கருணையினால்
இரக்கத்தினால் , சுயநலமற்ற தன்மையினால் ,
துhய்மையாக வைத்திருப்பவன் ;
மனத்தை துhய்மையாக வைத்திருப்பவன் ;
எண்ணத்தை துhய்மையாக வைத்திருப்பவன் ;
உள்ளத்தை துhய்மையாக வைத்திருப்பவன் ;
அகத்தை துhய்மையாக வைத்திருப்பவன் ;
புறத்தே வார்த்தைகளாகவும்
செயல்களாகவும் செயல்படும் போது
துhய்மையை புறத்துhய்மையாக வெளிப்படுத்துகிறான் .

வஞ்சகத்தை நெஞ்சிலே விதைத்து ,
பொய்மையை உள்ளத்திலே புதைத்து ,
சுயநலத்தை அகத்திலே வளர்த்து ,
தகாதவைகளை மனதிலே நினைத்து ,
வாழ்ந்து வரும் மனிதன்
        புறத்திலே வெளிப்படும் போது
        அன்பைக் கொன்றவனாய் ,
       ஆணவத்தின் பிம்பமாய் ,
      அகம்பாவத்தின் சின்னமாய் ,
      கொடுமையின் இலக்கணமாய் ,
      இரக்கத்தை எரித்தவனாய் ,
      கருணையை அழித்தவனாய் ,
      பொதுநலத்தை புதைத்தவனாய் ,
      சுயநலத்தை விதைத்தவனாய் ,
      உண்மைகளை மறைத்தவனாய் ,
வெளிப்படுவான் .

அகத்திலே நல்லவற்றை வைத்திருப்பவன்
நல்லவற்றை வெளிப்படுத்துவான் ;
அகத்திலே கெட்டவற்றை வைத்திருப்பவன்
கெட்டவற்றை வெளிப்படுத்துவான் ;

தேவையற்ற வார்த்தைகள்
மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கும் வார்த்தைகள் ;
மற்றவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் ;
மற்றவரை ஏளனப் படுத்தும் வார்த்தைகள் ;
மற்றவர்  துயரைக் கண்டு ஏளனம் செய்யும் வார்த்தைகள் ;
மற்றவர்  இயலாமையைக் கண்டு வருத்தப்படாமல்
அவரை வாட வைக்கும் வார்த்தைகள்

வெற்றியின் சிகரத்தை தொட்டவர்கள்
வெற்றியை நுகராதவர்களைப் பார்த்து வீசும்
ஏளன வார்த்தைகள் .

சுகபோகங்களில் திளைப்பவர்கள்
சுகத்தை காணாதவர்கள் மீது வீசும்
நரித்தன வார்த்தைகள் .

வாழ்கிறோம்
உயர்நிலை அடைந்துவிட்டோம் என்று நினைப்பவர்கள்
உயரத் துடிப்பவர்களைப் பார்த்து பேசும்
இறுமாப்பு வார்த்தைகள் .

ஏழையைப் பார்த்து பணக்காரன் பேசும்
அடிமைத்தன வார்த்தைகள் .

உயர்ந்தோர்  தாழ்ந்தோரைப் பார்த்து பேசும்
நயவஞ்சக வார்த்தைகள்.

கற்றுக் கொண்டவன்
கற்றுக் கொள்ள ஆசைப்படுபவனைப் பார்த்து பேசும்
ஆணவ வார்த்தைகள் .

எல்லாம் அறிந்தவன் என்ற சுயநல போதையில்
அறிய முற்படுபவனைப் பார்த்து பேசும்
நயவஞ்சக வார்த்தைகள் .

ஆன்மீகத்தில் தன்னை உயர்ந்தவன் என்று
கற்பனை கோட்டை கட்டிக் கொண்டு
ஆன்மீகத்தில் உயரத் துடிப்பவனை
ஆன்மீகத்திற்குள் நுழைபவனை
ஆனமீகத்திற்குள் செல்பவனை பார்த்து பேசும்
முட்டாள்தனமான வார்த்தைகள் .

கலைகள் பல கற்றவன் என்ற மிதப்பில்
கலைகளை கற்றுக் கொள்ள முயல்பவனிடம்
கலைகளை கற்றுக் கொள்ள துணிபவனிடம் பேசும்
மறை கழன்ற வார்த்தைகள் .

ஞானத்தில் கரை கண்டவன் என்று
தன்னை நினைத்துக் கொண்டு
ஞானத்தை நோக்கி செல்பவனைப் பார்த்து பேசும்
பைத்தியக்காரத்தனமான வார்த்தைகள்.

வாழ்க்கையில் முன்னேறியவர்கள்
முன்னேறத் துடிப்பவர்களைப் பார்த்து
அனுபவம் என்ற பெயரில் வீசும்
மாயாஜால வார்த்தைகள் .

வாழ்க்கை சுகங்களை தேடாமல் அடைந்தவர்கள்
தேடிச் செல்லுபவனைப் பார்த்து வீசும்
உபயோகமற்ற வார்த்தைகள் .

வார்த்தைகள் பல விதம்
அது வெளிப்படும் விதத்தைப் பொறுத்து
மனிதனுடைய அகம் வெளிப்படுகிறது
அவன் பேசும் வார்த்தைக்கான பலன்
நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கெடுக்கப்படும் .
நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை கொல்வதோடு
நம்மையும் கொல்லும் .

ஒருவன் பேசும் வார்த்தைகள் அவன் நல்லவனா
கெட்டவனா என்று தீர்மானிக்க உதவும் .

வார்த்தை நல்லவையாக இருந்தால் அவன் அகம்
துhய்மையாக இருக்கிறது என்று பொருள் .

வார்த்தை கெட்டவையாக இருந்தால் அவன் அகம்
கெட்டவையாக துhய்மையற்று இருக்கிறது என்று பொருள் .

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பது அவன் பேசும்
வார்த்தையினால் தீர்மானிக்கப் படும்
நல்லவனாக இருந்தால் நல்லவனுக்குரிய பலனும் ,
கெட்டவனாக இருந்தால் கெட்டவனுக்குரிய பலனும் ,
நியாயத் தீர்ப்பு நாளிலே அளிக்கப்படும் .
ஆகவே ,
நல்லதையே நினைத்து
நல்லதையே சொல்லி
நல்லதையே செய்து வர
நல்லவை நடக்கும் என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர்:

          “”“நயனிலன் என்பது சொல்லும் பயனில
               பாரித் துரைக்கும் உரை”””
                                   ----திருவள்ளுவர்----திருக்குறள்--

             பூவைத் தொலைத்த
             பூவையரின்
             பூமணம்
             பூவுக்குக் கூட தெரியாது !

            முள் பட்டுக் கிழிந்த
            முழுமதிகள் .
             களங்கமில்லா
             கவின்மிகு வான்சாரல்கள்.
             பொதிகை குளிர்ச்சியில்
            பொங்கி வந்த
           காட்சி கூறும் எளிமையின்
           சாவா சந்தன சாட்சிகள்.
            நாளமில்லா நாட்டியத்தில்
            நயம் மிக்க
          கலைச் சிற்பிகளின்
          கலை விழாக்கள்.
            உள் என்று இல்லாமல்
            உயிர்  என்று சொல்லாமல்
            பார்  என்று பயிலாமல்
           படித்து விட்டு நிறுத்தாமல்
          கலைந்த கோலத்தின்
            கலையாத நினைவுகள்
           வற்றாத ஜீவ நதியின்
           வளம் கொழிக்கும்
           முற்றாத சாத்திரத்தின்
           முதலுதவி உயிர்கள்
என்று தணியும் இதன்
எரிதழல் வினாக்கள் .

வினாக்களுக்குரிய விடை தெரியா விட்டால்
புரிய வேண்டிய வாழ்க்கை கூட
புரியாமல் போய்விடும் .

முட்டாள்தனமான கேள்வி என்று எதுவும் இல்லை
முட்டாள்தனமான பதில் தான் இந்த சமுதாயத்தால் உண்டு.

விடை இல்லாத கேள்வி என்று எதுவும் இல்லை
விடை காணப்படாத கேள்வி என்பதே உண்டு.

தவறான கேள்வி என்று எதுவும் இல்லை
தவறான பதில் தான் உண்டு.

விடை சொல்லப்படாத , சொல்ல முடியாத கேள்வி
என்று எதுவும் இல்லை
விடை சொல்வதற்கு உரிய தகுதி வாய்ந்தவர்கள் தான் இல்லை .

விடை கண்டு பிடிக்க முடியாத கேள்வி என்று எதுவும் இல்லை
விடை கண்டு பிடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்கள் தான் இல்லை.

விடை தெரியாத கேள்வி என்று எதுவும் இல்லை
விடை தெரிந்து தெரியப் படுத்தக் கூடிய
சிந்தனைவாதிகள் தான் இல்லை.

விளக்கக் கூடிய கேள்வி என்று எதுவும் இல்லை
விவரிக்க முடிந்தவர்கள் தான் இல்லை .

நம்மைச் சுற்றியிருக்கும்
    மனதை வாடவைக்கும் ,
    உள்ளத்தை வருந்த வைக்கும் ,
    சிந்தனையை சிதறடிக்கும் ,
    அமைதியை கலங்கடிக்கும் ,
    அறிவை கதறவைக்கும் ,
    எண்ணத்தை பதறவைக்கும் ,
    வாழ்க்கைக்குரிய வாழ்க்கையை
         
        தொய்வின்றி செலுத்தக்கூடிய ,
    கவலையின்றி கழிக்கக்கூடிய ,
    துன்பமின்றி சிரிக்கக்கூடிய ,
    வறுமையின்றி மகிழக்கூடிய ,
    கண்ணீரின்றி களிக்கக்கூடிய ,
    வருத்தமின்றி சுகிக்கக்கூடிய ,
விவரங்கள் உண்மைத் தன்மை தெரியாவிட்டால் நாம்
எப்படி வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ முடியும் .

சிற்றின்பத்தின் சாளரமே நமக்கு தெரியாவிட்டால்
பேரின்ப வாயிலில் நுழைந்து
எப்படி உண்மைப் பொருளை உணர முடியும் .

முதலில் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்குரிய
வழிவகைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

காலத்தின் கனவுகளை
கடமைகள் மறந்து விட்டால்
புரட்சியின்
புதிய வார்ப்புகள்
புதிய ராகம் மீட்டாது !

சந்தர்ப்பத்தின்
சதுரங்கக் காய்கள்
சாய்வு நாற்காலியில்
சதிராட்டம் நடத்தினாலும்
இனிமையின் இளவாக்கியத்தை
மீட்டாவிட்டால்
கண்கள் தன் கடமையைத் தொலைத்து விடும் .

வாசல் தேடி வரும்
வசந்த பூக்களும்
மேடையில் ஏற துடிக்கும்
மெல்லிய பூங்காற்றும்
வாக்கியத்தின்
வார்த்தைஜாலம் புரியாவிட்டால்
எதிர்காலத்தின் அஸ்திவாரம்
   ஆடி விடும் ;
   ஆடி வரும் ;
   தேடி வரும் ;
   நாடி வரும் ;
   கூடி வரும் ;
   பாடி வரும் ;
பைந்தமிழின் பல்சுவைகளும்
புதிய வானத்தின்
இளவீணையும்
காட்சிகளின் கண்ணிழந்த நிகழ்வுகளும்
புரியா விட்டால்
காலம் கடந்து விடும் .

உண்மை புரியாமல் போய் விடும்
மனதில் தடுமாற்றம் வந்து விடும்
நம்மைச் சுற்றியிருப்பவர்கள்
நம்முடன் தொடர்புடையவர்கள்
நம்முடன் தொடர்பு எல்லையில் இல்லாதவர்கள்
போன்றவர்களின்
வார்த்தைகளின் அர்த்தம் தெரிய வேண்டும் .

கேள்விகளை புரிந்து கொண்டு
மாற்றாரின் மனதை புரிந்து
கொள்ளும் திறன் வர வேண்டும்;
பேச்சின் தன்மை தெரிய வேண்டும்;
பேச்சின் உண்மை தெரிய வேண்டும்;
பேச்சின் மூலம் ஒருவரை புரிந்து கொள்ளும் விவரம்
அறிவு நமக்கு வர வேண்டும் .

பேச்சானது வாயிலிருந்து கொட்டுவதல்ல
அகத்தில் விதைக்கப்பட்டது
புறத்தில் வார்த்தையாக பயிராகிறது .

பேசப்படும் வார்த்தையானது
உதிர்க்கப்படும் சொல்லானது
மற்றவர்  மனதை கதற வைக்கும் கள்ளிச் செடியா ?
மனதை உருக வைக்கும் நெல்லிக்கனியா ?
என்பதை வைத்து ,
அகம் எவ்வளவு துhய்மை கொண்டு இருக்கிறது
அழுக்கடைந்து இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ளலாம் .

உதிர்க்கப்படும் வார்த்தைகள்
ஆணவத்தின் சின்னமாக ,
அகம்பாவத்தின் குறியீடாக ,
அறிவீனத்தின் வெளிப்பாடாக ,
துரோகத்தின் எடுத்துக்காட்டாக ,
துன்பத்தின் விளைநிலமாக ,
துயரத்தின் காடாக ,
மற்றவரின் மனதை வாட்டும் நிலையாக இருப்பதை
வைத்து அவரின் அகம் அழுக்கடைந்த நிலையில்
உள்ளதை தெரிந்து கொள்ளலாம் .

தவறான எண்ணங்களை அகத்தில் கொண்டவர்
புறத்தில் கொட்டப்படும் வார்த்தைகளை
அளப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் .

உண்மைத் தன்மை கொண்டவர்
அகம்  துhய்மையுடன் இருப்பவர்  வார்த்தை
புறத்தே பொய்மை நீக்கி
உண்மையுடன் இருக்கும்
ஒழுக்க நெறியுடன் இருக்கும்
ஒழுக்கம் தவறாமல் இருக்கும்
அன்பை தவழவிட்டு இருக்கும் .

அமைதியை அளிக்கும் படி இருக்கும் ;
கருணையை பிறக்க வைக்கும் படி இருக்கும் ;
நீதியை நிலை நாட்டும் படி இருக்கும் ;
பொய்மையை பொசுக்கும் படி இருக்கும் ;
அறிவை வளர்க்கும் படி இருக்கும் ;
அறியாமையை விரட்டும் படி இருக்கும் ;
இயலாமையை ஓட்டும் படி இருக்கும் ;
ஏழ்மையை அழிக்கும் படி இருக்கும் ;
ஏற்றத்தை அளிக்கும் படி இருக்கும் ;
துன்பத்தை பொசுக்கும் படி இருக்கும் ;
கவலையை எரிக்கும் படி இருக்கும் ;
சிந்தனையை வளர்க்கும் படி இருக்கும் ;
சீர்திருத்தம்  கொண்டு வரும் படி இருக்கும் ;
சமதர்மம் நிலை நாட்டும் படி இருக்கும் ;
சுயநலம் கலங்கும் படி இருக்கும் ;
பொதுநலம் வளரும் படி இருக்கும் ;
ஒற்றுமைகள் ஓங்கும் படி இருக்கும் ;
வளமைகள் பெருகும் படி இருக்கும் ;
ஏற்றங்கள் உருவாகும் படி இருக்கும் ;
மமதைகள் அடங்கும் படி இருக்கும் ;
தீயவைகள் கதறும் படி இருக்கும் ;
தொல்லைகள் சாகும் படி இருக்கும் ;
அன்புகள் பெருகும் படி இருக்கும் ;
உயர்வுகள் உருவாகும் படி இருக்கும் ;
இறைத்தன்மை உணரும் படி இருக்கும் ;
பொய்த்தன்மை கழறும் படி இருக்கும் ;
களங்கப்பட்ட அகம்
புறத்தே களங்கத்தை
வார்த்தைகளால் வாரி இறைக்கும் .
களங்கப்படாத நெஞ்சம் புறத்தே
களங்கத்தை வார்த்தைகளால்
வாரி இறைக்காது .

ஒருவன் பேசும் வார்த்தையை வைத்து
அவன் அகம் களங்கப் பட்டிருக்கிறது
தீவினையால் சூழப் பட்டிருக்கிறது
என்றும் ,
அவன் அறம் இல்லாதவன்
அறம் தவறியவன்
என்றும் தெரிந்து கொள்ளலாம்.

தேவையற்றதை தேவையற்ற வார்த்தைகளால் விரித்துரைப்பது ,
பயனில்லாததை பயனில்லாத வார்த்தைகளால் எடுத்துரைப்பது ,
உபயோகமற்றதை உபயோகமில்லாத வார்த்தைகளால் எடுத்துரைப்பது ,
அறமில்லாததை அறமில்லாத வார்த்தைகளால் எடுத்துரைப்பது ,
ஒருவர்  அறம் அற்றவர் என்பதை தெரிந்து கொள்ளலாம் .

புறத்தில் வெளிப்படும் களங்கமுள்ள வார்த்தைகளை வைத்து
அவன் அறம் தவறியவன்
அவன் அகம் களங்கமுடன் இருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்  திருவள்ளுர்.



இயேசு கிறிஸ்து- திருவள்ளுவர்:
இயேசு,
அகம் களங்கம் உடையதாக இருந்தால் ,
புறத்தே வெளிப்படுபவை களங்கம் உடையதின் சாயலாக இருக்கும்.
அகம் களங்கம் அற்று இருந்தால் ,
புறத்தே வெளிப்படுபவை களங்கம் அற்றதின் சாயலாக இருக்கும்.


அவ்வாறே,
திருவள்ளுவரும்,
அகம் களங்கப்பட்டு இருந்தால்
புறத்தில் வெளிப்படும் வார்த்தை
களங்கம் உடையதாக இருக்கும்.
அதன் மூலம் ஒருவர்  அறம் தவறியவர்  என்பதைத்
தெரிந்து  கொள்ளலாம் என்கிறார் .


        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                         போற்றினேன் பதிவுநாற்பத்திஇரண்டு ந்தான்முற்றே “”