July 01, 2019

பரம்பொருள்-பதிவு-34


                    பரம்பொருள்-பதிவு-34

" இருப்பு நிலை தான்
இயக்கமற்ற நிலை என்று
சொல்லப்படக்கூடிய
அருவ நிலையில் உள்ள
பரம்பொருள்  
இந்த பரம்பொருள் தான்
இரண்டு நிலைகளில்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது "

ஒன்று ;
“இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலை “

இரண்டு ;
“இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலை”

"சிவம் என்ற வார்த்தைக்கும்;
சிவன் என்ற வார்த்தைக்கும்;
வேறுபாடு இருக்கிறது "

"இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலை
சிவம் எனப்படுகிறது ;"

"இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய இருப்பு நிலை
சிவன் எனப்படுகிறது ;"

"சிவம் என்ற வார்த்தை
இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலையைக்
குறிக்கும் ; "

" சிவன் என்ற வார்த்தை
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலையைக்
குறிக்கும் ;"

" இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்புநிலையான சிவம்
அருவ நிலையைக்
குறிக்கும் ;"

" இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்புநிலையான சிவன்
உருவ நிலையைப்
குறிக்கும் ;"

" இந்து மதக்
கோயில்களில் உள்ள
சிவலிங்கம்
உருவமற்று இருக்கிறது ;
சிவலிங்கத்திற்கு
உருவம் என்ற
ஒன்று கிடையாது ;
உருவமற்ற நிலையில்
இருக்கக்கூடிய - இந்த
சிவலிங்கத்தைத் தான்
இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்புநிலையான - இந்த
சிவலிங்கத்தைத் தான்
நாம் சிவம் என்று
பெயரிட்டு அழைக்கிறோம் "

" புலித்தோலை
ஆடையாக அணிந்தபடி ;
பாம்பை கழுத்தில்
சுற்றியபடி ;
பிறைச் சந்திரனை
ஜடாமுடியில் வைத்தபடி ;
கங்கை நதியை
ஜடாமுடியில் சுமந்தபடி ;
மூன்றாவது கண் என்று
சொல்லப்படக்கூடிய
ஞானக்கண்ணை
நெற்றியில் மறைத்த படி ;
உருவநிலையில்
காட்சியளித்துக்
கொண்டிருக்கும்
இந்த நிலையைத் தான் ;
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்புநிலையான
இந்த நிலையைத் தான் ;
சிவன் என்று பெயரிட்டு
அழைக்கிறோம் "

" இது தான்
சிவம் என்ற வார்த்தைக்கும்
சிவன் என்ற வார்த்தைக்கும்
உள்ள முக்கியமான
வேறுபாடுகள் ஆகும் "

“இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலையான
சிவம் என்று
சொல்லப்படக்கூடிய
சிவலிங்கத்தை
வணங்கும் போது
அருவத்திலிருந்து
நேரடியாக அருவத்திற்கு
செல்ல முடியும் ;

“ ஆனால்
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலையான
சிவன் என்று
சொல்லப்படக்கூடிய
சிவன் கடவுள் சிலையை
வணங்கும்போது
உருவத்திலிருந்து தான்
அருவத்திற்கு செல்ல
முடியும் “

“உலகத்தில் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களில் உள்ள
கடவுள் சிலை மற்றும்
சிவன் கடவுள் சிலை
ஆகிய கடவுள் சிலைகளை
வணங்கும் போது
உருவத்திலிருந்து தான்
அருவத்திற்கு செல்ல
முடியும் ;
ஆனால் சிவம் என்று
சொல்லப்படக்கூடிய
சிவலிங்கத்தை
வணங்கினால் மட்டுமே
அருவத்திலிருந்து
அருவத்திற்கு
செல்ல முடியும் ;

“இது தான்
சிவலிங்கத்திற்கு உள்ள
தனிச்சிறப்பு ஆகும் “

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 01-07-2019
//////////////////////////////////////////////////////////