பரம்பொருள்-பதிவு-79
“அந்த அறைக்குள்
தர்மரும், திரௌபதியும்,
தனித்திருந்தனர் ;
அர்ஜுனன் தன்னுடைய
மேல் வஸ்திரத்தினால்
முகத்தை மூடிக்கொண்டு
தலை நிமிர்ந்தபடி
செல்லாமல்
தலை குனிந்தபடியே
சென்றதனால்
அர்ஜுனன் தர்மரின்
கால்களையும்;
திரௌபதியின்
கால்களையும்;
மட்டுமே பார்த்தான்
ஆயுத சாலைக்குள்
நுழைந்து ஆயுதங்களை
எடுத்துக் கொண்டு
வரும் போது
தர்மர் பார்த்து விட்ட
காரணத்தினால்
தர்மரிடம் பேசினான்
அர்ஜுனன்,”
அர்ஜுனன்:
“கள்வர்களால்
களவாடப்பட்டு
கொண்டு செல்லப்பட்ட
அந்தணனுடைய
கறவைப் பசுக்களை
மீட்டு அந்தணனிடம்
ஒப்படைக்கும் பொருட்டு
என்னுடைய
ஆயுதங்களை
எடுப்பதற்காக
ஆயுத சாலைக்குள்
வந்தேன் - வேறு
எந்த ஒரு
காரணத்திற்காகவும் - நான்
ஆயுத சாலைக்குள்
வரவில்லை.”
தர்மர் :
“என்னுடைய தம்பி
அர்ஜுனன் எந்த
ஒரு செயலையும்
தேவையில்லாமல்
செய்ய மாட்டான் ;
அப்படியே ஒரு
செயலைச் செய்கிறான்
என்றால் அதில்
நீதி என்பது
இருக்கும் ;
நேர்மை என்பது
இருக்கும் ;
உண்மை
என்பது இருக்கும்;”
அர்ஜுனன்:
“இருந்தாலும்
விதியை மீறி
நான் செய்த
குற்றச் செயலுக்கு
நான் என் கடமையை
முடித்து விட்ட பிறகு
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்வேன்
என்பது மட்டும் உறுதி”
தர்மர் :
“முதலில் நீ எடுத்துக்
கொண்ட கடமையை
வெற்றிகரமாக முடித்து
விட்டு வா! எதுவாக
இருந்தாலும் பிறகு
பேசிக்கொள்ளலாம்”
“அர்ஜுனன் தர்மரிடம்
பேசிவிட்டு
வெளியே வந்தான்
தர்மரும், திரௌபதியும்,
ஆயுதசாலையில்
தனித்திருக்கும் போது
அர்ஜுனன்
ஆயுத சாலைக்குள்
நுழைந்து
ஆயுதங்களை எடுத்து
வந்த விஷயம்
அர்ஜுனனுக்கும்
தர்மருக்கும் மட்டுமே
தெரியும் திரௌபதி ,
பாண்டவர்கள்
உட்பட வேறு
யாருக்கும் தெரியாது.”
“ஆயுத சாலைக்குள்
நுழைந்து ஆயுதங்களை
எடுத்து வந்த அர்ஜுனன்
கண்ணீருடன் நின்று
கொண்டிருந்த
அந்தணனை நோக்கி
அந்தணனே தாங்களும்
என்னுடன் வாருங்கள் ;
அவர்கள் நெடுந்தூரம்
செல்வதற்கு முன்
அவர்களை பிடிப்போம்;
அயலார் பொருளில்
ஆசை வைத்தால்
என்ன தண்டனை
கிடைக்கும் என்பதை
இந்த உலகத்திற்கு
காட்டுவோம் ;
கறவைப் பசுக்களை
மீட்டு உங்களிடம்
ஒப்படைப்பேன்
என்னுடன் வாருங்கள் ;
என்று சொல்லி இரு
கரங்களையும் சமமாக
நிபுணத்துவத்துடன்
பயன்படுத்தும்
திறனையுடைய
அர்ஜுனன்
அந்தணனை தன்னுடைய
தேரில் ஏற்றி
கையில் வில்லெடுத்துக்
கவசம் தரித்து
மேற்கூடு கொண்ட
கொடி கட்டின தேரிலேறி
கறவைப் பசுக்களை
களவாடி விட்டுச் சென்ற
கள்வர்களை தேடி
புறப்பட்டான் அர்ஜுனன்”
“கள்வர்களைக்
கண்ட அர்ஜுனன்
அவர்களுடன்
சண்டையிட்டு
கறவைப் பசுக்களை
களவாடிய கள்வர்கள்
செய்த குற்றத்திற்குரிய
தண்டனையை அளித்து ;
அவர்களை அழித்து;
அவர்களிடமிருந்து
கறவைப் பசுக்களை
மீட்டு எடுத்து ;
அந்தணன் மகிழும்படி
அந்தணனுக்குரிய
கறவைப் பசுக்களை
அந்தணனிடம்
ஒப்படைத்து ;
தான் மேற்கொண்ட
முக்கியமான கடமையை
எந்தவிதமான பிசகும்
இல்லாமல் செவ்வனே
செய்து முடித்து ;
அந்தணனுக்கு வழங்க
வேண்டிய உரிய
நீதியை சட்டப்படி
அவனுக்கு அளித்து ;
இந்திரப்பிரஸ்தம்
சென்று அடைந்து ;
தன்னுடைய மூத்த
சகோதரர்களை சந்தித்து;
அவர்களிடம் தான்
பெற்ற வெற்றிக்காக
அவர்களிடம்
ஆசிர்வாதம்
பெற்றதையைடுத்து ;
தர்மரை தனிமையில்
சந்தித்து பேசத்
தொடங்கினான்
அர்ஜுனன் ;”
“அர்ஜுனன்............?”
----------இன்னும் வரும்
-----------K.பாலகங்காதரன்
-----------01-11-2019
//////////////////////////////////////////