February 11, 2020

பரம்பொருள்-பதிவு-128


             பரம்பொருள்-பதிவு-128

கிருஷ்ணன் :
“வாழ்வு அல்லது
சாவு இரண்டில்
எது கிடைக்கும்
என்று தெரியாமல்
போர்க்களத்திற்கு
சென்று
போரிடுவதற்கு வீரம்
தேவையில்லை ;
ஆனால்
களப்பலியாகப்
போகிறோம் என்று
தெரிந்தும்
களப்பலியாக
செல்வதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ; “

“போர்க்களத்திற்கு
சென்று போரிட்டால்
எப்போது ?
எந்த நேரத்தில் ?
எந்த ஆயுதத்தால் ?
எப்படி ?
யாரால் ?
மரணம் ஏற்படும்
என்று தெரியாமல்
போரிடுவதற்கு வீரம்
தேவையில்லை ;
ஆனால்
களப்பலியாகப்
போகிறவருடைய
தலையை
தாய் தந்தை
அல்லது
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
வெட்ட வேண்டும் ;
அவர்களில் யாரும்
களப்பலியாகப்
போகிறவரின்
தலையை
வெட்டவில்லை
என்றால்
களப்பலியாகப்
போகிறவர்
தன்னுடைய
தலையை
தானே வெட்டி
காளி தேவிக்கு
படைக்க வேண்டும்
என்ற விவரம்
தெரிந்தும்
களப்பலியாகச்
செல்வதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ; “

“என்ன நடக்கும்
என்று விடை
தெரிந்து கொள்ள
முடியாமல்
நடைபெறக்கூடிய
செயலில் ஒருவர்
ஈடுபடுவதற்கு-வீரம்
தேவையில்லை ;
ஆனால்
இது தான் நடக்கும்
என்று விடை தெரிந்து
கொள்ளக் கூடிய
வகையில்
நடைபெறக்கூடிய
செயலில் ஒருவர்
ஈடுபடுவதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ;”

“அதனால் தான்
சொல்கிறேன் உலூபி
களப்பலியாகப்
போகிறோம் என்று
தெரிந்தும்
களப்பலிக்கு
செல்வதற்கு வீரம்
தேவை என்பதை
உணர்ந்து கொள் ”

“களப்பலியாவதற்கு
வீரம் மட்டும்
இருந்தால் போதாது  ;
அதிக அளவு
தைரியம் ;
அதிக அளவு
நெஞ்சுரம் ;
ஆகியற்றையும்
கொண்டவராக
இருக்க வேண்டும் ;’

“வீரம், தைரியம்,
நெஞ்சுரம் ஆகிய
அனைத்து
தன்மைகளையும்
கொணடவன் தான்
அரவான் “

“போர்க்களத்திற்கு
சென்று  வீரத்துடன்
போரிட்டு மடிவதற்கு
இந்த உலகத்தில்
லட்சக் கணக்கில்
மக்கள்
இருக்கின்றனர் ;
ஆனால்
களப்பலியாக
கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும் பெற்று
களப்பலியாவதற்கு
தயாராக இருப்பது
அரவான் மட்டுமே “

“அரவான்
களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது என்ற
காரணத்திற்காகத் தான்
அரவான் களப்பலி
பாண்டவர்களுக்காக
நடக்க வேண்டும்
என்று முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் “

உலூபி :
“அரவான்
களப்பலியை
நியாயப்படுத்தி - பேசிக்
கொண்டிருக்கும்
நீங்களே சொல்லுங்கள் ?
உலகில் எந்தத்
தாயாவது தான்
பெற்றெடுத்த மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
சம்மதிப்பாளா ?”

“யாரால்
சம்மதிக்க
முடியும் ? “

கிருஷ்ணன் :
“உன்னால் முடியும் ? “

“உன்னால்
மட்டுமே முடியும் ? “

“உன்னால் மட்டுமே
சம்மதிக்க முடியும் ? ”

“உன்னைத் தவிர
இந்த உலகத்தில்
வேறு யாராலும்
சம்மதிக்க முடியாது
உலூபி “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------11-02-2020
//////////////////////////////////////////