நம்
முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-10
அந்தக் காலத்தில்
ஒரு கிராமத்தில்
நோய் ஏற்பட்டால்
நோய் தொற்று
ஏற்பட்டு
பல பேர்
இறக்கக்கூடிய
சூழ்நிலை ஏற்படும்
அதுமட்டுமல்லாமல்
அந்த நோயானது
பக்கத்தில் உள்ள
கிராமங்களுக்கும்
பரவி
பக்கத்து
கிராமங்களையும்
பாதிப்பு
அடையச் செய்வதோடு
அந்த கிராமத்தில்
வசிக்கும்
பலபேர் இறக்கக்கூடிய
சூழ்நிலையையும்
ஏற்படுத்தும்
ஒவ்வொரு வருடமும்
ஒரு குறிப்பிட்ட
காலத்தில்
இத்தகைய நிலை
ஏற்படுவதை
உணர்ந்த
நம்முடைய
முன்னோர்கள்
இத்தகைய சூழ்நிலை
இனி வருங்காலங்களில்
ஏற்படாமல்
இருக்க வேண்டுமானால்
என்ன செய்வது
என்று யோசித்தனர்,
நோயினால் பாதிப்பு
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்
நோய்தொற்றிக்
கொண்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்த
வேண்டும்
என்று முடிவெடுத்தனர்
அதாவது
நோய் உண்டான
கிராமத்திலிருந்து
நோய் உண்டாகாத
கிராமத்தை
பிரித்து விட
வேண்டும்
என்று முடிவு
எடுத்தனர்
அது மட்டுமல்லாமல்
நோய் மக்களுக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும்
அதையும் மீறி
நோய்
ஏற்பட்டு விட்டால்
நோயிலிருந்து
குணமடையும்
வழிகளையும்
உண்டாக்கி வைத்தனர்
அந்த வழிமுறைகளை
மக்கள் எப்படி
பின்பற்ற வேண்டும்
என்ற முறைகளை
வகுத்து வைத்தனர்
அதை ஆண்டுதோறும்
முறையாக
பின்பற்ற வேண்டும்
என்பதற்காக
பண்டிகையாக மாற்றி
பண்டிகையை
கொண்டாட வைத்து
விட்டனர்.
ஆண்டு தோறும்
வருடத்தில்
ஒரு குறிப்பிட்ட
மாதத்தில்
அந்த பண்டிகையை
கொண்டாட வேண்டும்
என்றும்
அதை அனைவரும்
தொடர்ந்து
பின்பற்றி
கொண்டாடி
வர வேண்டும்
என்ற விதிமுறையை
வகுத்து வைத்தனர்
நாம் வருடந்தோறும்
அந்த பண்டிகையை
கொண்டாடுகிறோம்
ஆனால்
அந்த பண்டிகையை
எதற்காக
கொண்டாடுகிறோம்
என்ன
காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
அதில் உள்ள
அர்த்தம் என்ன
என்பதை
உணராமல்
நாம் அந்த
பண்டிகையை
கொண்டாடி வருகிறோம்
அந்த பண்டிகை
எந்த பண்டிகை
என்றும்
அந்த பண்டிகையை
எத்தகைய காரணத்திற்காக
கொண்டாடுகிறோம்
என்பதையும்
பார்ப்போம்
----------
இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////