ஜபம்-பதிவு-956
மரணமற்ற
அஸ்வத்தாமன்-88
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின்
கதை)
துரோணர்: காலம்
சொன்னதால் செய்தேனா, அல்லது கர்மா விளைவால் செய்தேனா என்பது எனக்குத் தெரியவில்லை.
நான் செய்தது சரியா தவறா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
பிரம்மாஸ்திரத்தை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறான செயலுக்காக பயன்படுத்தினால் அது சாபத்தைக் கொண்டு வந்து விடும்.
சாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள். அது தான் உனக்கு நல்லது.
அஸ்வத்தாமன்: கர்மா என்னை சாபத்திற்கு உட்படுத்தினாலும், என்னை கஷ்டத்திற்குள்
தள்ளினாலும், துன்பத்திற்குள் விழ வைத்தாலும் கர்மாவின் விளைவிலிருந்து யாரும் தப்ப
முடியாது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கர்மாவினால் நான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றால்
அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். யாரால் தடுக்க முடியும்.
கர்மாவை யாராலும்
மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் கர்மாவைப் பற்றியோ அதன் விளைவுகளைப்
பற்றியோ நான் கவலைப்படவில்லை.
நீங்கள் கவலைப்பட
வேண்டாம் தந்தையே. ஒரு வீரனுக்கு, தகுதியான ஒருவனுக்குத் தான் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக்
கொடுத்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு மன அமைதி அடையுங்கள்.
என்னை வாழ்த்தி
அனுப்புங்கள் நான் செல்கிறேன்.
துரோணர்: எங்கே செல்கிறாய்
அஸ்வத்தாமன்: சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரம். பெறப்
போகிறேன்.
துரோணர்: என்னிடம்
பெற்றதுபோல் சிவனிடம் பெறுவது அவ்வளவு எளிது கிடையாது என்பது உனக்குத் தெரியுமா
அஸ்வத்தாமன்: இந்த உலகத்தில் எந்த ஒன்றைப் பெறுவதும் எளிதானது கிடையாது
என்பது எனக்குத்
தெரியும்.
பாசுபதாஸ்திரம் பெறுவது எவ்வளவு கடினம் என்றும், அதுவும் சிவனிடமிருந்து பெறுவது
எவ்வளவு கடினம் என்றும் எனக்குத் தெரியும்.
இவைகளுடன் இன்னொன்றும் எனக்குத் தெரியும்
துரோணர்: என்ன
தெரியும்
அஸ்வத்தாமன்: என்னால் சிவனிடமிருந்து
பாசுபதாஸ்திரம் பெற முடியும்
என்பதும் எனக்குத் தெரியும்
துரோணரின் மகன் அஸ்வத்தாமன் சாதாரணமான வீரன் கிடையாது என்பதை
இந்த உலகத்திற்கு நிரூபிக்கவும் தெரியும்.
அதனால் தான் செல்கிறேன். சிவனை நோக்கி தவம் இருக்க செல்கிறேன்.
சிவனை அழைத்து
பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் செல்கிறேன்.
மீண்டும் உங்களை பார்க்க வரும் போது பாசுபாதாஸ்திரத்துடன்
தான் வருவேன்.
என்னை
ஆசிர்வதியுங்கள் தந்தையே.
(துரோணர்
ஆசீர்வதிக்கிறார். அஸ்வத்தாமன் செல்கிறான். பாசுபதாஸ்திரத்தை தன் மகன் அஸ்வத்தாமன் பெற்று விடுவான்
என்பதை உணர்ந்து கொண்ட துரோணர் தன் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு சிந்தனையில்
மூழ்கி விட்டார்.)
சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெறுவதற்காக அஸ்வத்தாமன் புறப்பட்டு விட்டான்.
அவன் பின்னால் செல்வோம். பாசுபதாஸ்திரத்தை எவ்வாறு பெறுகிறான் என்பதைப் பார்ப்போம்.
------K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்,
------21-04-2024
-----ஞாயிற்றுக் கிழமை
////////////////////////////////////////////////////