இயேசு கிறிஸ்து-உரோமரிஷி-பதிவு-8
“”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
ஜீவனைப் பற்றி விளக்கும் பொழுது , இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:
வசனம்-1:
“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக் கொண்டாலும் , தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”
மாற்கு - 8 : 36
பொய் கதைகள் பல பேசி ,
பித்தலாட்டங்கள் பல செய்து ,
ஏமாற்றும் வித்தை பல செயல்படுத்தி ,
ஊர் ஊராகத் திரிந்து அலைந்து ,
நல்வழியில் முடிந்தால் நல்வழியிலும் ,
தீய வழியில் தவறு செய்து மாட்டாவிட்டால் தீய வழியிலும் ,
பொருள் பல சம்பாதித்து ,
இன்பம் துய்க்க இடங்கள் பல வாங்கி ,
மகிழ்ச்சி களிக்க வீடுகள் பல கட்டி ,
புகழில் திளைக்க பதவிகள் பல பெற்று வாழ்ந்தாலும் ,
இந்த உலகத்தையெல்லாம் தன் காலடியில் கொண்டு வந்து ஆண்டாலும் ,
உலக மக்களை தனக்கு அடிமையாகக் கொண்டாலும் ,
ஓன்றிலிருந்து ஒன்று ,
ஓன்றுடன் கலக்க ஒன்று ,
ஓன்றைப் பெற ஒன்று ,
ஓன்றை அறிய ஒன்று ,
ஓன்று உயர ஒன்று ,
ஓன்று இணைய ஒன்று ,
ஓன்று துளிர்க்க ஒன்று,
ஒன்று பிரிய ஒன்று,
ஒன்று முடிய ஒன்று ,
ஒன்றில் ஒன்று ,
ஒன்றாக ஒன்று ,
என்பதில் தெளிவு பெற்று ,
நடக்கப் போவதை உணரும் வழி இது தான் என்பதை ,
ஒன்றில் உணர்ந்து ,
இரண்டில் பழகி ,
மூன்றில் தெளிந்து ,
நாலும் அறிந்து ,
ஐம்பூதம் சாரம் உணர்ந்து ,
அறுசுவை புரிந்து ,
ஏழுநிலை கடந்து ,
எண்திசை பார்த்து ,
ஒன்பதை ஆட்சி செய்து ,
பத்தில் பக்குவம் முடிந்து ,
உணர்வற்ற நிலையை
உணர்வில் கலந்து ,
தெளிவின் சாரத்தை
உண்மையில் புரிந்து ,
பொய் - உண்மை முகமூடிட்டு
அலைவதை தெளிந்து ,
சூதின் தன்மை ,
மாயையின் மருட்சி ,
நிலையற்றதின் நிகழ்வு ,
முகவரியற்ற வாழ்க்கை அறிந்து ,
நடந்ததை தெளிவுப்படுத்தி ,
நடக்க வேண்டியதை ,
ஞாபகத்தில் வைத்து ,
உண்மை அரியணை ஏற
உயிரைத் தர வேண்டும்
என்பதை உணர்ந்து ,
சரித்திரத்தின் ரத்த நாளங்களுக்கு
தன் இரத்தத்தை
அளித்து ,
சுவாசக் காற்றை இழந்த
பூகோளத்திற்கு
சுவாசத்தை தந்து ,
முழுமையின் நிலை அறிந்து
அமைதி பெற்று ,
பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பாய்
பிரம்ம ரகசியமாய்
இருக்கும் ,
ஜீவனை சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட ,
ஜீவனின் மதிப்பு உணராமல் ,
அதனை நஷ்டப் படுத்தினால் ,
நஷ்டப்படுத்துவதால் மனிதனுக்கு ஒரு லாபமும் இல்லை .
ஜீவனின் சக்தி குறைய ,
ஜீவனின் அழுத்தம் குறைய ,
மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும் .
இறந்த பிறகு நாம் ஒன்றையும் கொண்டு செல்ல முடியாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும், ஒரு லாபமும் உண்டாகாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு லாபமும் கிடைக்காது என்கிறார் இயேசு .
வசனம்-2:
“மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
மாற்கு - 8 : 37
ஜீவனுக்கு ஈடாத இந்த உலகத்தில் எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது ,
ஜீவனுக்கு ஈடானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை ,
ஜீவன் இந்த உடலை விட்டு வெளியேறிய பிறகு பிணம் என்று பெயர் பெறும்.
மனிதன் ஜீவனை இழந்து , மரணித்த பிறகு , மீண்டும் ஜீவனை உயிர்ப்பிக்க முடியாது .
எனவே தான் இயேசு ஜீவனுக்கு ஈடாக மனிதன் எதைக் கொடுப்பான் .
இந்த உலகத்தை எல்லாம் ,
தான் சம்பாதித்ததை எல்லாம் ,
தன்னுடையதை எல்லாம் கொடுத்தாலும் ,
அவன் மீண்டும் உயிர் பெற முடியாது .
ஜீவனை நஷ்டப் படாமல் இருக்க வழி என்ன?
வைத்துக் கொள்வதற்கு வழி என்ன?
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதற்கான ரகசியங்கள் எவை என்பதை உணர்ந்து ,
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதால் பலன் என்ன?
என்பதை உணர்ந்து தெளிந்து ,
அறிவு விளக்கம் பெற வேண்டும் என்கிறார் இயேசு .
ஜீவனை நஷ்டப் படுத்தினால் ,
செத்த பிணத்தை ,
சாகும் பிணங்கள் ,
துhக்கிக் கொண்டு செல்லும் நிலை தான் ஏற்படும் என்கிறார் இயேசு .
உரோமரிஷி:
“””“ஆமென்றே இருபத்தோ ராயிரத்தோ
டறுநுhறு சுவாசமல்லோ ஒருநாளைக்குப்
போமென்று போனதனால் நாள்குறைந்து
போச்சுதுபோ காவிட்டால் போவதில்லை”””””
- உரோமரிஷி- உரோமரிஷி ஞானம்
காற்றை உள்ளே இழுத்து ,
வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம் .
இது உட்சுவாசம் , வெளி சுவாசம் என இரு வகைப்படும் .
இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21, 600 முறை நடக்கிறது .
இந்த உடம்பில் உட்சென்று இயல்பாகத் தங்குவது 14, 400 சுவாசமாகும் .
வீணாகச் செலவாகும் சுவாசம் 7, 200 ஆகும் .
இதன் விளைவால் வாழ்நாள் குறைந்து ,விரைவில் மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது .
எனவே , வீணாகச் செலவாகும் பிராணணை உடலில் சேமிக்க என்ன வழி என்று கண்டறிய வேண்டும் .
அவ்வாறு கண்டறிந்து வீணாகச் செலவாகும் ,
சுவாசத்தை வெளியே விடாமல் ,
உடலிலேயே அடக்கி விட்டால் ,
மரணம் என்பது ஏற்படாது.
மரணம் என்பது ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்கிறார் உரோமரிஷி .
வீணாகச் செல்லும் பிராணணை உடலில் நிறுத்தக் கூடிய ரகசியத்தை அறிந்து கொண்டால் ,
எவ்வாறு நிறுத்த வேண்டும் ,
அவ்வாறு நிறுத்துவதால் என்ன பலன் ,
பிராணணை உள்ளே நிறுத்துவதன் மூலம் ,
கிடைக்கும் சக்தி என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
அவ்வாறு உணர்ந்து கொண்டால் மரணமற்று வாழலாம் .
உள்ளிழுக்கும் பிராணனுடன் , அபானனும் கலக்கிறது .
பிராணன் என்பது உயிர்க்காற்று ,
அபானன் என்பது மலக்காற்று ,
உள்ளே இழுக்கப்பட்ட பிராணன் என்னும் உயிர்க்காற்றை ,
மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் என்னும் மலக் காற்றோடு கலக்கின்றது .
கலக்கப்பட்ட இரண்டும் ஆற்றல் மிகு வளியாகிக் குண்டலினி என்னும் பாம்பை மூலாதாரத்தில் விழிக்கச் செய்து ,
மூலாதாரம் , சுவாதிஷ்டானம் , மணிப்பூரகம் , அநாகதம் , விசுக்தி ,ஆக்கினை என்னும் ஆறு ஆதாரங்களைக் கடந்து,
ஆறு ஆதாரங்களுக்குரிய சக்தியை வெளிப்படச் செய்து ,
ஆறு ஆதாரங்களை விழிக்கச் செய்து ,
பிரம்மரந்திரத்தில் அதாவது சகஸ்ராரத்தில் நுழைகிறது ;
சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கிறது ;
இதனால் பிறப்பு , இறப்பற்ற நிலையை மனிதன் அடைகிறான் .
மரணம் அற்ற நிலையை அடைகிறான் .
மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறான் .
பிறப்பு , இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபடுகிறான் .
மரணம் இன்றி வாழ வேண்டுமானால் ,
சுவாசத்தை வீணாக்காமல் ,
சுவாசத்தை வீணாக்காமல் இருப்பதற்கு உரிய ரகசியத்தை உணர்ந்து ,
வீணாக்காத சுவாசத்தை வைத்துக் கொண்டு ,
எவ்வாறு மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வது ,
என்பதைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து , அதனைப் பின்பற்றி அதன் வழி நடந்தால் ,
அந்த வழி முறைகளைப் பின் பற்றினால் மரணமில்லாப் பெருவாழ்வு
பெற்று வாழலாம் என்கிறார் உரோமரிஷி .
இயேசு கிறிஸ்து - உரோமரிஷி:
இயேசு , எல்லாம் அடைந்தாலும் , ஜீவனை நஷ்டப் படுத்தினால் , ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் .
அவ்வாறே,
உரோமரிஷி ஜீவனை நஷ்டப் படுத்தினால் ஒரு பயனும் இல்லை ,
ஜீவனை நஷ்டப் படுத்தாமல் சேமித்து வைப்பதால் மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்று வாழலாம் என்கிறார் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஎட்டு ந்தான்முற்றே “”