ஜபம்-பதிவு-999
மரணமற்ற அஸ்வத்தாமன்-131
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
குருஷேத்திரப்
போரை தொடர்ந்து நடத்தும் தகுதியும்
அதை முடித்து
வைக்கும் தகுதியும் உனக்கு மட்டுமே இருக்கிறது
உன்னால்
மட்டுமே குருஷேத்திரப்போரைத்
தொடரவும்
முடியும்
முடிக்கவும்
முடியும்
நான் உன்னை
அதிக அளவு நம்புகிறேன்
யாராலும்
செய்ய முடியாத செயலை உன்னால் மட்டுமே
செய்ய முடியும்
என்று நம்புகிறேன்
உன்னைத்
தவிர பாண்டவர்களைக் கொல்லக் கூடியவர்கள்
யாரும் இல்லை
என்று நம்புகிறேன்
உன் மேல்
நான் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்
என்னுடைய
நம்பிக்கையை காப்பாற்றுவாயா?
அஸ்வத்தாமன் : நண்பா என் மேல் நீ வைத்திருப்பது சந்தேகம் மட்டுமே
பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதானத் தூது வந்த போது
என் மேல் உனக்கு சந்தேகம் வரவில்லை
கிருஷ்ணன் என்னிடம் பேசிய போது உனக்கு
சந்தேகம் வரவில்லை
கிருஷ்ணனின் மோதிரத்தை நான் எடுத்து
அவர் கையில் வைத்த போது தான்
என் மேல் உனக்கு சந்தேகம் வந்து விட்டது
என் மேல் கொண்ட சந்தேகத்தை நீயாக தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்
அதை நீ செய்யவில்லை
என்னை அழைத்தாவது என் மேல் உள்ள சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்
அதையும் நீ செய்யவில்லை.
என் மேல் கொண்ட சந்தேகத்தால் என்னை ஒதுக்கி வைத்தாய்
என் மேல் வெறுப்பு கொண்டாய்
என் மேல் பகைமை கொண்டாய்
எதிரியைப் போல் என்னை நடத்தினாய்
எதிரியாக நினைத்து என்னுடன் பழகினாய்
அருகில் வைத்துக் கொண்டே என்னை இழிவு படுத்தினாய்
இவைகள் அனைத்தையும் அறிந்த நான்
அப்போதே உன்னை விட்டு விலகிச் சென்று இருக்க வேண்டும்
ஆனால் நான் விலகிச் செல்லவில்லை
அதற்குக் காரணம் நான் உன்னுடைய நண்பனாக இருக்கின்ற காரணத்தினால் தான்
உண்மையான நட்பை நான் உன் மேல் வைத்திருக்கின்ற காரணத்தினால் தான்
எனக்கு போலியாக நட்பு கொள்ளத் தெரியாது என்ற காரணத்தினால் தான்
அதனால் தான் நீ என்னை விலகினாலும்
என்னை விலக்கி வைத்தாலும்
உன்னை விட்டு நான் விலகாமல் இருந்ததற்குக் காரணம்
நீ என் மேல் சந்தேகப்பட்ட நேரத்தில் கூட
நான் உன்னுடன் இருந்ததற்குக் காரணம் இது தான்
என் மேல் சந்தேகத்துடன் இருந்த நீ
எப்போது முதல் என் மேல் நம்பிக்கை வைத்தாய்
எப்போது என் மேல் உனக்கு நம்பிக்கை வந்தது
இவ்வளவு நாள் இல்லாத நம்பிக்கை
இப்போது எப்படி வந்தது
அனைத்தையும் இழந்து விட்ட நிலையில்
உயிர் போகும் நிலையில்
என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறாய்
என்னுடைய உண்மையான நட்பை நீ புரிந்து கொள்ளவில்லை
என்னுடைய நட்பை நீ புரிந்து கொண்டு இருந்திருப்பாயேயானால்
நீ என் மேல் சந்தேகம் கொண்டிருக்க மாட்டாய்
என் மேல் உனக்கு உண்மையான அன்பு இல்லை
அதனால் தான் என் மேல் சந்தேகம் கொண்டாய்
உன்னுடைய சந்தேகம் தீரும் அப்போது நீ என்னை
புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்
ஆனால் அனைத்தும் இழந்த நிலையில்
உயிர் போகும் நிலையில் என்னைப் புரிந்து கொண்டதால்
என்ன பயன் உனக்கு ஏற்படப் போகிறது
உலகத்திலேயே தீர்க்க முடியாத வியாதி என்ற ஒன்று
உண்டு என்றால் அது சந்தேகம் தான்
சந்தேகம் என்ற வியாதிக்குத் தான்
இந்த உலகத்தில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவேயில்லை
சந்தேகம் என்பது ஒருவருக்குள் வந்துவிட்டால்
அது அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களையும்
அழித்து விடும் என்பதற்கு நீயே ஒரு சிறந்த
உதாரணமாக இருக்கிறாய்
நம்முடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிய வேண்டும்
நம்முடன் இருப்பவர்களைப் பற்றித் தெரியாவிட்டால்
அப்போதும் கஷ்டப்பட வேண்டியது தான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----04-08-2024
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment