April 22, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8



              ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்தார்கள்
வெகுமானம்
கிடைக்கவில்லை

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
வகையில்
செயல்களைச்
செய்தும்
திறமையாக வேலை
செய்து
பொன்னும் பொருளும்
பாராட்டும் பெற்றார்

கஷ்டப்பட்டு
வேலை செய்த
புலவர்களுக்கு ஒன்றும்
கிடைக்கவில்லை

திறமையாக
வேலை செய்த
ஔவையாருக்கு
சன்மானம் கிடைத்தது
மட்டும் அல்லாமல்
அவர் எழுதிய பாடல்
நான்கு கோடிப்பாடல்
என்ற சிறப்பும் பெற்றது


ஔவையார் பாடிய
நான்கு கோடி பாடலில்
முதல் கோடி பெறும்
செயல் என்ன என்பதற்கான
அர்த்தத்தை பார்ப்போம்


"""மதியாதார் முற்றம்
மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்""""

ஒருவர் தன் வீட்டில்
ஒரு விசேஷம்
வைத்திருக்கிறார்
அதற்காக நம்மை
கூப்பிடுகிறார்
நாம் அவருடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
அவருடைய
வீட்டிற்கு செல்லுகிறோம்

ஆனால் அவர்
நம்மை
வாருங்கள் என்று
அழைக்காமல்
வாருங்கள் என்று
வரவேற்காமல்
அமருங்கள்
என்று சொல்லாமல்
சாப்பிடுங்கள்
என்று சொல்லாமல்
எப்படி வந்தீர்கள் என்று
கூட கேட்காமல்
இருட்டில் எப்படி
போவீர்கள்
என்று கேட்காமல்
தனியாகவா வந்தீர்கள்
என்று கேட்காமல்
வீட்டில் இருப்பவர்கள்
அனைவரையும்
கூட்டிக் கொண்டு
வர வேண்டியது தானே
என்று கேட்காமல்
கடமைக்கு அழைத்தோம்
இவன் வந்து விட்டான்
என்று நினைத்து
வரவேற்காமல்
மனம் வருத்தப்படும்படி
செய்கிறார்

நமக்கு மனம்
வருத்தமாய் இருக்கிறது
இருந்தாலும் பரவாயில்லை
விசேஷம் முடியும் வரை
இருப்போம் என்று
இருக்கிறோம்

விசேஷம் என்று வைத்தால்
அந்த விசேஷத்திற்கு
பலர் வருவார்கள்
பல வேலைகள் இருக்கும்
அனைவரையும்
கவனிக்க முடியாது
அதற்காக வருத்தப்படக்கூடாது
நாம் போக வேண்டும்
விசேஷத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
சாப்பிட வேண்டும்
வர வேண்டும்
என்று சொல்வார்கள் சிலர்

விசேஷத்திற்கு அழைத்து
நாம் ஒரு விசேஷத்திற்கு
கலந்து கொள்ள
சென்றால்
நம்மை வரவேற்பவர்
நம்மை பாசத்துடன்
வரவேற்கிறாரா
அல்லது
பாசமற்று வரவேற்கிறாரா
என்பது
அவர்கள் நம்மை
வரவேற்பதிலிருந்து
தெரிந்து விடும்

அவர் நம்மை
வரவேற்பதிலிருந்து
நாம் அவருடைய
விசேஷத்திற்கு வந்தது
அவருக்கு பிடிக்கவில்லை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்,
---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////