April 26, 2020

பரம்பொருள்-பதிவு-213


               ஜபம்-பதிவு-461
              (பரம்பொருள்-213)

“அவளையும் அறியாமல்
அவளுடைய கண்களில்
இருந்து கண்ணீர்
வழியத் தொடங்கியது ”

“வந்தவர்கள்
பஞ்ச பாண்டவர்கள்
என்பதை உணர்ந்து
கொண்டு - அரவானுடைய
உடலை விட்டு எழுந்து
நின்று தனியாக ஓர்
ஓரமாக சென்று தள்ளி
நின்று கொண்டாள் “

“தன்னுடைய வாயை
தன்னுடைய சேலைத்
தலைப்பாள் மூடி தனக்குள்
அழத் தொடங்கினாள்”

“அனைவரும் அழுது
கொண்டிருந்த அரவானின்
மனைவியைப் பார்த்தனர் “

தர்மர் :
“இந்த நிலையில் உனக்கு
ஆறுதலாக நாங்கள்
ஒன்றே ஒன்றைத் தான்
செய்ய முடியும் ;- அது
அரவானுடைய உடலை
தகனம் செய்வது தான்  ;
அரவானுடைய உடலை
தகனம் செய்வதற்கு
கொண்டு செல்ல
எங்களுக்கு அனுமதி
வழங்க வேண்டும் “

“உன்னுடைய சம்மதத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறோம் “

“நீ சொன்னால் அடுத்து
நடக்க வேண்டிய
காரியங்களைச் செய்வோம் “

“நாங்கள் அரவானுடைய
உடலை எடுத்துக்கொண்டு
செல்லலாமா என்று
கேட்டவுடன் திருநங்கை
அவர்கள் அனைவரைம்
ஏறெடுத்துப் பார்த்தாள் “

“அரவானுடைய இரத்தம்
அவள் முகம் முழுவதும்
படர்ந்து இருந்ததால் அந்த
திருநங்கையின் முகத்தை
அவர்களால் சரியாக
பார்க்க முடியவில்லை “

“திருநங்கை அனுமதி
அளித்ததை அவளுடைய
செய்கையின் மூலம்
உணர்ந்து கொண்ட
பஞ்ச பாண்டவர்கள்
அரவானை
மரியாதையுடன் தூக்கி
கொண்டு தகனம் செய்ய
வேண்டிய இடம் நோக்கி
சென்று கொண்டிருந்தனர் “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானுடைய உடலைச்
சுமந்து சென்றதால் அரவான்
சிறப்பு பெற்றான் என்று
சொல்ல முடியாது “

“அரவானுடைய உடலைச்
சுமந்து சென்றதால்
பஞ்சபாண்டவர்கள் தான் 
சிறப்பு பெற்றனர் “

“அரவானை சுமந்து சென்ற
பஞ்ச பாண்டவர்களையும்
அரவானுடைய உடலையும்
பார்த்துக் கொண்டே
நின்று கொண்டிருந்தாள்
அரவானுடைய மனைவியான
அந்தத் திருநங்கை”

“அரவானுடைய உடல்
தன்னுடைய கண்களை
விட்டு நீங்கும் வரை
அரவானுடைய உடலைப்
பார்த்துக் கொண்டே
இருந்தாள் அந்த திருநங்கை “

“அரவானுடைய உடல்
தன்னுடைய பார்வையில்
இருந்து மறைந்ததும்
சிறிது நேரம் அந்த
இடத்தில் நின்று
கொண்டிருந்த அந்த
திருநங்கை அந்த இடத்தை
விட்டு அகன்றாள் “

“நன்றாக குளித்தாள் ;
வெள்ளை புடவையை
உடுத்திக் கொண்டாள் ;”
அரவான் இறந்ததால்
அரவானின் மனைவியான
அந்த திருநங்கை
வெள்ளைப் புடவை உடுத்தி
விதவைக் கோலம் பூண்டாள் ; “

“அரவானைக் கொண்டு சென்ற
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும் அரவானை
தகனம் செய்வதற்கு
வேண்டிய அனைத்து
ஏற்பாடுகளையும்
முடித்து விட்டனர் “

தர்மர் :
“அர்ஜுனா ! நீ தான்
கொள்ளி வைக்க வேண்டும் “

“அர்ஜுனா ! வந்து
உன்னுடைய மகனுக்கு
உன்னுடைய கைகளால்
கொள்ளி வை “

“அர்ஜுனன் வருகிறான்  ;
கொள்ளி வைக்கிறான் ; “
அரவானின் உடல்
எரியத் தொடங்கியது “

“தானமாக தன்னுடைய
உயிரையே தந்தவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“பிறருக்காக தன்னையே
தந்தவனுடைய உடல்
அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“சுயநலம் இல்லாமல்
பொது நலமாக
செயல்பட்டவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“மக்கள் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக
தன்னையே தந்தவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“அரவானுடைய தகனக்
கிரியைகள் அனைத்தையும்
செய்து முடித்து விட்டு
பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் குளித்து முடித்து
குருசேஷத்திரப்
போருக்கு தயாராயினர் “

“வெள்ளைப் புடவையில்
இருந்த திருநங்கை
கிருஷ்ணனாக மாறினார் ;
குருஷேத்திரப்
போருக்கு தயாரானார் ; “

“பஞ்ச பாண்டவர்களும்
கிருஷ்ணனும்
குருஷேத்திரப்
போருக்கு தயாராயினர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-212


               ஜபம்-பதிவு-460
              (பரம்பொருள்-212)

“இந்த சமுதாயத்தால்
தொடர்ந்து
காயப்படுத்தப்பட்டு
வாழ்வதற்கு
வழி இல்லாமல்
அல்லாடிக்
கொண்டிருக்கும்
திருநங்கை இனமே
மகிழ்ச்சி
அடையும் வகையில்
செயலைச் செய்து
விட்டு எங்களை அழ
வைத்து சென்று
விட்டீர்களே ! “

“இந்த உலகத்தால்
அநாதையாக்கப்பட்ட
எங்களை அன்பு
கரம் நீட்டி
ஆதரவாக இருந்தவரே
மீண்டும் எங்களை
இந்த உலகத்தில்
அநாதையாக
இருக்குமாறு
விட்டு விட்டு
சென்று விட்டீர்களே ! “

ஐயோ! சென்று
விட்டீர்களே ! “

“இனி இந்த உலகத்தில்
எங்களுக்கு ஆதரவாக
இருக்கப் போவது யார் ? “

“எங்களுடைய
மன வலியை
புரிந்து கொண்டு
எங்களுக்கு துணையாக
இருக்கப் போவது யார் ? “

“எங்களுக்கு துணையாக
யாருமே இல்லையே
இந்த உலகத்தில்”

“நீங்கள் இல்லாத
இந்த உலகத்தில்
நான் ஏன் இன்னும்
உயிரோடு இருக்கிறேன் “

“என்னுடைய இதயம்
ஏன் இன்னும்
வெடிக்காமல்
இருக்கிறது “

“என்னுடைய இதயம்
வெடித்து நான்
இறந்து விடக்கூடாதா ? “

“ஐயோ !  நான்
என் செய்வேன் என்று
அழுது கொண்டே
அந்த திருநங்கை

தன்னுடைய தலையில்
சூடி இருந்த
பூவை எடுத்து
தரையில் வீசினாள் ;
தன்னுடைய நெற்றியில்
இட்டிருந்த
பொட்டை அழித்தாள் ;
தன்னுடைய கைகளில்
மாட்டி வைத்திருந்த
வளையல்களை
தரையில்
மோதி உடைத்தாள் ;
அவ்வாறு உடைக்கும்
போது கைகளில்
போட்டிருந்த
வளையல் உடைந்து
வழிந்த இரத்தம்
அந்த திருநங்கையின்
கைகளை நனைத்ததோடு
மட்டுமல்லாமல்
அரவானின்
உடலையும் நனைத்தது “

“அரவான்
சிந்திய இரத்தம்
இந்த உலகத்தை
நனைத்து குளிர்வித்தது ;
ஆனால் திருநங்கை
சிந்திய இரத்தம்
அரவானின் உடலை
நனைத்து அரவானுடைய
உடலை குளிர்வித்தது ; “

“அவள் அழுத
குரலைக் கேட்டு
அரவானே உயிர்பெற்று
வந்து விடுவான்
என்று சொல்லத்தக்க
வகையில் அந்த
திருநங்கையின்
அழுகை இருந்தது “

“அழுது கொண்டிருந்த
திருநங்கை தன்னுடைய
அழுகுரலை நிறுத்தினாள்  

“சிறிது நேரம்
அமைதியாக இருந்தாள் “

“சட்டென்று உணர்ச்சி
வந்தவள் போல்
எழுந்து நின்றாள் ;
ஆவேதத்துடன்
ஐயோ ! என்று
கூச்சலிட்டாள் ;
அவள் கத்திய கூச்சல்
அந்த இடத்தையே
அதிர வைத்தது ;
கல்லும் கரைந்து
விடும் என்று
சொல்லத்தக்க
வகையில் அந்த
திருநங்கையின்
ஆவேசமான
அழுகுரல் இருந்தது ;
ஒரு நிமிடம்
நிதானித்த அந்த
திருநங்கை
தன்னுடைய கழுத்தில்
இருந்த தாலியை
தானே அறுத்து
கீழே போட்டாள் ;
அந்த கணத்தில்
அந்த திருநங்கை 
ஓ என்று கதறி
அரவான் மேல்
மயங்கி விழுந்தாள் “

“அழுகுரலால் நிரம்பி
இருந்த அந்த இடமே
மயான அமைதியாக
மாறி விட்டது”

“சிறிது நேரத்தில்
அந்த திருநங்கைக்கு
உணர்வுகள்
திரும்பிய போது
அந்த திருநங்கையின்
காதுகளில் யாரோ
நடந்து வரும்
காலடி ஓசை கேட்டது “

“தன்னுடைய
தலையைத் தூக்கி
யார் வருகிறார்கள்
என்று பார்த்தாள்
அந்தத் திருநங்கை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-211


               ஜபம்-பதிவு-459
             (பரம்பொருள்-211)

“என்னைப் பற்றி
கவலைப்படாதீர்கள்  ;
என்னைத் தேட
முயற்சி செய்யாதீர்கள் ;
நான் எங்கிருக்கிறேன்
என்பதை ஆராய்ச்சி
செய்ய முயற்சி
செய்யாதீர்கள் ;”

“உங்களுடைய
கடமையை நீங்கள்
செய்யுங்கள் “

“அரவானுடைய மனைவி
அரவானுக்கு
செய்ய வேண்டிய
கடமையைச் செய்வாள் “

“நான் செல்ல
வேண்டிய நேரம்
வந்து விட்டது “

“காலம் நெருங்கி
விட்டது “

“நான் செல்கிறேன் “

“நான் சொன்னவைகள்
அனைத்தையும்
மனதில் கொண்டு
செய்யுங்கள் “

(என்று சொல்லி விட்டு
கிருஷ்ணன் அரவான்
உடல் இருக்கும்
இடத்திற்கு சென்றார் )

“அரவானுடைய உடல்
அருகே சென்ற
கிருஷ்ணன்
திருநங்கையாக
மாறினார் “

“அரவானுடைய
மனைவியான திருநங்கை
அரவானுடைய உடல்
மீது விழுந்து
அழத் தொடங்கினாள் “

திருநங்கை :
“நீங்கள் போய்
வருகிறேன் என்று
சொன்னால் உங்களுக்காக
நான் காத்துக்
கொண்டிருப்பேன்
என்ற காரணத்திற்காக
சொல்லாமல்
சென்று விட்டீர்களா ! “

“நீங்கள் சொல்லாமல்
சென்று விட்டாலும்
நான் உங்களுக்காக
எப்போதும் காத்துக்
கொண்டிருப்பேன்
என்பதை அறிந்து
கொள்ளாமல்
சென்று விட்டீர்களே ! “

“நாட்டை ஆளும்
மன்னனின் மகனான
துரியோதனனே வந்து
கையேந்தும் சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“இந்த உலகத்தையே
கட்டி காப்பாற்றும்
அந்த கிருஷ்ணனே
உங்களிடம் கையேந்திய
சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் உட்பட
அனைவரும் உங்களிடம்
கையேந்திய சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா! “

“பொருட்களை மட்டுமே
தானமாகக் கொடுக்கக்
கூடிய இந்த
உலகத்தில் உயிரையே
தானமாகக்
கொடுத்தவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“பெற்றோரும்
உற்றாரும்
சுற்றத்தாரும்
மனித இனத்தில்
ஒரு இனம் என்று
எங்களை
நினைக்காமல்
ஒதுக்கி விட்ட
திருநங்கை இனத்தில்
ஒருத்தியான
என்னையும்
ஒரு மனிதராக மதித்து
மனைவியாக்கி அன்பு
செலுத்தியவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“திருநங்கையை
திருமணம் செய்து
மனைவியாக
ஏற்றுக் கொண்டு
மனிதர்களை
சமமாக மதிக்க
வேண்டும் என்பதை
உலகிற்கு
உணர்த்தியவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“திருநங்கை இனமும்
மனித இனத்தில்
ஒரு இனம் தான்
என்பதை இந்த
உலகத்திற்கு
உணர்த்தியவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
திருநங்கைகளின்
பெருமையையும்
உயர்த்தும் விதத்தில்
செயலைச் செய்தவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“திருநங்கைகளில்
ஒருத்தியான நான்
தங்களுடைய மனைவி
என்று சொல்லும்
தகுதியை எனக்கு
கொடுத்தவரான நீங்கள்
சென்று விட்டீர்களா! “

“இனி எங்களை
ஆதரித்து அன்பு
செலுத்த யார்
இருக்கிறார்கள் - என்று
வருத்தப்பட
வைத்து விட்டு
எங்களை தனிமையில்
தவிக்க வைத்து விட்டு
சென்று விட்டீர்களே ! “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////