ஜபம்-பதிவு-732
(சாவேயில்லாத
சிகண்டி-66)
அம்பை :
பீஷ்மன் தான் தவறு
செய்திருக்கிறார்
என் பக்கம் தான்
நியாயம்
இருக்கிறது
என்று தெரிந்தால்
பரசுராமர் :
உன்னைத் திருமணம்
செய்யச் சொல்லி
பீஷ்மருக்கு
கட்டளையிடுகிறேன்
உனக்கு
இழந்த வாழ்க்கையை
கொடுக்கச்
சொல்கிறேன்
பிரம்மச்சரிய
விரதத்தை விடுத்து
பீஷ்மன் உன்னை
திருமணம்
செய்து கொள்ள
ஒத்துக் கொண்டால்
பீஷ்மரைக்
கொல்வேன் என்ற
சபதத்தை விடுத்து
நீயும் பீஷ்மனை
திருமணம் செய்து
கொள்ள வேண்டும்
அம்பை :
பீஷ்மன்
என்னை திருமணம்
செய்து கொள்ள
மறுத்து விட்டால்
நீங்கள்
பீஷ்மனைக்
கொல்ல வேண்டும்
பரசுராமர் :
வேதங்களை
அறிந்தோருக்காக
அன்றி வேறு
யாருக்காகவும்
நான் ஆயுதம்
எடுப்பதில்லை
அம்பை :
எல்லா
ஷத்திரியர்களையும்
வென்று
பிராமணர்களின்
மத்தியில்
பிராமணனோ
ஷத்திரியனோ
வைசியனோ
சூத்திரனோ
பிராமணனைப்
பகைப்பவனாயிருந்தால்
போரில்
அவனைக் கொல்வேன்
என்றும்
பயத்தை அடைந்துப்
பாதுகாப்பை
விரும்பி
சரணமடைந்தவர்களை
நான்
உயிருடனிருக்கையில்
எவ்விதத்தாலும்
கைவிட மாட்டேன்
என்றும்
இந்த பூமியில்
உள்ள
ஷத்திரியர்கள்
அனைவரையும்
வெல்லக்கூடிய
தைரியமுடையவனை
நான் கொல்வேன்
என்றும்
நீங்கள்
உறுதிமொழி
ஏற்று இருக்கிறீர்கள்
பீஷ்மன்
இத்தகைய
வெற்றியைப்
பெற்றிருக்கிறான்
உங்களையே நம்பி
சரணமடைந்த
என்னை நீங்கள்
கைவிட மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்
நீங்கள்
ஏற்றுக் கொண்ட
உறுதிமொழியின்படி
பீஷ்மனை
நீங்கள்
கொல்ல வேண்டும்
பரசுராமர் :
ஆமாம்
என்னுடைய
உறுதிமொழி
எனக்கு
நினைவில்
இருக்கிறது
இருந்தாலும்
நான் பீஷ்மரை
அழைக்கிறேன்
அவனிடம்
பேசுகிறேன்
யார் பக்கம்
நியாயம்
இருக்கிறது
என்று பார்ப்போம்
எந்த ஒன்றையும்
பிறகு முடிவு
செய்வோம்
(பீஷ்மரை
அழைத்து
வர ஆளை
அனுப்புகிறார்
பரசுராமர்
அம்பை
அமைதியாக
பரசுராமரைப்
பார்த்துக்
கொண்டு
இருக்கிறாள்)
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------08-04-2022
-------வெள்ளிக்கிழமை