September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-7

 ஜபம்-பதிவு-673

(சாவேயில்லாத

சிகண்டி-7)

 

தாய்

சத்தியவதியின்

அழைப்பை ஏற்று

ஒருவர் விரைந்து

நடந்து சென்று

கொண்டிருந்தார்

தேவவிரதன் என்ற

பெயர்

சூட்டப் பெற்றவர்

 

சாந்தனு

மன்னனுக்கும்

கங்கைக்கும்

மகனாகப்

பிறந்தவர்

 

போர்க்

கலைகளையும்

வித்தைகளையும்

பரசுராமரிடம்

இருந்து

கற்றவர்

 

கங்கையை

கணை கொண்டு

தடுக்கும்

அளவிற்கு

திறமைசாலியாக

இருந்தவர்

 

குழந்தைப்

பருவம்

முதல்

தன் தாயான

கங்கையின்

அரவணைப்பில்

வாழ்ந்து

வந்தவர்

 

பருவ வயதை

எட்டிய பின்

தன் தந்தையான

சாந்தனு

மன்னனிடம்

வந்தவர்

 

அஸ்தினாபுரத்திற்காகவே

இரண்டு

சபதங்களை

எடுத்தவர்

 

தன் தந்தைக்கு

அவர் விரும்பிய

மீனவ பெண்ணான

சத்தியவதியை

மணம் முடித்து

வைக்க தன்

வாழ்நாள்

முழுவதும்

பிரம்மச்சரியத்தை

கடைபிடிப்பேன்

என்று சபதம்

எடுத்தவர்

 

குருவம்சத்தைக்

காக்க அதன்

அரியணையில்

யார்

அமர்ந்தாலும்

அவர்களுக்கு

விசுவாசமாக

இருப்பேன்

என்று

சபதம்

எடுத்தவர்

 

தனக்காக

தன் மகன்

செய்த

தியாகத்தைக்

கண்டு

சாந்தனு

மன்னன்

தேவவிரதனுக்கு

அவர் விரும்பும்

நேரத்தில் தான்

மரணம் வரும்

என்ற வரத்தை

அளித்து

அந்த வரத்தை

தேவவிரதன்

பெற்றதினால்

தேவைப்படும்

நேரத்தில்

மரணத்தை

தழுவலாம்

என்ற

நினைப்பில்

வாழ்ந்து

கொண்டிருந்தவர்

 

அவர் தான்

அஸ்தினாபுரத்தின்

தலைமகன் தான்

 

அனைவராலும்

மரியாதையுடன்

நடத்தப்பட்டவர் தான்

 

அவர் தான்

பீஷ்மர்

பீஷ்மர்

பீஷ்மர்

 

தாய் சத்தியவதி

அழைப்பை ஏற்று

அவரை பார்க்க

விரைந்து

நடந்து சென்று

கொண்டிருந்தார்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

 

சாவேயில்லாத சிகண்டி-6

 ஜபம்-பதிவு-672

(சாவேயில்லாத

சிகண்டி-6)

 

ஒரு ஆணினால்

கடத்தப்பட்டவர்

கதாபாத்திரம் தான்

 

காதலனால்

கைவிடப் பட்ட

கதாபாத்திரம் தான்

 

மகரிஷியால்

காப்பாற்ற முடியாத

கதாபாத்திரம் தான்

 

அந்த

கதாபாத்திரம் தான்

 

பல்வேறு

சிறப்புகளைப்

பெற்றவராக

இருப்பவர்

 

தன் மேற்கொண்ட

சபதத்தை

முடிப்பதற்காக

தன்னை தீயில்

எரித்து விட்டு

அடுத்த ஜென்மம்

எடுத்தவர்,

 

யாராலும்

வீழ்த்த முடியாது

என்று உலகம்

கருதப்பட்டவரை

வீழ்த்தி சரித்திரம்

படைத்தவர்,

 

எதற்காகவும்

அஞ்சி நடக்காதவர்

 

வீரம் செறிந்த

வீரர்களையே

எதிர்த்தவர்

 

எதிரிகள்

பயப்படும்

அளவிற்கு

போர் புரிபவர்

 

உறவுக்கு

இலக்கணமாகத்

திகழ்ந்தவர்

 

அன்புக்கு

அடிமையாக

இருந்தவர்

 

ஆளுமைக்கு

உதாரணமாக

இருந்தவர்

 

சபதத்தை

இரத்தத்தில்

கலந்தவர்

 

எடுத்த

சபதத்தை

முடித்தவர்

 

யாராலும்

செய்ய முடியாத

மிகப்பெரிய

செயலைச்

செய்தவர்

 

சமுதாயத்தின்

ஏளனத்தைக் கண்டு

அஞ்சாதவர்

 

தான் எப்படி

வாழ வேண்டும்

என்று

நினைத்தாரோ

அப்படியே

வாழ்ந்தவர்

 

தன்னுடைய

உணர்வுகளுக்கு

மதிப்பு கொடுத்து

வாழ்ந்தவர்

 

தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக்

கொண்டு

வாழாதவர்

 

உடலில் ஏற்பட்ட

மாற்றங்களை

உணர்ந்து அதனை

நெறிப்படுத்தி

உண்மையாக

வாழ்ந்தவர்

 

அவர் தான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

சரித்திரம்

படைத்தவர்

தான்

 

அவர் தான்

அவரைப்

பற்றித் தான்

பார்க்கப்

போகிறோம்

 

அவர் தான்

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

வரலாறு

படைத்தவர்

தான் சிகண்டி

 

யாராலும்

வீழ்த்த முடியாத

பீஷ்மரை

வீழ்த்தியவர்

தான் சிகண்டி

 

சிகண்டியின்

வாழ்க்கை

வரலாற்றைத் தான்

பீஷ்மரை

வீழ்த்திய

சிகண்டி

என்ற தலைப்பில்

பார்க்கப்

போகிறோம்

 

அஸ்தினாபுரத்தை

நோக்கி நம்

கதை நகருகிறது

 

அஸ்தினாபுரம்

அரண்மனை

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

சாவேயில்லாத சிகண்டி-5

 ஜபம்-பதிவு-671

(சாவேயில்லாத

சிகண்டி-5)

 

தோல்வியுற்றவர்கள்

பக்கம் இருக்கும்

நீதி, நேர்மை,

நியாயத்தையும்,

வீரம், தியாகம்,

அன்பு, கருணை,

ஆகியவற்றின்

உண்மைத்

தன்மையினை

உணர்ந்து

எழுதுவார்கள்,

 

எது சரியானது

எது தவறானது

எது காலத்தால்

மறைக்கப்பட்டு

இருக்கிறது

எது காலத்தால்

சொல்லப்படாமல்

இருக்கிறது

என்று ஆராய்ந்து

எழுதுவார்கள்

 

வரலாற்றை

உண்மையாக

எழுதுபவர்களால்

மட்டுமே

வரலாறானது

உண்மைத்

தன்மையுடன்

இருக்கும்

 

வரலாறு

அறிவுத் தன்மையுடன்

எழுதப்பட்டிருக்கிறதா

(அல்லது)

உண்மைத்

தன்மை அற்று

எழுதப்பட்டிருக்கிறதா

என்று முதலில்

அறிந்து

கொள்ள வேண்டும்

 

வேறுபடுத்தி

அறிந்து கொள்ளும்

திறமை

படைத்தவர்களால்

மட்டுமே

உண்மையான

வரலாற்றைப்

படிக்க முடியும்

 

வேறுபடுத்தி அறிய

முடியாதவர்களால்

உண்மையான

வரலாற்றை

அறிந்து படிக்க

முடியாது

 

உண்மையான

வரலாறு எது

என்று தெரிந்து

கொண்டு படிக்க

ஆரம்பித்தால்

உண்மையான

வரலாறு எது

என்று உணர்ந்து

கொள்ள முடியும்

 

இதனை

மனதில் கொண்டு

வேறுபடுத்தி

அறியும் திறனை

வளர்த்துக் கொண்டு

வரலாற்றை

படிக்கத்

தொடங்குங்கள்

 

வரலாறு

உங்களுக்காக

காத்துக்

கொண்டிருக்கிறது

 

மகாபாரதம்

என்று

எடுத்துக் கொண்டால்

ஒரு சில

பெயர்கள்

மட்டுமே

மக்கள் மத்தியில்

கொண்டு

செல்லப்பட்டு

இருக்கிறது

 

பெரும்பாலான

பெயர்கள்

மக்கள் மத்தியில்

கொண்டு

செல்லப்

படாமலேயே

இருக்கிறது

 

இதனால்

மகாபாரதத்தில்

திறமை வாய்ந்த

பல கதாபாத்திரங்கள்

மக்கள்

மன்றத்திற்கு கொண்டு

செல்லப் படாமல்

மறைந்தே இருக்கிறது

 

சிறிய கதாபாத்திரம்

என்று தவறாக

நினைத்துக் கொண்டு

முக்கிய

கதாபாத்திரங்கள்

மறைக்கப்பட்டு

இருக்கிறது

 

அதில்

ஒரு

கதாபாத்திரம் தான்

 

வீரம்

செறிந்த

கதாபாத்திரம் தான்

 

உணர்வுகள்

மேலிட்ட

கதாபாத்திரம் தான்

 

உறவுகளுடன்

பிணைக்கப்பட்ட

கதாபாத்திரம் தான்

 

உரிமைக்காக

போராடிய

கதாபாத்திரம் தான்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

சாவேயில்லாத சிகண்டி-4

 ஜபம்-பதிவு-670

(சாவேயில்லாத

சிகண்டி-4)

 

சகுனி செய்த

செலையும்

கிருஷ்ணர் செய்த

செயலையும்

ஒப்பிட்டு

நோக்காமல்

நல்லவர் யார்

கெட்டவர் யார்

என்பதை

அறிவைக் கொண்டு

எழுதுபவர்கள்

சொல்லவில்லை

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

கிருஷ்ணரை

நல்லவராகவும்

சகுனியை

கெட்டவராகவும்

தான் எழுதி

வைத்திருக்கின்றனர்

 

கிருஷ்ணர் நல்லவர்

என்று சொல்லலாம்

அதற்காக சகுனியை

கெட்டவர் என்று

சொல்ல முடியாது

 

பாண்டவர்களுக்காக

திட்டங்களை

தீட்டுவதற்கும்

அதனை

செயல் படுத்துவதற்கும்

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியார்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகியோர் இருந்தனர்

ஆனால்

இவர்கள்

அனைவரும்

தீட்டிய

திட்டங்களுக்கும்

செயல்படுத்திய

செயல்களுக்கும்

கௌரவர்கள்

சார்பாக

சிந்தனை செய்வதற்கும்

கௌரவர்களை

காப்பாற்றுவதற்கும்

தன்னந்தனியாக

போராடியது

சகுனி மட்டுமே

 

அத்தகைய ஒரு

ராஜதந்திரியான

சகுனியை எப்படி

கெட்டவன் என்று

சொல்ல முடியும்.

 

பாண்டவர்களுக்காக

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியர்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகிய அனைவரும்

செய்ததைத் தான்

சகுனி

கௌரவர்களுக்காக

தன்னந் தனியாக

செய்தார்

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

மகாபாரதக் கதையை

பிரதி எடுத்தவர்கள்

சகுனியை கெட்டவன்

என்று சித்தரித்து

விட்டனர்

 

இங்கே உண்மை

என்பது

மறைக்கப்பட்டு விட்டது

உண்மை

மறைக்கப்பட்டு

விட்டதால்

பொய் என்பது

சர்வ சுதந்திரமாக

உலாவ

வந்து விட்டது

வரலாறை

அறிவை கொண்டு

எழுதினால்

இப்படித்தான்

இருக்கும்

உண்மை இருக்காது

 

உண்மையான

வரலாறு வேண்டும்

என்றால்

உண்மையானவர்களால்

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்களால்

வரலாறு

எழுதப்பட வேண்டும்

 

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்கள்

மட்டுமே

வரலாற்றை

உண்மையாக

எழுதுவார்கள்

உண்மையை

மட்டுமே

எழுதுவார்கள்

 

வெற்றி

பெற்றவர்களையும்

தோல்வியுற்றவர்களையும்

சரிசமமாக

பாவித்து

எழுதுவார்கள்

 

யார் பக்கம்

நியாயம் இருக்கிறதோ

அதை பயப்படாமல்

உண்மையாக

எழுதுவார்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////