June 03, 2022

ஜபம்-பதிவு-779 (சாவேயில்லாத சிகண்டி-113)

 ஜபம்-பதிவு-779

(சாவேயில்லாத

சிகண்டி-113)

 

தெய்வ

நிலையில்

இருப்பவர்களுடைய

இரத்தம் இறப்பின்

போது இந்த

பூமியில்

சிந்தக்கூடாது

மீறி இந்த பூமியில்

அவர்களுடைய

இரத்தம் சிந்தினால்

அதை இந்த

பூமி தாங்காது

என்பதை

உணர்ந்த அம்பை

இறப்பதற்காக

நெருப்பில் இறங்கி

இரத்தம் சிந்தாத

மரணத்தைத்

தேர்ந்தெடுத்த

அந்தத்

தெய்வத் தாய்

நெருப்பில்

எரிந்து

கொண்டிருந்தாள்

 

அந்த

தெய்வத் தாய்

முழுவதுமாக

நெருப்பில்

எரிந்து

இவ்வுலக

வாழ்க்கையிலிருந்து

விடுதலை பெற்று

பிரபஞ்சத்துடன்

பிரபஞ்சமாக

கலந்திருந்து

அடுத்த பிறவி

எடுப்பதற்காகக்

காத்துக் கொண்டு

இருந்தாள்

 

உடலால்

அழிந்தாலும்

உயிராக இந்த

உலகத்தில்

கலந்திருந்த அம்பை

உடல் எடுத்து

எங்கே

எப்போது

எந்த இடத்தில்

யாருக்குப்

பிறக்கப் போகிறார்

எந்தப் பெயரில்

இந்த உலகத்தில்

வாழப் போகிறார்

எப்படி

வாழப்போகிறார்

பெண்ணிலிருந்து

ஆணாக எப்படி

மாறப்போகிறார்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

பீஷ்மரைக்

கொல்வாரா

இந்தப் பிறவியில்

அடைந்த

கஷ்டங்களை

எடுக்கப் போகும்

அடுத்தப்

பிறவியிலும்

அடைவாரா

என்ற பல்வேறு

கேள்விக்கான

விடையை

தெரிந்து

கொள்வதற்கு

இந்த உலகமே

ஆவலுடன்

காத்துக்

கொண்டிருக்கிறது

 

நானும்

அந்த தெய்வத்

தாயான அம்பையை

வணங்கி

காத்துக் கொண்டு

இருக்கிறேன்

 

நீங்களும் காத்துக்

கொண்டு இருங்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-778 (சாவேயில்லாத சிகண்டி-112)

 ஜபம்-பதிவு-778

(சாவேயில்லாத

சிகண்டி-112)

 

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

தன்னுடைய

கொள்கைக்காக

முக்தியையே

வேண்டாம்

என்று சொன்ன

அந்த தெய்வத் தாய் 

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

ஐம்புலன்கைளை

அறிந்து

பஞ்ச பூதங்களை

வசப்படுத்தி

ஒன்பது வாசல்களை

அடைத்து

பத்தாவது வாசலுக்குள்

பிரவேசித்து

இறைவனை தரிசித்த

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

யாரும் செய்யாததை

யாராலும் செய்ய

முடியாததை

செயல்படுத்திக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

கொள்கையை விலை

பேசுபவர்கள் மத்தியில்

தன்னுடைய

கொள்கைக்காக

அனைத்து

இழப்புகளையும்

தாங்கிக் கொண்ட

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

வாழ்க்கையில்

கஷ்டம் ஏற்பட்டால்

பயந்து விடக்கூடாது

அந்த கஷ்டத்தை

எதிர்த்து போராடினால்

வெற்றி பெறலாம்  

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

உலகமே எதிர்த்து

நின்றாலும்

பரவாயில்லை

உதவிகள் செய்யாமல்

அனைவரும்

கைவிட்டாலும்

பரவாயில்லை

நீக்க முடியாத

அவமானங்கள்

ஏளனங்கள்

அசிங்கங்கள்

வாழ்க்கையில்

ஏற்பட்டாலும்

பரவாயில்லை

அவைகளைக் கண்டு

துவண்டு விடாமல்

எதிர்த்து நின்று

போராடினால்

மட்டுமே வெற்றி

பெற முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

வெளியில் இருந்து

பார்ப்பவர்கள் யாரும்

நம்முடைய கஷ்டத்தைப்

போக்குவதற்கு

உதவி செய்ய வர

மாட்டார்கள்

நம்முடைய

கஷ்டத்தை நாமே

தான் போக்க

வேண்டும் என்ற

தத்துவத்தை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்கள்

யாருக்கும் எதற்கும்

கடவுளுக்கும் கூட

பயப்பட வேண்டிய

அவசியம் இல்லை

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

ஆதரவுக் கரம்

நீட்ட இந்த

உலகத்தில் யாரும்

இல்லை என்றாலும்

நாம் தனித்து

நின்று போராடினாலும்

வெற்றி பெற்றுக்

காட்ட முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்த

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

பெண்ணை

அடிமையாகவும்

போகப் பொருளாகவும்

நினைத்துக்

கொண்டிருக்கும்

இந்த சமுதாயத்தில்

பெண் நினைத்தால்

எந்த செயலையும்

செய்ய முடியும்

என்பதை இந்த

உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

எத்தனை யுகம்

பிறந்தாலும்

இப்படிப்பட்ட

மன உறுதி

கொண்ட

ஒரு பெண்

அஞ்சா நெஞ்சம்

கொண்ட

ஒரு பெண்

எத்தகைய எதிர்ப்புகள்

வந்த போதும்

களங்காமல்

துணிச்சலுடன்

எதிர்த்து நின்று

போராடி வெற்றி

பெற்ற ஒரு பெண்

இந்த உலகத்தில்

இனி பிறக்க

முடியாது என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-777 (சாவேயில்லாத சிகண்டி-111)

 ஜபம்-பதிவு-777

(சாவேயில்லாத

சிகண்டி-111)

 

நெருப்பை நெருப்பு

எரிக்க மறுத்தது

ஆமாம் நெருப்பான

அம்பையை

நெருப்பு

எரிக்கவில்லை

 

இதனால் அம்பை

அக்னி பகவானைக்

கூப்பிட்டாள்

 

அம்பை

அக்னி பகவானே

என்றதும்

அக்னி பகவான்

நேரில் வந்தார்

 

அம்பை :

அக்னி பகவானே

என்னுடைய

கடமையைச்

செய்வதற்கு தடையாக

இருக்காதீர்கள்

நெருப்பில் நான்

எரிவதற்கு உதவி

செய்யுங்கள்

 

அக்னி பகவான் :

தெய்வத் தாயே

பத்தினி

தெய்வமாகிய

உங்களை எரித்து

நீக்க முடியாத

களங்கத்தை சுமக்க

நான் தயாராக

இல்லை

 

அம்பை :

என்னை எரிக்காமல்

விட்டால் தான்

உனக்கு களங்கம்

உண்டாகும்

என்னை எரிப்பதால்

உனக்கு எந்தவிதமான

களங்கமும் ஏற்படாது

 

அக்னி பகவானே

உன்னுடைய

கடமை என்ன

உன்னில் விழும்

எந்த ஒரு

பொருளையும்

எரிப்பது தானே

உன் கடமை

 

உன்னில் விழும்

எந்த ஒரு

பொருளையும்

பேதம் பிரித்து

பார்க்காமல்

அதை எரிக்க

வேண்டியது தான்

உன்னுடைய கடமை

 

உன்னுடைய

கடமையை

மறந்து விட்டாயா

 

என்னுடைய

கடமையை என்னைச்

செய்ய விடு

அடுத்த பிறவி

நான் எடுத்தாக

வேண்டும்

பீஷ்மனைக்

கொன்றாக வேண்டும்

 

என்னுடைய

கடமையை நான்

முடிப்பதற்கு

உன்னுடைய

கடமையை

நீ செய்

 

உன்

கடமையைச் செய்

அக்னி பகவானே

 

(என்று சொன்னவுடன்

அப்படியே தாயே

என்று மறைந்து

விட்டார்

அக்னி பகவான்

 

அம்பை நெருப்பில்

இறங்கினாள்

நெருப்பு அவளை

கொஞ்சம் கொஞ்சமாக

எரிக்க ஆரம்பித்தது

 

நெருப்பை நெருப்பு

எரித்து

கொண்டிருந்தது

ஆமாம்

நெருப்பான

அம்பையை நெருப்பு

எரித்துக்

கொண்டிருந்தது

 

அந்த

தெய்வத் தாயான

அம்பை

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

அம்பையின்

வாயிலிருந்து

சிறிதளவு அலறல்

சத்தம் கூட

எழவில்லை

 

அங்கே கூடி

இருந்தவர்கள்

அனைவரும்

தலைக்கு மேலே

கையைத் தூக்கி

வணங்கிய நிலையில்

கண்களில் கண்ணீர்

ஆறாக

பெருக்கெடுத்து ஓட

இக்காட்சியைக்

கண்டபடி

நின்று

கொண்டிருந்தனர்

 

எந்த பீஷ்மனால்

வாழ்க்கையை

இழந்தாளோ

அந்த பீஷ்மனைக்

கொல்வதற்கு

மறு பிறவி

எடுக்க வேண்டும்

என்பதற்காக

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

எண்ணத்துடனே

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

உடலுக்குத் தான்

அழிவு ஆன்மாவுக்கு

அழிவில்லை

என்பதை உணர்ந்து

இருந்த காரணத்தினால்

அடுத்த பிறவி

எடுத்து கண்டிப்பாக

பீஷ்மனைக் கொல்வேன்

என்ற நம்பிக்கையுடன்

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-776 (சாவேயில்லாத சிகண்டி-110)

 ஜபம்-பதிவு-776

(சாவேயில்லாத

சிகண்டி-110)

 

தாயே

நீங்கள் வந்த

பிறகு தான்

தண்ணீர் இல்லாமல்

பாலைவனமாக

வறண்டு கிடைந்த

எங்கள் நிலம்

பசுமையாக மாறியது

வயல்வெளிகள்

செழித்தது

கால்நடைகள்

பூரிப்பு அடைந்தது

எங்கள் இல்லங்கள்

சந்தோஷத்தால்

நிறைந்தது

 

பத்தினி

தெய்வமான

நீங்கள்

இறைவனின் அருள்

பெற்ற நீங்கள்

முக்தியையே

வேண்டாம் என்று

சொன்ன நீங்கள்

இறப்பைக் கண்டே

பயப்படாத நீங்கள்

பிரச்சினைகளைக்

கடந்து வெற்றி

வாகை

சூடிய நீங்கள்

உலகமே

எதிர்த்தாலும்

பயப்படாமல் தன்

கொள்கைக்காக

அந்த உலகத்தையே

எதிர்த்து போராடி

வெற்றி பெற்ற

நீங்கள்

கடவுளின்

அருள் பெற்ற

நீங்கள்

இந்த உலகத்தில்

வாழ வேண்டும்

எங்கள் மண்ணில்

வாழ வேண்டும்

எங்களுக்கு

வழிகாட்டியாக

இருக்க வேண்டும்

 

தாயே

நீங்கள்

இறக்கக் கூடாது

எங்களுக்காக நீங்கள்

வாழ வேண்டும்

 

(பேசாமல்

அமைதியாக இருந்த

அம்பை அவர்களைப்

பார்த்து பேசத்

தொடங்கினாள்)

 

அம்பை :

என்னுடைய

இறப்பைத்

தேர்ந்தெடுத்தது

நான் தான்

 

என்னுடைய

கடமையை முடிக்க

எனக்கு விடை

கொடுங்கள்

 

(என்று மட்டுமே

அம்பை பேசினாள்)

 

அனைவருடைய

கண்களில் இருந்தும்

கண்ணீர் வழிந்தது

 

கூட்டத்தில் ஒருவர் :

தாயே

உங்கள் முடிவை

அந்த இறைவனே

வந்தாலும்

மாற்ற முடியாது

என்பது

எங்களுக்குத் தெரியும்

விறகுகளை எடுத்து

நெருப்பை நாங்கள்

உருவாக்கித்

தருகிறோம்

நீங்கள் ஓய்வு

எடுங்கள்

 

அம்பை :

என்னுடைய

வாழ்க்கையில்

எந்த கஷ்டத்தை

எல்லாம்

அனுபவிக்கக்

கூடாதோ

அந்த கஷ்டத்தை

எல்லாம்

அனுபவித்து

முடித்து விட்டேன்

 

என்னுடைய

வாழ்க்கையில்

அனைத்து

செயல்களையும்

நானே செய்தேன்

என்னுடைய

இறப்பிற்கான

பணிகளையும் நானே

செய்ய வேண்டும்

 

விறகுகளை நானே

எடுக்க வேண்டும்

நெருப்பை நானே

உண்டாக்க வேண்டும்

அதில் விழுந்து

நானே இறக்க

வேண்டும்

 

யாரும் உதவி

செய்ய வேண்டாம்

உங்கள்

அன்புக்கு நன்றி

 

(என்று சொல்லி

விட்டு அம்பை

விறகுகளை எடுத்து

குழிக்குள் போட்டுக்

கொண்டிருந்தாள்

 

அம்பையின்

வார்த்தைக்கு

கட்டுப்பட்டு

அனைவரும்

விலகி நின்றனர்

 

தன்னுடைய

இறப்பிற்காக

விறகுகளை தானே

எடுத்து குழிக்குள்

போட்டு

அதில் நெருப்பை

உண்டாக்கினாள்

அம்பை

 

எரியும் நெருப்புக்கு

முன்னால் நின்று

கொண்டு வணங்கி

விட்டு நெருப்புக்குள்

அம்பை இறங்க

முயன்ற போது

நெருப்பு அம்பையை

எரிக்காமல்

எதிர்த்திசையில்

சென்றது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-775 (சாவேயில்லாத சிகண்டி-109)

 ஜபம்-பதிவு-775

(சாவேயில்லாத

சிகண்டி-109)

 

சிவன் :

இந்தப் பிறவியை

முடித்துக் கொள்ளப்

போகிறாயா அம்பையே

 

அம்பை :

ஆமாம்

என்னுடைய

வாழ்க்கையின்

ஒரே லட்சியமே

பீஷ்மனைக்

கொல்வது தான்

பீஷ்மனைக்

கொல்ல முடியாத

இந்தப் பிறவி

எனக்கு எதற்கு

 

இப்பிறவியை

முடித்து விட்டு

அடுத்த பிறவிக்கு

சென்று பீஷ்மனைக்

கொல்வதற்கு எனக்கு

ஆசி கூறுங்கள்

 

(என்று சொல்லி

விட்டு அம்பை

சிவனின் காலடியில்

வீழ்ந்து வணங்கினாள்

 

என்ன சொல்வது

என்று தெரியாமல்

சிவன் அமைதியாக

இருந்தார்

பின் ஆசி

வழங்கினார்)

 

சிவன் :

பெண்களில்

பத்தினி தெய்வமாக

இருந்த நீ

இனி

தெய்வத் தாயாக

விளங்குவாய்

 

(என்று ஆசி

வழங்கி விட்டு

சிவன் மறைந்து

விட்டார்

 

சிவன்

மறைந்தவுடன்

அம்பை தீக்குளித்து

இறப்பதற்காக

குழி தோண்டி

முடித்து விட்டாள்

 

குழியைத் தோண்டி

முடித்த பிறகு

அதில் விறகுகளைப்

போட்டு

நெருப்பை மூட்டி

அந்த நெருப்பில்

இறங்கி உயிரை

விடுவதற்காக

அம்பை விறகுகளை

எடுக்க ஆரம்பித்தாள்

 

அம்பை நெருப்பில்

இறங்கி உயிர்

துறக்கப் போகிறார்

என்பதைக்

கேள்விப்பட்ட

அந்த இடத்தைச்

சுற்றி இருந்த பல

கிராமத்தைச்

சேர்ந்த மக்கள்

வேடர்கள்

நாடோடிகள் என்று

பல்வேறு

இனத்தைச் சேர்ந்த

பல்லாயிரக்கணக்கான

மக்கள்

அந்த இடத்தில்

ஒன்றாகக்

கூடி விட்டனர்

 

அந்தக் கூட்டத்தில்

இருந்த ஒருவர்

குனிந்து விறகுகளை

எடுத்துக் கொண்டு

இருந்த

அம்பையிடம் சென்று

பேசத் தொடங்கினார்

 

கூட்டத்தில் ஒருவர் :

தாயே

நீங்கள் எங்கள்

இடத்திற்கு வந்த

நாள் முதல்

உங்களை நாங்கள்

கவனித்துக் கொண்டு

தான் இருந்தோம்

 

நீங்கள் யார்

என்பதையும்

எங்கிருந்து

வந்திருக்கிறீர்கள்

என்பதையும்

உங்கள் நோக்கம்

என்ன என்பதையும்

எதற்காக தவம்

செய்கிறீர்கள்

என்பதையும்

யாரை நோக்கி

தவம் செய்கிறீர்கள்

என்பதையும்

எல்லாம் ஆராய்ந்து

தெரிந்து கொண்டோம்

 

நீங்களும்

உங்களைச் சுற்றி

நடக்கும் எந்த ஒரு

நிகழ்ச்சியையும்

கவனத்தில்

கொள்ளாமல்

ஊன் உறக்கம்

கொள்ளாமல்

தவம் செய்வதிலேயே

உங்கள் முழு

கவனத்தையும்

செலுத்தினீர்கள்

 

நீங்கள் கடுமையாக

தவங்களை

செய்யும் போது

உங்களுக்கு ஏதேனும்

உதவிகள் செய்ய

வேண்டும் என்று

நினைத்தோம்

உங்கள் அருகில்

வந்தால் நீங்கள்

கோபப்படுவீர்களோ

என்று

நினைத்துத் தான்

உங்கள் அருகில்

நாங்கள் வரவில்லை

 

அதனால் உங்களுக்குத்

தேவையான

எந்த ஒரு

உதவியையும்

எங்களால் செய்ய

முடியவில்லை

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////