May 13, 2018

உலக அன்னையர் தினம்-13-05-2018


உலக அன்னையர் தினம்-13-05-2018

“””””ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
   சான்றோன் எனக்கேட்ட தாய்”””””
                         -----திருக்குறள்

பாராட்டு இரண்டு விதங்களில்
வழங்கப்படுகிறது

ஒன்று : படிப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு
இரண்டு : உழைப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு

ஒரு மாணவன்
ஒரு வகுப்பில்
அனைத்து மாணவர்களையும்
விட படித்து
முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றால் அதற்கு
அளிக்கப்படும் பாராட்டு
படிப்பதினால் கிடைக்கும் பாராட்டு

விளையாட்டுப் போட்டியில்
ஒருவன் அனைவரையும்
தோற்கடித்து
முதலில் வந்தால்
கிடைக்கும் பாராட்டு
உழைப்பின் மூலம்
கிடைக்கும் பாராட்டு

இந்த பாராட்டு நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு
படிப்பு என்று எடுத்துக்  கொண்டாலும்
உழைப்பு என்று எடுத்துக் கொண்டாலும்
அளிக்கப்படும் பாராட்டு
மாறிக்கொண்டே இருக்கும் பாராட்டு

படிப்பிலும், உழைப்பிலும்
முதலிடம் பெறுவது என்பது
மாறிக்கொண்டே இருக்கும்
இன்று ஒருவர் முதலில் வருபவர்
நாளை வேறொருவர் முதலில் வருவார்
இது நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

இந்த நிலையில்லாத பாராட்டைக்
கேட்டு எந்த தாயும் மகிழ மாட்டாள்

பாராட்டை இரண்டு நிலைகளில்
பிரிக்கலாம்
ஒன்று  : நிலையில்லாத பாராட்டு
இரண்டு : நிலையான பாராட்டு

படிப்பதின் மூலமும்,
உழைப்பின் மூலமும்
பெறப்படும் பாராட்டு
நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

குணத்தின் மூலம் பெறப்படும்
பாராட்டே
நிலையான பாராட்டு

அடுத்தவர் கண்ணில் வரும்
கண்ணீரைக் கண்டு
எதற்காக அந்த கண்ணீர் வருகிறது
என்பதை அறிந்து அந்த
கண்ணீருக்கு காரணமான துன்பத்தை
நீக்க ஓடோடி சென்று உதவி செய்யும்
கருணை உள்ளம் கொண்டு
அன்பு காட்டி உதவி செய்பவன்
தன் மகன் என்று பிறர் சொல்ல
கேட்கும் போது
ஒரு தாய் மகிழ்கிறாள்

சான்றோன்
என்றால் அறிவாளி என்று பொருள்
கொள்ளக் கூடாது
சான்றோன் என்றால்
உயர்ந்த குணங்களைக் கொண்டவன்
என்று பொருள் கொள்ள வேண்டும்

பிறர் துன்பம் கண்டு
வருத்தப்பட்டு அதை துடைக்க
ஓடுபவன் தன் மகன்
என்று பிறர் சொல்லும் போது
எவ்வளவு பெரிய
உயர்ந்த குணத்தைக் கொண்ட
மகனைப் பெற்று இருக்கிறேன்
என்று ஒரு தாய்
அவனைப் பெறும் போது
அடைந்த மகிழ்ச்சியை
விட அதிக மகிழ்ச்சி
அடைவாள்

என்பது தான்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பதற்கான அர்த்தம்

அன்னையர் தின வாழ்த்துக்கள் – 13-05-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்