திருக்குறள்-பதிவு-111
“மக்கள் நலனை
கருத்தில் கொண்டு
அவர்களுக்கு பாதுகாப்பாக
இருப்பது போலவும் ;
மக்களுக்கு தேவையான
நல்லவைகளை மட்டுமே
செய்வது போலவும் ;
மக்கள் அமைதியாக
வாழ்வதற்கு தேவையான
செயல்களைச் செய்து
கொண்டிருப்பது போலவும் ;
நடித்துக் கொண்டு இந்த
உலகம் முழுவதையும்
தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பவர் மூவர் ; “
1.அரசியல்
தலைவர்கள்
2.மதத்
தலைவர்கள்
3.பொருளாதாரத்
தலைவர்கள்
“ மக்கள் நலனைக்
கருத்தில் கொண்டு
மக்களுக்கு ஆதரவாக
போராடுபவர்கள் - இந்த
மூவரில் ஒருவருடனோ
அல்லது மூவருடனோ
போராட வேண்டி வரும் “
“ இந்த மூவரை எதிர்த்து
யார் போராடினாலும் ;
எந்த ஒரு காரணத்திற்காக
போராடினாலும் ;
அவர்கள் மக்கள் நலனில்
அக்கறை கொண்டு
மக்களுக்கு ஆதரவாக
இருப்பவர்கள் என்பதை
தெரிந்து கொள்ளலாம் “
“ மக்கள் நலனுக்காக
உண்மையாக
போராடுபவர்களை
இந்த மூவரும் புரிந்து
கொள்வார்கள்- ஆனால்
மக்களுக்காக
போராடுபவர்களை
இந்த மக்களே புரிந்து
கொள்ள மாட்டார்கள்
என்பது தான் வேதனைப்பட
வேண்டிய விஷயம் “
“ கொள்கை என்றால் என்ன
என்று கூட தெரியாமல்
பதவிக்காக பல்லிளித்துக்
கொண்டு இருப்பவர்கள் ;
ஞானிகள் ; மேதைகள் ;
அறிஞர்கள் என்று
தங்களை தாங்களே
சொல்லிக் கொண்டு
பதவியைத் தேடி
அலைபவர்கள் ;
பணத்திற்காகவும் ;
பதவிக்காகவும் ;
அதிகாரத்திற்காகவும் ;
தங்களை இந்த
சமுதாயத்தில் நல்லவர்கள்
போல் காட்டிக் கொண்டு
நடித்துக் கொண்டு
இருப்பவர்கள் ;
இவர்கள் அனைவரும்
தாங்கள் வாழ்வதற்காகவும் ;
தங்களுடைய குடும்பம்
வாழ்வதற்காகவும் ;
தங்களுடைய சந்ததிகள்
வாழ்வதற்காகவும் ;
தங்களுடைய சுய
லாபத்திற்காகவும் ;
மக்கள் மேல் அன்பு
கொண்டு அவர்களுக்காக
போராடுவது போல் நடித்துக்
கொண்டு இருப்பவர்கள் ; “
இவ்வாறு நடித்துக்
கொண்டு இருப்பவர்களை
இந்த மூவரும் கண்டு
கொள்ள மாட்டார்கள் ;
அவர்களை விட்டு
விடுவார்கள் - அவர்கள்
விடுவார்கள் - அவர்கள்
போலியானவர்கள் ;
நடிப்பவர்கள்; என்று
தெரியும் ; “
“அவர்களை வளர விட்டு
விடுவார்கள்; மக்களும்
இந்த போலியானவர்களைத்
தான் உண்மையானவர்கள்
என்று நம்பி - அவர்கள்
பின்னால் செல்வார்கள்
தங்களுக்காக
போராடுபவர்கள் - என்று
அவர்களை போற்றுவார்கள் ;
மதிப்பார்கள் ; - அவர்கள்
இடும் கட்டளைகளை
ஏற்றுக் கொண்டு
அடிமைகளாக இருப்பார்கள் ; “
“தங்களை வளர்த்துக்
கொள்வதற்காக மக்களுக்கு
ஆதரவாக இருப்பதாக
நடித்துக் கொண்டு
இந்த மூவரையும்
எதிர்ப்பவர்களை
இந்த மூவரும் கண்டு
கொள்ள மாட்டார்கள்
விட்டு விடுவார்கள் ; “
“ தங்கள் மூவர் மேல் உள்ள
தவறுகளை கண்டு பிடித்து
தங்கள் மூவரையும் குற்றவாளி
என்று குற்றம் சொன்ன
ஒருவரை - மக்களுக்காக
உண்மையாக உழைத்த
ஒருவரை – மக்களுக்காக
உண்மையாக பாடுபட்ட
ஒருவரை தாங்கள் செய்த
குற்றம் வெளியே தெரிந்து
விடக்கூடாது என்பதற்காக
அவரை சுட்டு விடுவார்கள் ;
அல்லது
எரித்து விடுவார்கள் ;
அல்லது
சிறையில் வைத்து
சித்திரவதை செய்து
கொன்று விடுவார்கள் ; “
“கொன்று விட்டு - அவர்
இறந்த பிறகு அவரை
பெருமைப்படுத்தும் விதத்தில்
செயல்களைச் செய்வது ;
சிலைகள் வைப்பது ;
போன்ற செயல்களைச்
செய்வதின் மூலம்
தங்களுடைய குற்றத்தை
மறைக்க முயற்சி செய்வார்கள் ;”
“உலக வரலாற்றை
எடுத்துப் பார்த்தால்
இத்தகைய செயல்கள் தான்
உலகம் முழுவதும்
நடைபெற்றுக் கொண்டு
இருக்கிறது என்பதை
நாம் தெள்ளத் தெளிவாக
உணர்ந்து கொள்ளலாம் “
“ மக்கள் நலனுக்காக
இந்த மூவரையும்
உண்மையாக எதிர்த்து
போராடியதே
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டதிற்கான
முக்கியமான காரணம் ;
இதில் மதம்
வெளிப்படையாகத்
தெரிந்தது - அரசியல்
மற்றும் பொருளாதாரம்
இரண்டும் வெளிப்படையாகத்
தெரியவில்லை”
“ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட பிறகு
அவருக்கு செய்யப்பட்ட
மரியாதைகளை தெரிந்து
கொண்டால் ;
ஜியார்டானோ புருனோ
மக்களுக்காக உண்மையாக
போராடினார் என்பதையும் ;
ஜியார்டானோ புருனோ
மக்களால் உண்மையாக
நேசிக்கப்பட்டவர் என்பதையும் ;
தெரிந்து கொள்ளலாம் “
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 20-02-2019
//////////////////////////////////////////////