ஜபம்-பதிவு-1006
மரணமற்ற அஸ்வத்தாமன்-138
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
துரியோதனன்
: நற்செய்தி தானே கொண்டு வந்திருக்கிறாய்.
அஸ்வத்தாமன்
:
உனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே நற்செய்தி தான். பாண்டவர்களைக் கொன்று வந்திருக்கிறேன்.
நீ நடத்திய போராட்டம் முடிந்து விட்டது. அமைதி கொள்.
துரியோதனன்
: பாண்டவர்களை
முடித்து விட்டாய்
முடியாத
காரியத்தை முடித்து விட்டாய்.
முடிக்க
முடியுமா என்று யோசித்த காரியத்தை முடித்து விட்டாய்.
யாராலும்
முடிக்க முடியாத காரியத்தை முடித்து விட்டாய்.
முடிக்க
முடிந்தவர்களும் முடியாது என்று
மறுத்து
விட்ட காரியத்தை முடித்து விட்டாய்
முடிக்க
முடியாது என்று சொன்னவர்களுக்கும்
முடிக்க
முடியும் என்று காட்டி விட்டாய்
நான் முடியப்
போகும் நேரத்தில் முடித்து விட்டாய்.
நான் முடிவதற்கு
முன் முடித்து விட்டாய்
நான் விட்ட
கடமையை முடித்து விட்டாய்
வெற்றிகரமாக
நடத்தி முடித்து விட்டாய்
எந்த ஒன்றும்
தொடராமல் முடித்து விட்டாய்
தொடர்ச்சி
இல்லாமல் முடித்து விட்டாய்
முற்றுப்
புள்ளி வைத்து முடித்து விட்டாய்
என்று சொல்லிக்
கொண்டிருக்கும் போதே துரியோதனன் உயிர் அவன் உடலைப் விட்டுப் பிரிந்தது
துரியோதனன்
சடலத்திற்கு அஸ்வத்தாமன் கடைசி காரியங்களைச் செய்தான்.
பிராயச்சித்தம்
செய்ய வேண்டி வேத வியாசர் தங்கி இருந்த ஆசிரமத்திற்கு சென்றான்
வேதவியாசர்
சொன்ன செய்தி அஸ்வத்தாமனுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது
புறப்பட்டு
விட்டான், இறுதி யுத்தத்திற்கு தயாராகி விட்டான் மரணமற்ற அஸ்வத்தாமன்
கிருஷ்ணனுடன்
நேரடி மோதல்.
மரணமற்ற
அஸ்வத்தாமனின் இறுதி மோதல், கடவுளுடன்.
-----ஜபம்
இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----04-08-2024
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment