பரம்பொருள்-பதிவு-7
“உலகம் முழுவதும்
காணப்படும் கற்கள்
அனைத்தையும்
எடுத்துக் கொண்டால்
அவைகளை
இரண்டே இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்”
ஒன்று
:
உயிருள்ள கல்
இரண்டு
:
உயிரற்ற கல்
“உலகத்தில் உள்ள
இந்துமதக் கோயில்கள்
அனைத்திலும் காணப்படும்
கடவுள் சிலைகள்
அனைத்தும் ;
அந்தக்காலம் முதல்
இந்தக் காலம் வரை
உயிருள்ள கற்களில்
மட்டுமே செதுக்கப்பட்டு
கோயில்களில் - மக்களின்
இறைவழிபாட்டிற்காக
வைக்கப்பட்டுள்ளது “
“ இந்துமதக் கோயில்களில்
காணப்படும் – இத்தகைய
கடவுள் சிலைகள்
மூலமாக பெறப்படும்
சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கோயிலுக்குள் சக்தியானது
தொடர்ந்து உற்பத்தி
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும் வகையில்
உயிருள்ள கற்களில்
கடவுள் சிலைகள்
செதுக்கப்பட்டு அனைத்து
இந்துமதக் கோயில்களிலும்
வைக்கப்பட்டுள்ளது. ;”
“இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டு மக்களின்
இறைவழிபாட்டிற்காக
மக்களுக்கு வழங்கப்பட்ட
நாள் முதல்
இன்று வரை
இந்துமதக் கோயில்கள்
சக்தியின் மையங்களாகத்
திகழ்ந்து கொண்டிருக்கின்றன”
“அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்துமதக் கோயில்கள்
சக்தியின் மையங்களாக
திகழ்வதற்கு காரணம்
கடவுள் சிலைகள்
உயிருள்ள கற்களினால்
செதுக்கப்பட்டதும் ஒரு
காரணம் ஆகும் “
“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலையை செதுக்கி
மக்களின் வழிபாட்டிற்காக
வைக்கப்படுவதற்கு முன்
கடவுள் சிலையானது
எவ்வளவு நீளம்,
அகலம், உயரம்
இருக்க வேண்டும் என்பது
முடிவு செய்யப்பட்டு
அதற்கேற்றவாறு கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு
பிறகு அந்தக் கல்லானது
உயிருள்ள கல்லா (அல்லது)
உயிரற்ற கல்லா என்பது
ஆராய்ந்து அறியப்படுகிறது “
“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலையை
செதுக்கி வைப்பதற்காக
முதலில் ஒரு கல்லானது
தேர்ந்தெடுத்துக்
கொள்ளப்படுகிறது,
கருங்காலி மரத்தில்
சாண் அளவு கருங்காலி
கட்டை செய்து - அதை
கல்லின் மேல் அடிக்க
கல்லில் இருந்து
ஒரு நாதம் எழும்”
“ கருங்காலிக் கட்டையால்
கல்லில் அடிக்கும்போது
எழும் நாதத்தை வைத்து
கல்லானது
உயிருள்ள கல்லா(அல்லது)
உயிரற்ற கல்லா
என்று கண்டுபிடிப்பர் “
“ உயிருள்ள கல்லிலிருந்து
ஒரு நாதமும் ;
உயிரற்ற கல்லிலிருந்து
வேறு ஒரு நாதமும் ;
வெளிப்படும் ;
கல்லிலிருந்து வெளிப்படும்
இந்த இரு வேறுபட்ட
நாதத்தை உணரும்
ஆற்றல் படைத்தவர்கள்
உயிரற்ற கல்லை விடுத்து
உயிருள்ள கல்லை
கடவுள் சிலையை
செதுக்குவதற்கு
தேர்ந்தெடுக்கிறார்கள் “
“கல்லில் எழும்
நாதத்தை வைத்து
உயிருள்ள கல்லா (அல்லது)
உயிரற்ற கல்லா - என்று
கண்டுபிடிப்பவர்களுக்கு
ஸ்தபதிகள் என்று பெயர் “
“உயிருள்ள கல்லை
தேர்ந்தெடுத்தபின்
கடவுள் சிலையை
உடனே செதுக்கக் கூடாது ; “
“கல்லிடம் மக்கள்
வழிபடுவதற்காக உன்னை
கடவுள் சிலையாக
செதுக்கப்போகிறேன்
செதுக்கலாமா
வேண்டாமா – என்று
கல்லிடம் அனுமதி
வாங்க வேண்டும் ;
கல்லானது அனுமதி
கொடுத்தால் மட்டுமே
அந்த உயிருள்ள கல்லில்
கடவுள்சிலையை
செதுக்க வேண்டும் ;
இல்லையென்றால்
கடவுள் சிலையை
செதுக்கக் கூடாது ; “
“கடவுள் சிலையை
செதுக்க உயிருள்ள
கல்லானது அனுமதி
அளித்தபிறகு
கடவுள் சிலையை
செதுக்க துவங்க
வேண்டும் “
“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலையை
வைப்பதற்கு
உயிருள்ள கல்லை
கண்டுபிடிப்பது ;
கல்லிடம் கடவுள்
சிலையை செதுக்குவதற்கு
அனுமதி பெறுவது - என்ற
இரண்டு முக்கியமான
முறைகள்
பின்பற்றப்படுகின்றன ; “
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
--------- 27-04-2019
/////////////////////////////////////////////////////