July 04, 2019

பரம்பொருள்-பதிவு-36


                  பரம்பொருள்-பதிவு-36

“நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்- என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
மூன்று விஷயங்களை
உருவாக்கி இந்த
உலகத்திற்கு அளித்து
விட்டுச் சென்றுள்ளனர்
நம்முடைய முன்னோர்கள்”

ஒன்று
சிவலிங்கம்

இரண்டு
ஓம் என்ற எழுத்து

மூன்று
சின்முத்திரை

சிவலிங்கம் :
“ சிவன் கோயிலுக்கு
செல்லுங்கள் - அங்கு
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிவலிங்கத்தை கண்களை
நன்றாக திறந்து பார்த்துக்
கொண்டே சிறிது நேரம்
இருங்கள் - பிறகு மெள்ள
மெள்ள கண்களை மூடுங்கள் ;
சிவலிங்கத்தின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில் வெளியே
இரு புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின் மையம்
வரை செல்லுங்கள் ;
மையத்தில் சிவலிங்கம்
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள் உற்று
நோக்கிக் கொண்டே இருங்கள் ;
இப்போது உங்களுக்கு
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சிவலிங்கம்;”

ஓம் என்ற எழுத்து
“புதையல் தேடி செல்ல
வேண்டும் என்றால் ஒரு
வரைபடம் வேண்டும் ;
வரைபடத்தில் புதையல்
எந்த இடத்தில்
இருக்கிறது என்பதும் ;
புதையலை எந்த வழிகளைக்
கடந்து சென்று
எடுக்க வேண்டும் என்பதும் ;
அந்த வரைபடத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் ;”

“அதைப்போல் ஓம்
என்ற எழுத்தானது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
விளக்கிக் காட்டும்
வரைபடம் ஆகும் ;”

“ஓம் என்ற எழுத்தை
கண்களை நன்றாக திறந்து
பார்த்துக் கொண்டே சிறிது
நேரம் இருங்கள்- பிறகு
மெள்ள மெள்ள கண்களை
மூடுங்கள் - ஓம்
என்ற எழுத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசு
முழுவதும் பரவவிட்டு
நம்முடைய கண்களை
மூடிக் கொண்டு சிரசுக்குள்
தொடர்ந்து பார்த்துக்
கொண்டே இருங்கள்  
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் ஓம் என்ற எழுத்து;”

 சின்முத்திரை
“சின்முத்திரை என்பது
தவம் செய்யும் போது
பயன்படுத்துவதற்காகவோ
அல்லது
ஆன்மீக தத்துவங்களை
சொல்லுவதற்காகவோ
சின்முத்திரை
உண்டாக்கப்படவில்லை “

“ இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
காட்டுவதற்காக
உருவாக்கப்பட்ட முத்திரை
தான் சின்முத்திரை ;”

“சின்முத்திரையை
கைகளில் பிடித்துக்
கொள்ளுங்கள்- அந்த
சின்முத்திரையை
கண்களை நன்றாக
திறந்து பார்த்துக் கொண்டே
சிறிது நேரம் இருங்கள் ;
பிறகு மெள்ள மெள்ள
கண்களை மூடுங்கள் ;
சின்முத்திரையின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
வெளியே இரு
புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின்
மையம் வரை செல்லுங்கள் ;
மையத்தில் சின்முத்திரை
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள்
உற்று நோக்கிக் கொண்டே
இருங்கள் - இப்போது
உங்களுக்கு இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும்  ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சின்முத்திரை;”

“இறைவன் நம்முடைய
உடலில் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதும்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதும் ;
மக்கள் அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
சிவலிங்கம் வடிவில்
சிற்பமாகவும் ;
ஓம் என்ற எழுத்தில்
எழுத்து வடிவமாகவும் ;
சின்முத்திரை வடிவில்
முத்திரையாகவும் ;
பல்வேறு நிலைகளில்
அளித்துச் சென்றுள்ள
நம்முடைய முன்னோர்களின்
செயல் வணங்கத்தக்கதாகும்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-07-2019
//////////////////////////////////////////////////////////