August 20, 2019

பரம்பொருள்-பதிவு-55


                 பரம்பொருள்-பதிவு-55

" எல்லாம் வல்ல
பரம்பொருளான
சிவபெருமான்
அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
மயிலாப்பூர்
கபாலீஸ்வரர் கோயிலில்
வெளிப்புற பிரகாரத்தில்
மேற்கு கோபுரத்திற்கு
அருகில்
அங்கம்
பூம்பாவைக்கென்று
தனி சந்நிதி
தனி விமானத்துடன்
உள்ளது ;
அங்கம் பூம்பாவை
கிழக்கு நோக்கி
இருக்க அதே
சன்னிதியில்
திருஞான சம்பந்தர்
வடக்கு நோக்கி
பார்த்துக் காட்சி
அளித்துக் கொண்டும்
இருக்கிறார் ; "

" இந்த சந்நிதியின்
கோபுரத்தில் பூம்பாவை
உயிர்ப்பெற்று
எழும் நிகழ்ச்சி
சிற்பமாக செதுக்கப்பட்டு
உள்ளது ; - இதில்
திருஞான சம்பந்தர்
உயிர்ப்பெற்று
எழும் பூம்பாவை
மற்றும்
பூம்பாவையின்
பெற்றோர்கள்
உள்ளார்கள் ; "

“ மயிலாப்பூர்
ராமகிருஷ்ண
மடசாலையில்
ராமகிருஷ்ண மடம்
சார்பாக இலவச
மருத்துவமனை
ஒன்று செயல்பட்டு
வருகிறது - அந்த
மருத்துவமனையை
அத்திக்குட்டை
ஆஸ்பத்திரி
என்று தான்
மயிலைவாசிகள்
அழைத்து
வருகின்றனர் ;”

“ காரணம் அங்கு தான்
பூம்பாவையின் அஸ்தி
வைக்கப்பட்டிருந்த
கன்னிமாடம் இருந்தது.
அஸ்திக்குட்டை
என்பதே
அத்திக்குட்டை
என்று மருவியது ;”

“ஆறாம் நூற்றாண்டில்
பூம்பாவையை
திருஞான சம்பந்தர்
உயிர்ப்பித்த நிகழ்ச்சியை
மயிலாப்பூர்
தலத்தில் விழாவாக
கொண்டாடுகிறார்கள் ;”

“திருஞான சம்பந்தர்
பூம்பாவையை
உயிர்ப்பித்த நிகழ்ச்சி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயிலில் பங்குனி
பிரம்மோற்சவத்தின்
8-ம் நாளின் காலையில்
நடைபெறுகிறது;”

“இதற்காக
திருஞான சம்பந்தர் ;
பூம்பாவை ;
சிவநேசர்  ;
உற்சவ சிலைகளை
தீர்த்தத்தில்
நீராட்டிய பிறகு ;
குடத்தில்
நாட்டுச் சர்க்கரையை
இட்டு பூம்பாவையின்
சாம்பலாக
கொண்டு வருகிறார்கள்;”

“அதன்பிறகு
திருஞான சம்பந்தரின்
பதிகம் ஓதப்படுகிறது ;
இதன்பிறகு
பூம்பாவை உயிருடன்
எழுந்ததாக
பாவனை செய்து
நிகழ்வினை
முடிக்கின்றார்கள் ;
இந்நிகழ்வினை
பார்த்தால் தீர்க்காயுள்
கிடைக்கும் என்பது
நம்பிக்கையாகும் ;”

“இவ்வாறு பூம்பாவையை
தைப்பூச நாளில்
திருஞான சம்பந்தர்
உயிர்ப்பித்ததாக
கூறப்படுகிறது”

“மறைந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
ஒவ்வொரு பதிகமாக
பாடிக் கொண்டே
வரும்போது
பத்தாவது பதிகத்தில்
கும்பாபிஷேகம்
காணாமல் போனாயோ
பூம்பாவாய்
என்று பாடி
முடித்த வேளையில்
பூம்பாவை
உயிர்ப்பெற்று வந்தாள்”

“கும்பாபிஷேகம்
என்ற வார்த்தைக்கே
எலும்பைப்
பெண்ணாக்குகின்ற
ஆற்றல் உண்டு என்றால்
கும்பாபிஷேகத்தை
நேரில் தரிசித்தால்
எத்தகைய புண்ணியம்
ஏற்படும் என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும்”

“திருஞான சம்பந்தர்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பி
சைவ மதத்தின்
பெருமையையும் ;
சிவபெருமானுடைய
சக்தியையும் ;
சிவனடியார்களுடைய
சக்தியையும் ;
உலகறியச் செய்துள்ளார்
என்பதை நாம்
அனைவரும்
நினைவில் கொள்ள
வேண்டும் !”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 20-08-2019
//////////////////////////////////////////////////////////