August 04, 2024

ஜபம்-பதிவு-1006 மரணமற்ற அஸ்வத்தாமன்-138 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1006

மரணமற்ற அஸ்வத்தாமன்-138

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :  நற்செய்தி தானே கொண்டு வந்திருக்கிறாய்.

 

அஸ்வத்தாமன் : உனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே நற்செய்தி தான். பாண்டவர்களைக் கொன்று வந்திருக்கிறேன். நீ நடத்திய போராட்டம் முடிந்து விட்டது. அமைதி கொள்.

 

துரியோதனன் : பாண்டவர்களை முடித்து விட்டாய்

முடியாத காரியத்தை முடித்து விட்டாய்.

முடிக்க முடியுமா என்று யோசித்த காரியத்தை முடித்து விட்டாய்.

யாராலும் முடிக்க முடியாத காரியத்தை முடித்து விட்டாய்.

முடிக்க முடிந்தவர்களும் முடியாது என்று

மறுத்து விட்ட காரியத்தை முடித்து விட்டாய்

முடிக்க முடியாது என்று சொன்னவர்களுக்கும்

முடிக்க முடியும் என்று காட்டி விட்டாய்

நான் முடியப் போகும் நேரத்தில் முடித்து விட்டாய்.

நான் முடிவதற்கு முன் முடித்து விட்டாய்

நான் விட்ட கடமையை முடித்து விட்டாய்

வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டாய்

எந்த ஒன்றும் தொடராமல் முடித்து விட்டாய்

தொடர்ச்சி இல்லாமல் முடித்து விட்டாய்

முற்றுப் புள்ளி வைத்து முடித்து விட்டாய்

 

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே துரியோதனன் உயிர் அவன் உடலைப் விட்டுப் பிரிந்தது

 

துரியோதனன் சடலத்திற்கு அஸ்வத்தாமன் கடைசி காரியங்களைச் செய்தான்.

 

பிராயச்சித்தம் செய்ய வேண்டி வேத வியாசர் தங்கி இருந்த ஆசிரமத்திற்கு சென்றான்

 

வேதவியாசர் சொன்ன செய்தி அஸ்வத்தாமனுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது

 

புறப்பட்டு விட்டான், இறுதி யுத்தத்திற்கு தயாராகி விட்டான் மரணமற்ற அஸ்வத்தாமன்

 

கிருஷ்ணனுடன் நேரடி மோதல்.

 

மரணமற்ற அஸ்வத்தாமனின் இறுதி மோதல், கடவுளுடன்.

 

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1005 மரணமற்ற அஸ்வத்தாமன்-137 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1005

மரணமற்ற அஸ்வத்தாமன்-137

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இத்தகைய ஒரு போரைத் தான் இப்போது

இப்போது நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்

நான் செய்யும் இந்த போரைப் பின்பற்றித் தான்

வருங்காலத்தில் போர்கள் நடைபெறப்போகிறது

 

நான் செய்யும் போர் தான்

வருங்காலத்தில் செய்யப்படவிருக்கும் போருக்கு முன்னோடி

 

நான் சொல்வது உனக்குப் புரியாது

எதிர்காலத்தைப் பற்றிப் பேசினால் யாருக்கும் புரியாது

 

அனைவரும் நிகழ்காலத்தையும்

இறந்த காலத்தையும் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்

எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள்

 

என் தந்தையைக் கொல்வதற்காக அவதாரம் எடுத்து வந்தாய்

என் தந்தையிடமே சீடனாக சேர்ந்தாய்

என் தந்தையிடம் அனைத்து கலைகளையும் கற்றாய்

போர்க்கலைகளில் சிறந்தவனாக விளங்கினாய்

 

என் தந்தை  ஆயுதம் வைத்துக் கொண்டிருக்கும் போது

அவருடன் போரிட்டு அவரைக் கொன்று இருக்க வேண்டும்

ஒரு வீர மரணத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டும்

ஆனால் நீ என்னுடைய தந்தை ஆயுதம் எதுவும் இல்லாத போது

ஆயுதங்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு

தியானத்தில் இருந்த போது அவரைக் கொன்று இருக்கிறாய்

 

பெரிய சாதனை செய்யப்போவது போல பிறந்தாய்

பெரிய சாதனை செய்யப்போவது போல வளர்ந்தாய்

சாதனை செய்வாய் என்று அனைவரும்

எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் போது

ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டு விட்டு

ஆயுதம் எதுவும் இல்லாமல்

தவத்தில் இருந்த என்னுடைய தந்தையைக் கொன்றாய்

 

இந்த செயலைச் செய்வதற்கு நீ ஏன் பிறக்க வேண்டும்

நீ செய்த செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்

சாதாரண ஒரு மனிதனே நீ செய்த செயலைச் செய்வான்

 

நீ செய்த செயலுக்கு உனக்கு தண்டனை கொடுக்காமல் செல்ல மாட்டேன்

என்னுடைய தண்டனையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது

 

மரண வேதனையை உனக்குக் கொடுக்கப் போகிறேன்

மரணம் எப்படி இருக்கும் என்பதை உனக்குக் காட்டப் போகிறேன்

என்னை கொன்று விடு என்னைக் கொன்று விடு என்று

நீ என்னைக் கெஞ்ச வேண்டும்.

மரண பயம் உன் முகத்தில் தெரிவதை நான் பார்க்க வேண்டும்

 

அஸ்வத்தாமன் அவனைக் கைகளால் குத்தினான் வயிற்றில் எட்டி உதைத்தான். முடியைப் படித்து தரையில் இழுத்து வந்தான் மார்பில் ஓங்கி ஓங்கி குத்தினான்

 

என்னை வாளால் வெட்டி விடு. இல்லை அம்பால் துளைத்து விடு. ஒரு வீரனுக்கு உரிய மரணத்தை எனக்குக் கொடு. என்னை சாக விடு.

 

என் தந்தையைக் கொன்ற உனக்கு வீர மரணம் கிடையாது. கொடிய மரணம் தான். இழிவான மரணம் தான்.

 

திருஷ்டத்யும்னனின் கழுத்தை நெறித்தான். நெறித்துக் கொண்டே இருந்தான். கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிதுங்கி வெளியே வந்தது. கொடுமையான முறையில் திருஷ்டத்யும்னன் இறந்தான்.

 

தொடர்ந்து அஸ்வத்தாமன் சிகண்டியைக் கொன்றான். பல வீரர்களைக் கொன்றான். உயிருக்கு பயந்து ஓடியவர்களை யானை மிதித்து கொன்றது. எஞ்சியவர்களை கிருபரும், கிருதவர்மனும் கொன்றார்கள்.

 

ஒரு கூடாரத்தில் ஐந்து நபர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். ஒரு மந்திரத்தை ஜெபித்து தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை விடுகிறான். அந்த ஒன்று ஐந்து பாணங்களாகி அந்த ஐவரையும் கொன்று விடுகிறது.

 

அங்கிருந்து சென்று மந்திரத்தை ஜெபித்து ஒரு பாணத்தை விடுகிறான். அது ஒரு மாபெரும் தீ உருண்டையாக உருவாகி கீழே விழுகிறது. அது அனைத்து இடத்தையும் எரிக்கிறது. கூடாரத்தை எரிக்கிறது. விலங்குகளை எரிக்கிறது. மனிதர்களை உயிரோடு எரிக்கிறது. உயிருக்கு பயந்த ஓடுபவர்களை எரிக்கிறது. அங்குள்ள அனைத்தையும் எரிக்கிறது. அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. பேரழிவு ஏற்பட்டது போல் அந்த இடமே காட்சியளிக்கிறது. அந்த இடமே ஒன்றும் இல்லாமல் அழிந்து விட்டது.

 

அந்த பாசறையில் இருந்த ஒருவரும் மிஞ்சவில்லை. அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். விலங்குகள் உட்பட அனைத்தும் கொல்லப்பட்டு விட்டது

 

18 நாள் நடைபெற்ற குருஷேத்திரப் போரை விட

அன்றைய இரவில் அஸ்வத்தாமன் நடத்திய போரே மிகக் கொடுமையானது

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத போர்

யாரும் இனி செய்ய முடியாத போர்

பேரழிவு உண்டாக்கப்பட்ட போர்

தனி ஒருவனால் நடத்தப்பட்டப் போர்

இத்தகைய ஒரு போரைத் தான் அஸ்த்தாமன் செய்து முடித்தான்

 

பாண்டவர்கள் இறந்த செய்தியை துரியோதனனிடம் சொல்வதற்கு துரியோதனனைத் தேடி விரைந்து வந்தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-1004 மரணமற்ற அஸ்வத்தாமன்-136 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1004

மரணமற்ற அஸ்வத்தாமன்-136

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இவர்கள் நால்வரும்

முழு மனதுடன் போர் புரியவில்லை

அரை மனதுடன் தான் போர் புரிந்தார்கள்

முழு மனதுடன் போர் புரிந்து இருந்தால்

பாண்டவர்களால் இவர்களை வீழ்த்தி இருக்கவே முடியாது.

பாண்டவர்கள் இவர்களைக் கொன்று இருக்கவே முடியாது

பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்கவே முடியாது

அரை மனதுடன் போர் புரிந்த காரணத்தினால் தான்

இவர்களைக் கொல்லவே முடிந்தது

இங்கே கிருஷ்ணரின் சூழ்ச்சி இருந்தது

 

கிருபர்  : கிருஷ்ணன் சூழ்ச்சி செய்தார் என்றால்

நீயும் ஏன் அதே சூழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்கிறாய்

சூழ்ச்சிக்கு சூழ்ச்சி என்பது பதில் கிடையாது

இரவில் ஏன் போர் புரிய வேண்டும் என்கிறாய்

கிருஷ்ணன் செய்த தவறை

கடவுள் என்று சொல்லப்படுகிற கிருஷ்ணன் செய்த தவறை

நீயும் ஏன் செய்ய முயற்சி செய்கிறாய்

நாளை காலை சூரியன் உதிக்கட்டும்

நாளை காலை போர் செய்வோம்

 

அஸ்வத்தாமன் : கடமை என்னை அழைக்கிறது. எனக்கு இடப்பட்ட கடமையை நான் முடிக்க வேண்டும். எனக்கிருக்கும் காலம் குறைவு. அதற்குள் எனக்குள்ள கடமையை முடிக்க வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் என்னால் என்னுடைய கடமையை முடிக்க முடியாது.

 

நான் போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு எனக்கு நேரம் காலம் கிடையாது. இரவு பகல் கிடையாது. அதை எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை.

 

என்னுடைய எண்ணத்தை யாராலும் மாற்றவும் முடியாது. என்னுடைய எண்ணத்தை நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

 

உங்களுக்கு போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் செய்வது சரி என்று நீங்கள் நினைத்தால் என்னுடன் இணைந்து போர் செய்ய வாருங்கள். இரவில் போர் செய்ய விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள்.

 

பகலில் தான் போர் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் செல்லலாம். தன்னந்தனியாக நான் ஒருவனே பார்த்துக் கொள்கிறேன்.

 

கிருபர் : போர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு பின் வாங்குவது முறை கிடையாது. உன்னுடன் வந்து விட்டேன். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் தயார்

 

கிருதவர்மன் : நானும் தயார்

 

அஸ்வத்தாமன் பாண்டவர்கள் இருக்கும் பாசறையில் நுழைகிறான். கிருபரும், கிருதவர்மனும் பாசறையின் வெளியில் இருக்கின்றனர். அஸ்வத்தாமன் ஒரு கூடாரத்தில் நுழைகிறான். அங்கு திருஷ்டத்யும்னன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனை காலால் எட்டி உதைத்தான். தூக்கத்தில் விழித்து எழுந்தான் திருஷ்டத்யும்னன்.

திருஷ்டத்யும்னன் : உறங்கும் சமயத்தில் போர் செய்ய வந்திருக்கிறாயே

உறங்கிக் கொண்டிருப்பவர்களுடன் போர் செய்ய வந்திருக்கிறாயே

இரவில் போர் செய்ய வந்திருக்கிறாயே

நீயெல்லாம் ஒரு வீரனா

போரின் விதிமுறைகள் உனக்கு தெரியும் அல்லவா

 

அஸ்வத்தாமன் : நான் இரவில் போர் செய்ய வந்திருப்பது

புதிய போர் முறையைக் கொண்டு வருவதற்கு

பழைய போர் முறையை மாற்றுவதற்கு

காலங்காலமாக நடைபெற்று வரும் போர் முறையில்

மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு

புது முறையைக் புகுத்துவதற்கு

சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு

வருங்காலத்தில் பின்பற்றுவதற்கு

புதிய போர் முறையை உருவாக்குவதற்கு

நான் இரவில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

எதிர்காலத்தில் செய்யப்படும் போர்முறைக்கு

முன்னுதாரணமாக என்னுடைய போர் முறை

இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக

போர் முறையில் ஒரு புதிய மாற்றத்தை

உருவாக்கி இரவு நேரத்தில் போர் செய்ய வந்திருக்கிறேன்

 

நான் செய்யும் இந்த போர் முறையைத் தான்

வருங்காலத்தில் பின்பற்றப் போகிறார்கள்

 

வருங்காலத்தில் அனைவராலும் பின்பற்றப்படும்

ஒரு போர் முறையைத் தான்  

நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்

 

வருங்காலத்தில் போரானது

அதற்கென்று ஒதுக்கப்பட்ட களத்தில் நடைபெறாது

அதற்கென்று தனியாக சட்ட திட்டங்கள் இருக்காது

இரவு பகல் என்று பார்க்காமல்

கால நேரம் எதுவும் பார்க்காமல் போர் நடைபெறும்

சிறுவர்கள் சிறுமிகள் பெண்கள் குழந்தைகள்

என்று பார்க்காமல் அனைவரும் கொல்லப்படுவார்கள்

இத்தகைய ஒரு நிலையில் தான்

வருங்காலத்தில் போர்கள் நடைபெறப்போகிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1003 மரணமற்ற அஸ்வத்தாமன்-135 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1003

மரணமற்ற அஸ்வத்தாமன்-135

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆனால், அடங்கி இருப்பவனை

அடிமையாக இருப்பவனை

சுயமாக சிந்ததிக்க இயலாதவனை

எதையும் சிந்திக்காமல் தலையாட்டிக் கொண்டு இருப்பவனை

சொல்லும் அனைத்தையும் கேள்வி கேட்காமல்

ஏற்றுக் கொண்டு இருப்பவனை

இந்த உலகம் நல்லவன் என்கிறது

 

இந்த உலகம் நல்லவன் கெட்டவன் என்று

பார்க்கும் முறையே தவறானது

அதனால் தான் இந்த உலகத்தில் போலிகளின்

எண்ணிக்கை அதிகமாகி விட்டது

பொய்யர்கள் அதிகமாகி விட்டனர்

சுயநலமிகள் அதிகமாகி விட்டனர்

தான் வாழ்வதற்காகப் பிறரை அழிக்கவும்

தயாராக இருப்பவர்களும் உருவாகி விட்டனர்

பிறரை அழித்தாவது தான் வாழ வேண்டும்

என் நிலைக்கு வந்து விட்டனர்

அப்படி வந்து விட்ட பிறகு

துணிந்து தவறு செய்ய வந்து விட்ட பிறகு

செய்யும் செயல் பாவம் என்ற தெரிந்தும்

பாவம் செய்ய வந்து விட்ட பிறகு

உண்மை எது பொய் எது

என்று பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியாத

நிலை வந்து விட்ட பிறகு

போலியானவர்கள் சொல்பவவைகளை தான்

உண்மை என்று நம்பும் நிலைக்கு

இந்த உலகம் தள்ளப்பட்டுவிட்டது

 

எது நியாயம் என்று தெரியாதவர்களிடம்

நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்

நியாயத்தை எதிர்பார்க்கவே முடியாது

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாவீர்கள்

வீழ்த்தப்பட்டது அதர்மத்தின் பக்கம் சேர்ந்த காரணத்தினால் இல்லை

இவர்கள் நால்வரும் அதர்மத்தின் பக்கம் சேர்ந்த காரணத்தினால் வீழ்த்தப்படவில்லை

 

துரியோதனன் பக்கம் சேர்ந்த காரணத்தினால் வீழ்த்தப்படவில்லை

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாவீர்கள் இருந்தும் துரியோதனன் தோற்றதற்குக் காரணம் துரியோதனன் பக்கம் அதர்மம் இருந்த காரணத்தினால் தான் என்று சொல்வது தவறான விஷயம்

 

பீஷ்மர் பாண்டவர்கள் மேல் அதிக அளவு அன்பு வைத்திருந்தார்

பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல மாட்டேன் என்று

சொல்லி விட்டுத் தான் போர் செய்ய வந்தார்

பாண்டவப் படையை மட்டும் கொல்வேன்

என்று போர் செய்ய வந்தார்

பாண்டவர்கள் மேல் அன்பு வைத்துக் கொண்டு

பீஷ்மர் கௌரவர்கள் படையில் போர் செய்தார்

என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன்

பீஷ்மரின் பலவீனத்தை

பீஷ்மரின் வாயாலேயே கேட்டான்

என் எதிரில் ஆண் இருந்தால் மட்டுமே போர் செய்வேன்

பெண் வந்தாலும் ஆண் பெண் சேர்ந்த நிலையில்

இருப்பவர்கள் வந்தாலும்

போர் செய்ய மாட்டேன் என்று சொன்ன காரணத்தினால்

பீஷ்மர் சிகண்டியால் கொல்லப்பட்டார்

 

பீஷ்மராவது பாண்டவர்கள் ஐயவரையும்

கொல்ல மாட்டேன் என்று நேரடியாக சொல்லி விட்டார்

ஆனால் துரோணர்

பாண்டவர்கள் ஐயவரையும் கொல்வேன் என்றோ

கொல்ல மாட்டேன் என்றோ வாக்களிக்க மாட்டேன் என்று

சாதுர்யமாகச் சொல்லி தப்பித்து விட்டார்.

பாண்டவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டார்

பாண்டவர்கள் மேல் அன்பு வைத்துக் கொண்டு

துரோணர் கௌரவர்கள் படையில் போர் செய்தார்

தான் ஆயுதங்களைக் கீழே போட்டால்

தன்னைக் கொல்ல முடியும் என்ற விஷயத்தை

தன்னுடைய எதிரிக்கே சொல்லி விட்டார் துரோணர்

துரோணரின் ஆயுதங்களைக் கீழே போட

சதிவேலை செய்தான் கிருஷ்ணன்

அந்தச் சதிவேலையில் மாட்டிக் கொண்ட

துரோணர் ஆயுதங்களைக் கீழே போட்டார்

ஆயுதம் எதுவும் இன்றி தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த

துரோணரை திருஷ்டத்யும்னன் தலையை வெட்டிக் கொன்றான்

 

கர்ணன் கவச குண்டலங்களை இந்திரனுக்கு கொடுத்து விட்டான்

அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவர்களைக்

கொல்ல மாட்டேன் என்று குந்தி தேவிக்கு

வாக்குறுதி கொடுத்து விட்டான்

நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல்

மற்றொரு முறை விட மாட்டேன் என்றான்

கர்ணன் ஆயுதங்களைக் கீழே போட்ட சமயத்தில்

ஆயுதங்கள் இல்லாத நிலையில்

கர்ணனை அர்ஜுனன் கொன்றான்

 

நகுலன் சகாதேவனுக்கு சல்லியன் தாய் மாமன்

நகுலனும் சகாதேவனும் அவனுக்கு மருமகன்கள்

சல்லியனை தர்மன் பின்னால் இருந்து ஈட்டியால் கொன்றான்

 

இவர்கள் நால்வரும்

தர்மத்திற்கு எதிராக இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

அதர்மத்தின் பக்கம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

துரியோதனன் பக்கம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

துரியோதனன் பக்கம் அதர்மம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணன் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

பாண்டவர்கள் பக்கம் கடவுள் இருந்ததால் இவர்கள் கொல்லப்படவில்லை

கிருஷ்ணனின் சூழ்ச்சியால் தான்

இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்

இவர்கள் அனைவரும் சூழ்ச்சியால் தான் கொல்லப்பட்டார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1002 மரணமற்ற அஸ்வத்தாமன்-134 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1002

மரணமற்ற அஸ்வத்தாமன்-134

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : விரைவாக வருகிறேன். பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியுடன் வருகிறேன்.

 

வாருங்கள் செல்வோம்

 

கிருபர் : எங்கே செல்கிறோம்

 

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் மேல் போர் தொடுப்பதற்கு

 

கிருபர் : இந்த இரவிலா?

 

அஸ்வத்தாமன் : ஆமாம், இந்த இரவில் தான். போர் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் பகல் என்றும் பார்க்கக் கூடாது, இரவு என்றும் பார்க்கக் கூடாது போர் செய்ய வேண்டும்

 

கிருபர் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது

 

அஸ்வத்தாமன் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது என்றால் இரவில் போர் புரியும் முறையை புதியதாக உருவாக்குவோம், அதை இந்த உலகத்திற்கு அளிப்போம். அதை பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்.

 

வாருங்கள் முதலில் பாண்டவர்கள் இருக்கும் பாசறைக்குச் செல்வோம். பிறகு அனைத்தையும் யோசிப்போம்.

 

அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் மூவரும் தென்திசையை நோக்கிச் சென்றனர். பாண்டவர்களுடைய பாசறைக்கு அருகில் வந்தார்கள். களைப்பால் கிருபரும், கிருதவர்மனும் உறங்கி விட்டார்கள். அஸ்வத்தாமன் உறங்கவில்லை.

 

அவர்கள் அமர்ந்திருந்த ஆலமரத்தில் உறங்குகின்ற பல காக்கைகளை ஒரு கோட்டான் வந்து கொன்று குவித்ததை அஸ்வத்தாமன் பார்த்தான். அதை தனக்கு வழங்கப்பட்ட உபதேசமாக அஸ்வத்தாமன் எடுத்துக் கொண்டான். அஸ்வத்தாமன் உறங்கிக் கொண்டிருந்த கிருபரையும், கிருதவர்மனையும் எழுப்பினான்

 

அஸ்வத்தாமன் : இந்தக் கோட்டான் உறங்கிக் கொண்டிருக்கின்ற காக்கைகளை கொன்றது போல் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவர் படைகளையும், பாஞ்சாலர்களையும் கொல்ல வேண்டும்.

 

கிருபர் : தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றவில்லையா?

 

கிருபர் : ஒருவர் தவறான முறையைப் பின்பற்றுகின்றார் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

 

பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றினார்கள் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றினால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாபெரும் வீரர்கள் இருந்தும் கௌரவப் படைகள் தோற்றதற்குக் காரணம் அவர்கள் பக்கம் அதர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் தோற்றார்கள்

 

பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருந்தார். கடவுள் யார் பக்கம் இருக்கிறாரோ அந்தப் பக்கம் தான் வெற்றி பெறும். அதனால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

அஸ்வத்தாமன் : இதை நீங்கள் சொல்கிறீர்களா

 

கிருபர் : இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த உலகமே சொல்கிறது

 

அஸ்வத்தாமன் : நீங்கள் மட்டுமில்லை.

இந்த உலகமும் அறியாமல் சொல்கிறது

உண்மையை உணராமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சொல்கிறது

எது உண்மை என்று தெரிந்து கொள்ளாமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் சொல்கிறது

 

ஒருவர் சிந்திக்காமல் சொன்னால்

அதையே உண்மை என்று நினைத்துக் கொண்டு

இந்த உலகம் திரும்ப திரும்பச் சொல்கிறது

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்கள் சொன்னால்

அடிமை நிலையில் ஏற்றுக் கொண்டு சொல்கிறது

 

இந்த உலகத்திற்கு உண்மை எது

பொய் எது என்று தெரியவில்லை

அதனால் உண்மையை பொய்யாகவும்

பொய்யை உண்மையாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது

 

இந்த உலகம் உண்மையானவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

போலியானவர்களை எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது

அதனால் இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பிவழிகிறது.

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

உண்மை என்று நம்புகிறது

அதைப் பின்பற்றுகிறது

போலியானவர்களும்

போலியான விஷயங்களை

உண்மைக்கு புறம்பான விஷயங்களை

உண்மை என்று மக்களை நம்ப வைத்து விடுகின்றனர்

போலியானவைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையை

உருவாக்கி வைத்து விடுகின்றனர்

இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பி விட்டதால்

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

போலியானவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்

உண்மையானவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்

 

உண்மையாக இருப்பவனை

சுயமான சிந்திப்பவனை

சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவனை

யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பவனை

அடிமையாக இருக்க மறுப்பவனை

தன் சொந்த கால்களில் நிற்பவனை

இந்த சமுதாயம் கெட்டவன் என்கிறது

திமிர் பிடித்தன் என்கிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////