கண்ணதாசன்-பதிவு-10
பூஜ்ஜியத்துக்குள்ளே
இருப்பு நிலையில்
இருக்கும்
கடவுள்
இயக்க நிலையில்
ஒரு பொருளாக
மாற்றமடைந்து
இயங்கிக்
கொண்டிருக்கும் போது
அந்த இயக்கத்திற்குத்
தேவையான
சக்தியானது
முழுவதும் தீர்ந்தவுடன்
இயக்க நிலையில்
இருந்த அந்தப்
பொருளானது
இருப்பு நிலையுடன்
இணைந்து விடுகிறது
என்பதை
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
எளிமையான
வகையில்
எளிதாக தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக
எட்டு என்ற எண்ணில்
இயக்க நிலையுடன்
ஒப்பிடப்படும்
கீழே உள்ள
பூஜ்ஜியமானது
எட்டு என்ற எண்ணில்
இருப்பு நிலையுடன்
ஒப்பிடப்படும்
மேலே உள்ள
பூஜ்ஜியத்துடன்
ஒன்றுடன் ஒன்று
இணைவதால்
எட்டு என்ற எண்
மறைந்து பூஜ்ஜியம்
என்ற ஒரே எண்ணாக
மாற்றம் அடைகிறது
என்ற வார்த்தையானது
ஆன்மீக உலகத்தில்
பயன்படுத்தப்பட்டு
வருகிறது
இருப்பு நிலையானது
இயக்க நிலையாக
மாறி மீண்டும்
இருப்பு நிலையாக
மாறுகிறது
என்பதை
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
எளிமையான
வகையில்
எளிதாக தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக
பூஜ்ஜியம் என்ற
எண்ணானது
எட்டு என்ற எண்ணாக
மாறி மீண்டும்
பூஜ்ஜியம் என்ற
எண்ணாக மாறுகிறது
என்ற வார்த்தையானது
ஆன்மீக உலகத்தில்
பயன்படுத்தப்பட்டு
வருகிறது
இதிலிருந்து எட்டு
என்ற எண்ணும்
பூஜ்ஜியம் என்ற
எண்ணும்
கடவுளைக்
குறிப்பதற்காகப்
பயன்படுத்தப்பட்டாலும்
பூஜ்ஜியம் என்ற
எண்ணிலிருந்து தான்
எட்டு என்ற எண்ணே
தோன்றுகிறது என்ற
காரணத்தினாலும்
எட்டு என்ற
எண்ணாணனது
மீண்டும் பூஜ்ஜியம்
என்ற எண்ணாக
மாறுகிறது என்ற
காரணத்தினாலும்
எட்டு என்ற
எண்ணை விட
பூஜ்ஜியம் என்ற
எண்ணே
உயர்ந்தது என்பதும்
சிறந்தது என்பதும்
கடவுளாக மதிக்கப்பட
வேண்டியது
என்பதும்
தெளிவாகிறது
பூஜ்ஜியம் என்ற
எண்ணுடன்
ஒப்பிடப்படும்
இருப்பு நிலையில்
இருக்கும்
கடவுள்
இயக்க நிலையாக
மாறி
இயக்க நிலையில்
கடவுள்
படைத்தல் காத்தல்
அழித்தல் மறைத்தல்
அருளல் எனற
ஐந்தொழில்களை
பேராற்றல் பேரறிவு
என்ற இரண்டு
தன்மைகளைக் கொண்டு
இயக்க நிலையில்
ஒரு பொருள்
மூலமாக
கடவுள் இயங்கிக்
கொண்டிருக்கும் போது
இயக்கத்திற்குத்
தேவையான
சக்தியானது தீர்ந்தவுடன்
இயக்க நிலையில்
இருக்கும்
கடவுள் மீண்டும்
இருப்பு நிலையில்
உள்ள கடவுளாக
மாறுகிறார் என்பதை
யாராலும் எளிதில்
புரிந்து கொள்ள
முடியாத நிலையில்
இருக்கும்
இத்தகைய
தன்மைகளைக்
கொண்டு தான்
கடவுள் இருப்பார்
என்பதை யார்
ஒருவர் புரிந்து
கொள்கிறாரோ
அவரே கடவுளை
உணர்ந்தவர்
என்பதைத் தான்
பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான்
ஒருவன் – அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான்
இறைவன்
என்ற பாடலின் மூலம்
கண்ணதாசன்
தெளிவாக்குகிறார்
-----------என்றும்
அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
-----------28-08-2020
/////////////////////////////////////////