July 28, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-50


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-50

நட்பானது
உண்மையான நட்பாக
இருந்தால்
அந்த நட்பானது
முக்கியமாக இரண்டு
விதமான உயர்ந்த
தன்மைகளைத்
தன்னுள் கொண்டிருக்க
வேண்டும்.

ஒன்று  :எந்த சூழ்நிலையிலும்
         நட்பு ஒரே மாதிரி
         இருக்க வேண்டும்

இரண்டு :எத்தகைய
         விஷயத்தையும்
         செய்வதற்குத் தயாராக
         இருக்க வேண்டும்


இளவயதில் ஒன்றாக
படித்த இரண்டு நண்பர்கள்
படிக்கும் காலத்தில்
நண்பர்களாக இருந்து
பின்னர் பிரிந்து
சென்றார்கள்
அந்த நண்பர்கள்
நீண்ட நாட்கள்
கழித்து ஒன்றாக
சந்தித்துக் கொண்டனர்

அவ்வாறு சந்தித்துக்
கொண்டபோது
ஒருவர் பணம், பதவி
நல்ல வேலை
அதிக சம்பளம் என்று
பணக்காரனாக இருக்கிறார்
மற்றொருவர்
சாதாரண வேலை
பார்த்துக் கொண்டு
குறைந்த வருமானத்தில்
குடும்பத்தை
ஓட்டிக் கொண்டு
ஏழையாக இருக்கிறார்.

ஏழை நண்பன்
பணக்கார நண்பனை
சந்திக்கும்
இடங்களில் எல்லாம்
பணக்கார நண்பனை
பெயர் சொல்லி கூப்பிடுவது
வா, போ என்று
ஒருமையில் அழைப்பது
என்று இருந்தார்.

இதனால் பணக்கார நண்பன்
ஏழை நண்பனை அழைத்து
நீ பெயர் சொல்லி
கூப்பிடுவதையும்
வா, போ என்று
ஒருமையில் அழைப்பதையும்
என்னை சுற்றி
இருப்பவர்கள்
தப்பாக நினைத்துக்
கொள்கிறார்கள்

எனவே,
நாம் தனியாக இருக்கும்
போது எப்படி
வேண்டுமானாலும்
பேசிக் கொள்ளலாம்
ஆனால் நான் அலுவலகத்தில்
இருந்தாலோ (அல்லது)
நண்பர்களுடன்
இருந்தாலோ (அல்லது)
உறவினர்களுடன்
இருந்தாலோ
என்னை பெயரைச்
சொல்லி கூப்பிடாதே
வா, போ என்று
ஒருமையில் கூப்பிடாதே
என்னை மரியாதையாக
கூப்பிடு
மரியாதையாக பழகு
மரியாதையாக
நடந்து கொள்
என்று சொல்கிறான்

அதைக் கேட்டு
அந்த ஏழை நண்பனும்
நடந்து கொள்கிறான்

காலத்திற்கு தகுந்தபடியும்
இடத்திற்கு ஏற்றபடியும்
நேரத்திற்கு உகந்தபடியும்
நட்பானது
தனது குணத்தை
மாற்றிக் கொண்டே
இருந்தால் அந்த நட்பு
எல்லா சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு அல்ல
என்பதையும் தனது
குணத்தை மாற்றிக்
கொள்ளாமல் இருந்தால்
அந்த நட்பு  
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு.
என்பதையும் நாம்
தெரிந்து கொள்ளலாம்
அவ்வாறு
தெரிந்து கொண்டால்
நாம் பணக்கார
நண்பனின் நட்பு
எல்லா சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு அல்ல
என்பதையும்
அதைப்போல
எழை நண்பனின்
நட்பும் எல்லா
சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு அல்ல
என்பதையும் நாம்
தெரிந்து கொள்ளலாம்.


நண்பன் ஒரு விஷயத்தை
நம்மை செய்யச்
சொன்னாலோ (அல்லது)
நண்பன் ஒரு விஷயத்தை
செய்கிறான் என்பதை
அறிந்து
அந்த விஷயத்தை
நாம் செய்தாலோ
நண்பனுக்கு நன்மை
கிடைக்குமா (அல்லது)
தீமை கிடைக்குமா
என்பதை அறிந்து
தீமை கிடைத்தால்
அந்த விஷயத்தை
செய்யாமல் விலக்கி
வைத்து விட்டு
நன்மை தரும்
விஷயங்கள் எவை
என்பதை ஆராய்ந்து
அத்தகைய நன்மையான
விஷயங்களை
நல்ல
செயல்களைக் கொண்டு
முழு முயற்சி
எடுத்து செய்து
முடிக்க வேண்டும் அதாவது
உயிரைக் கொடுத்தாவது
நண்பனுக்காக அந்த
நல்ல விஷயத்தை
செய்து முடிக்க
வேண்டும் என்பதே
எத்தகைய விஷயத்தையும்
செய்யத் தயாராக
இருக்க வேண்டும்
என்பதற்கான பொருள்

எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்க வேண்டும்
என்பதும்
எந்த விஷயத்தையும்
செய்யத் தயாராக இருக்க
வேண்டும் என்பதும்
நட்பின் மிக
உயர்ந்த தன்மைகள்
இவைகளை கடைபிடித்து
வாழ்ந்தவர்களும்
இச்சமுதாயத்தில்
இருந்திருக்கிறார்கள்
தற்போது வாழ்பவர்களும்
இருக்கிறார்கள்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

----------இன்னும் வரும்
-----------28-07-2018
//////////////////////////////////////////////