January 15, 2023

ஜபம்-பதிவு-920- மரணமற்ற அஸ்வத்தாமன்-52 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-920-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-52

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஏன் இப்படி

மாறினாய்

அஸ்வத்தாமா

என்னையே

குற்றவாளி

என்கிறாய்

 

நீ பேசவில்லை

துரியோதனனின்

குரலாக நீ

இருக்கிறாய்

 

துரியோதனனின்

குரல் உன்

மூலமாக

வெளிப்படுகிறது

அவ்வளவு தான்

 

அஸ்வத்தாமன் :

நாங்கள் மட்டுமல்ல

இந்த உலகமும்

கேட்கும் கேள்விக்கு

நீங்கள் என்ன

பதில் சொல்லப்

போகிறீர்கள்

 

ஏகலைவனின்

கட்டை விரலுக்கு

என்ன பதில்

சொல்லப்

போகிறீர்கள்

 

அஸ்வத்தாமன் :

ஏகலைவனின்

கட்டை விரல்

இந்த பூமியில்

விழுந்ததற்கு

நான் தான்

காரணம்

என்றால்

என்னுடைய

தலை இந்த

பூமியில்

விழட்டும்

 

விதி அப்படித்

தான் செயல்பட

வேண்டும்

என்றால்

அப்படியே

செயல்படட்டும்

 

அஸ்வத்தாமன் :

ஒரு செயலுக்கு

இன்னொரு

செயல் என்பது

எப்படி சரியாகும்

 

துரோணர் :

ஒருவருக்கு

நாம் செய்ததை

அவரே திருப்பித்

தர வேண்டும்

என்ற அவசியம்

இல்லை

 

வேறு

ஒருவரும்

தரலாம்

அது தான்

கர்மா

 

என்னுடைய

கர்மாவின் படி

ஏகலைவனின்

கட்டை விரலுக்கு

என்னுடைய

தலை தான்

விலை என்றால்

அது மண்ணில்

விழட்டும்

அதை

விழச்செய்பவர்

வரட்டும்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

துரியோதனன்

உண்மையைச்

சொன்னான்

நியாயம்

கேட்டான்

 

அவன் சொன்னது

நியாயம் என்று

எனக்கு தோன்றியது

அதனால் அவன்

பக்கம் நின்று

பேசினேன்

கேட்ட கேள்விக்கு

பதில் சொல்லாமல்

புரியாத வகையில்

பதில் சொல்கிறீர்கள்

 

துரோணர் :

புரியோத வகையில்

பேசவில்லை

புரியும் வகையில்

தான் பேசினேன்

 

நான் பேசியவைகளில்

உள்ள அர்த்தங்களை

காலம் வெளிப்படுத்தும்

 

எது சரி

எது தவறு

என்று

அப்போது

அனைத்தும்

புரியும்

 

இத்துடன்

இன்றைய

வகுப்பை

முடித்துக்

கொள்ளலாம்

வகுப்பு

கலையட்டும்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

 

துரியோதனன் :

குருதேவா

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

 

துரியோதனன் :

குருதேவா

 

துரோணர் :

அனைவரும்

செல்லலாம்

 

வகுப்பு

முடிந்ததும்

அஸ்வத்தாமன்

யாருடனும்

பேசாமல்

தன்னுடைய

குடிலை

நோக்கி

சென்று

கொண்டிருந்தான்

 

அவனுடைய

தோள் மீது

ஒரு கை

பட்டு

நண்பா

என்றது

குரல் வந்த

திசையை

நோக்கி

திரும்பி

பார்த்தான்

அஸ்வத்தாமன்

அங்கே ??????

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-919- மரணமற்ற அஸ்வத்தாமன்-51 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-919-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-51

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

எதிர்காலத்தில்

இந்த உலகம்

அர்ஜுனனை

உலகத்திலேயே

சிறந்த வில்லாளி

என்று ஒவ்வொரு

முறை அழைக்கும்

போதும்

அதற்குப் பின்னால்

இரத்தக் கறை படிந்த

ஏகலைவனின்

கட்டை விரல்

மட்டுமல்ல

அது வெட்டுவதற்கு

காரணமான

உங்களுடைய

பெயரும் இருக்கும்

என்பதை மறந்து

விடாதீர்கள்

 

துரோணர் :

காரண காரியம்

இன்றி

எந்த ஒரு

செயலும்

நடைபெறாது

 

அஸ்வத்தாமன் :

நியாயம் கேட்டால்

அதற்கு காரணம்

காரியத்தின்

மேல் பழி

போடுகிறீர்கள்

 

அர்ஜுனனுக்காக

நீங்கள்

ஏகலைவனின்

கட்டை விரலைக்

கேட்டது

அவனது

வாழ்க்கையை

அழித்தது

அவனுடைய

திறமையை

இந்த உலகத்திற்கு

தெரியாமல்

செய்தது

அர்ஜுனனை விட

ஏகலைவன்

சிறந்தவன்

என்பதை

இந்த உலகம்

அறியாமல் செய்தது

ஆகியவை

அனைத்துமே

தவறு தான்

 

அர்ஜுனனுக்காக

நீங்கள் செய்த

இந்த செயல்

எப்போதுமே

உங்கள்

வாழ்க்கையில்

களங்கமாக இருந்து

கொண்டே தான்

இருக்கும்

பாவமாக

உங்களைத்

துரத்திக் கொண்டு

தான் இருக்கும்

 

உங்களுக்கு ஏற்பட்ட

இந்த களங்கத்தை

எப்படி துடைக்கப்

போகிறீர்கள்

பாவத்தை எப்படி

கழுவப் போகிறீர்கள்

 

துரியோதனன்

கேட்ட கேள்விக்கு

நீங்கள் என்ன

பதில் சொல்லப்

போகிறீர்கள்

 

துரியோதனன்

மட்டுமல்ல

ஏகலைவனைச்

சேர்ந்தவர்களும்

கேள்விகளைக்

கேட்கிறார்கள்

 

துரோணர் :

என்ன

கேள்விகளைக்

கேட்கிறார்கள்

 

அஸ்வத்தாமன் :

சமுதாயத்தால்

தாழ்த்தி

வைக்கப்பட்டவனை

ஒடுக்கி

வைக்கப்பட்டவனை

ஒதுக்கி

வைக்கப்பட்டவனை

அடக்கி

வைக்கப்பட்டவனை

கல்வி கற்க

விட மாட்டீர்களா

 

அவனுக்கு இந்த

சமுதாயமும் கல்வி

கற்றுத் தராது

தானகவே அவனும்

கல்வி கற்றுக்

கொண்டால்

அதனை ஏற்றுக்

கொள்ளவும்

மாட்டீர்கள்

ஏற்றுக்

கொள்வதற்கு

உங்கள் மனமும்

இடம் தராது

 

சமுதாயத்தால்

தாழ்த்தி

வைக்கப்பட்டவன்

கல்வி

கற்றுக்

கொண்டால்

பணம் பதவி

அதிகாரம்

படைத்தவர்களுக்கு

சமமாக வந்து

விடுவான் என்ற

காரணத்தினால்

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து

விடுவீர்களா

என்று இந்த

உலகம் உங்களைப்

பார்த்து கேள்வி

கேட்கிறது

 

அர்ஜுனனுக்காக

தேவையற்ற

செயலைச் செய்து

அழிக்க முடியாத

களங்கத்தைச்

சுமந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

நீக்க முடியாத

பாவம் உங்களைத்

துரத்திக் கொண்டு

இருக்கிறது

 

இப்போது

என்ன

செய்யப்

போகிறீர்கள்

 

துரியோதனனின்

கேள்வி தான்

என்னுடைய

கேள்வியும்

 

எங்களுக்கு

என்ன பதில்

சொல்லப்

போகிறீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-918- மரணமற்ற அஸ்வத்தாமன்-50 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-918-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-50

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

நீரானது

அது இருக்கும்

இடத்தை பொறுத்து

வடிவம் பெறும்

 

கடலில் விழுந்தால்

அது உப்புத்

தன்மையைப் பெறும்

அழுக்கடைந்த

நீரில் விழுந்தால்

அது அழுக்காகி விடும்

 

அஸ்வத்தாமா

நீ நீரைப்

போன்றவன்

எங்கே இருக்க

வேண்டுமோ

அங்கே இரு

எங்கே சேர

வேண்டுமோ

அங்கே சேரு

 

தவறான

இடத்தில்

சேர்ந்தால்

தவறாகத்

தான்

பேசுவாய்

தவறாகத்

தான்

சிந்திப்பாய்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

என்னை

நீங்கள் நீர்

என்றீர்கள்

அதை நான்

ஏற்றுக்

கொள்கிறேன்

 

ஏன் இந்த நீர்

தென்னை மரத்தின்

வேரில் விழுந்து

தென்னை மரத்தின்

இளநீரில்

சுவை மிகுந்த

நீராக மாற்ற

மடைந்து

இருக்கிறேன்

என்று எடுத்துக்

கொள்ளுங்கள்

 

இந்த நீர்

சிப்பிக்குள் விழுந்து

முத்தாக மாறி

இருக்கிறது என்று

எடுத்துக்

கொள்ளுங்கள்

 

துரோணர் :

உன்னுடைய

பேச்சு

நல்லதாக

இருந்தால்

உன்னுடைய

கருத்தை ஏற்றுக்

கொள்ளலாம்

 

ஆனால்

உன்னுடைய

பேச்சு நல்லதாக

இல்லையே

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

தாங்கள்

அனைத்தும்

அறிந்தவர்

சாஸ்திரங்களில்

வல்லவர்

அஸ்திர

வித்தையில்

சிறந்தவர்

 

குருதேவராக

இருந்து

சீடர்களை

வழிநடத்தக்

கூடியதில்

உயர்ந்து

நிற்பவர்

 

குருவாக

இருப்பவர்

அனைத்து

சீடர்களையும்

ஒன்றாக

நினைக்க

வேண்டும்

ஒரு சீடனை

உயர்வாகவும்

ஒரு சீடனை

தாழ்வாகவும்

நினைக்கக்

கூடாது

 

சீடனை

வளர்க்க வேண்டும்

ஊக்குவிக்க வேண்டும்

அவனுடைய திறமையை

வெளிக்கொண்டு

வர வேண்டும்

அதனை விடுத்து

சீடனை

அழிக்கக்கூடாது

அவனுடைய

வாழ்க்கையை

பாழாக்கக் கூடாது

அது நேரடியாகக்

கற்றாலும் சரி

மறைமுகமாகக்

கற்றாலும் சரி

 

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆக வேண்டும்

என்றால்

அவன்

தன்னுடைய

திறமையை

வளர்த்துக்

கொண்டிக்க

வேண்டும்

அதற்கேற்ற

பயிற்சிகளை

செய்திருக்க

வேண்டும்

அதற்காக

அவன்

உழைத்திருக்க

வேண்டும்

ஆனால்

அவன்

அவ்வாறு

செய்யவில்லை

 

அப்படியே

அர்ஜுனன்

செய்தாலும்

ஏகலைவன்

இருக்கும் வரை

அர்ஜுனனால்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆக முடியாது

என்பதை

உணர்ந்த நீங்கள்

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளி

ஆக வேண்டும்

என்பதற்காக

ஏகலைவனின்

கட்டை விரலை

வெட்டி வாங்கி

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து விட்டீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-917- மரணமற்ற அஸ்வத்தாமன்-49 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-917-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-49

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

நீங்கள் குருவாக

நடந்து கொண்டிருந்தால்

நானும் குருதேவர்

என்று அழைத்திருப்பேன்

ஆனால் நீங்கள் ஒரு

குருவாக நடந்து

கொள்ளவில்லையே

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

 

அஸ்வத்தாமன் :

ஏகலைவன்

விஷயத்தில்

நீங்கள் நடந்து

கொண்ட விஷயத்தை

வைத்துத் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

அவன்

என்னுடைய

சீடன்

கிடையாதே

 

அஸ்வத்தாமன் :

சீடன்

இல்லை என்றால்

எதற்காக

குருதட்சணை

என்ற பெயரில்

அவனுடைய

கட்டை விரலை

கேட்டு

வாங்கினீர்கள்

 

துரோணர் :

அவன் முறைப்படி

என்னை குருவாக

ஏற்றுக் கொண்டு

கல்வி கற்கவில்லை

 

என்னுடைய சிலையை

வைத்துக் கொண்டு

குருவாக நினைத்துக்

கொண்டு கல்வி

கற்றான் என்னுடைய

அனுமதி இல்லாமல்

என்னை குருவாக

நினைத்து கல்வி

கற்றது தவறு

 

அவன் செய்த

செயல் தவறு

என்ற

காரணத்தினால்

தான்

அவனுடைய

கட்டை விரலை

வெட்டி

வாங்கினேன்

 

அஸ்வத்தாமன் :

கர்ணன்

தேரோட்டியின்

மகன் அவன்

சமுதாயத்தால்

தள்ளி

வைக்கப்பட்டவன்

ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

தாழ்த்தப்பட்டவன் என்ற

காரணத்தைச் சொல்லி

கர்ணனுக்கு நீங்கள்

கல்வி கற்றுத்

தரவில்லை

அவனை ஒதுக்கி

விட்டீர்கள்

 

கர்ணனுக்கு

என்ன

காரணத்தைச்

சொல்லி

அவனுக்குக்

கல்வி கற்றுத்

தரவில்லையோ

அதே

காரணத்தைச்

சொல்லித் தான்

ஏகலைவனுக்கும்

நீங்கள் கல்வி

கற்றுத் தர

மறுத்து

விட்டீர்கள்  

 

அதனால் உங்களிடம்

தன்னால் நேரடியாகக்

கல்வி கற்றுக்

கொள்ள முடியாது

என்று ஏகலைவன்

நினைத்த காரணத்தினால்

உங்களை குருவாக

நினைத்து

உங்கள் சிலையை

தானே உருவாக்கினான்

 

உங்கள் சிலையை

குருவாக நினைத்து

அனைத்து

கலைகளையும்

தானே கற்றுக்

கொண்டான்

 

குருவிடம் நேரடியாக

கற்றுக் கொள்ளாமல்

குருவாக உங்களை

நினைத்து மறைவாக

கற்றுக் கொண்டான்

மறைவாக கற்றுக்

கொள்வது என்பது

எவ்வளவு கடினம்

அதையும் அவன்

திறம்படச் செய்தான்

வில்போர் செய்வதில்

திறமைசாலி ஆனான்

 

ஆனால்

அவனுடைய

திறமையை

மதிக்காமல்

அவனுடைய

திறமைக்கு

கிடைக்க

வேண்டிய

அங்கீகாரத்தை

கிடைக்க விடாமல்

இந்த உலகம்

அவனுடைய

திறமையை

பார்க்க விடாமல்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆகி இருக்க

வேண்டிய

ஏகலைவனின்

கட்டை விரலை

குருதட்சணை

என்ற பெயரில்

வெட்டி வாங்கி

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து

விட்டீர்கள்

 

துரியோதனன்

சொன்னது சரிதான்

அவன் சொன்னது

உண்மை தான்

அவன் சொன்னது

நியாயம் தான்

 

நான் துரியோதனன்

சொன்னதை

சரி என்கிறேன்

நான் துரியோதனன்

கேட்ட நியாயத்தின்

பின்னால் நிற்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////