January 15, 2023

ஜபம்-பதிவு-917- மரணமற்ற அஸ்வத்தாமன்-49 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-917-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-49

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

நீங்கள் குருவாக

நடந்து கொண்டிருந்தால்

நானும் குருதேவர்

என்று அழைத்திருப்பேன்

ஆனால் நீங்கள் ஒரு

குருவாக நடந்து

கொள்ளவில்லையே

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

 

அஸ்வத்தாமன் :

ஏகலைவன்

விஷயத்தில்

நீங்கள் நடந்து

கொண்ட விஷயத்தை

வைத்துத் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

அவன்

என்னுடைய

சீடன்

கிடையாதே

 

அஸ்வத்தாமன் :

சீடன்

இல்லை என்றால்

எதற்காக

குருதட்சணை

என்ற பெயரில்

அவனுடைய

கட்டை விரலை

கேட்டு

வாங்கினீர்கள்

 

துரோணர் :

அவன் முறைப்படி

என்னை குருவாக

ஏற்றுக் கொண்டு

கல்வி கற்கவில்லை

 

என்னுடைய சிலையை

வைத்துக் கொண்டு

குருவாக நினைத்துக்

கொண்டு கல்வி

கற்றான் என்னுடைய

அனுமதி இல்லாமல்

என்னை குருவாக

நினைத்து கல்வி

கற்றது தவறு

 

அவன் செய்த

செயல் தவறு

என்ற

காரணத்தினால்

தான்

அவனுடைய

கட்டை விரலை

வெட்டி

வாங்கினேன்

 

அஸ்வத்தாமன் :

கர்ணன்

தேரோட்டியின்

மகன் அவன்

சமுதாயத்தால்

தள்ளி

வைக்கப்பட்டவன்

ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

தாழ்த்தப்பட்டவன் என்ற

காரணத்தைச் சொல்லி

கர்ணனுக்கு நீங்கள்

கல்வி கற்றுத்

தரவில்லை

அவனை ஒதுக்கி

விட்டீர்கள்

 

கர்ணனுக்கு

என்ன

காரணத்தைச்

சொல்லி

அவனுக்குக்

கல்வி கற்றுத்

தரவில்லையோ

அதே

காரணத்தைச்

சொல்லித் தான்

ஏகலைவனுக்கும்

நீங்கள் கல்வி

கற்றுத் தர

மறுத்து

விட்டீர்கள்  

 

அதனால் உங்களிடம்

தன்னால் நேரடியாகக்

கல்வி கற்றுக்

கொள்ள முடியாது

என்று ஏகலைவன்

நினைத்த காரணத்தினால்

உங்களை குருவாக

நினைத்து

உங்கள் சிலையை

தானே உருவாக்கினான்

 

உங்கள் சிலையை

குருவாக நினைத்து

அனைத்து

கலைகளையும்

தானே கற்றுக்

கொண்டான்

 

குருவிடம் நேரடியாக

கற்றுக் கொள்ளாமல்

குருவாக உங்களை

நினைத்து மறைவாக

கற்றுக் கொண்டான்

மறைவாக கற்றுக்

கொள்வது என்பது

எவ்வளவு கடினம்

அதையும் அவன்

திறம்படச் செய்தான்

வில்போர் செய்வதில்

திறமைசாலி ஆனான்

 

ஆனால்

அவனுடைய

திறமையை

மதிக்காமல்

அவனுடைய

திறமைக்கு

கிடைக்க

வேண்டிய

அங்கீகாரத்தை

கிடைக்க விடாமல்

இந்த உலகம்

அவனுடைய

திறமையை

பார்க்க விடாமல்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆகி இருக்க

வேண்டிய

ஏகலைவனின்

கட்டை விரலை

குருதட்சணை

என்ற பெயரில்

வெட்டி வாங்கி

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து

விட்டீர்கள்

 

துரியோதனன்

சொன்னது சரிதான்

அவன் சொன்னது

உண்மை தான்

அவன் சொன்னது

நியாயம் தான்

 

நான் துரியோதனன்

சொன்னதை

சரி என்கிறேன்

நான் துரியோதனன்

கேட்ட நியாயத்தின்

பின்னால் நிற்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment