January 15, 2020

பரம்பொருள்-பதிவு-115


            பரம்பொருள்-பதிவு-115

(பாண்டவர்கள்
இருக்கும் அறைக்குள்
நுழைகிறார் கிருஷ்ணன்)

கிருஷ்ணன் :
“விஷயம் கேள்விப்
பட்டாயா பீமா ? “

பீமன் :
“என்ன விஷயம்
கிருஷ்ணா ?
என்ன விஷயம் “

கிருஷ்ணன் :
“நாம் என்ன நடக்கக்
கூடாது என்று நினைத்துக்
கொண்டிருந்தோமோ
அது நடந்து விட்டது “

பீமன் :
“எதைப் பற்றிச்
சொல்கிறாய் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“வேறு எதைப்பற்றிச்
சொல்லப் போகிறேன்
அரவானைப் பற்றித் தான் “

பீமன் :
“அரவானைப் பற்றியா?
என்ன செய்தி கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“களப்பலியாவதற்கு
வாக்கு கொடுத்து
விட்டான் அரவான் “

“வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனுக்காக
காளியின் முன்பு
களப்பலியாக சம்மதம்
தெரிவித்து விட்டான் “

“வெற்றி என்பது
துரியோதனனைப்
பொறுத்தவரை
நிச்சயிக்கபட்ட
ஒன்றாகி விட்டது”

“அரவானையும் களப்பலி
கொடுத்து விட்டால்
துரியோதனன் வெற்றி
பெற்று விடுவான் “

பீமன் :
“எப்படி துரியோதனனுக்கு
அரவான் வாக்கு
கொடுத்தான் - எதிரி
என்று தெரிந்துமா
வாக்கு கொடுத்தான் “

“துரியோதனனுக்கு
களப்பலி ஆவதால்
அதர்மத்துக்கு துணை
போகிறோம் என்பதை
அவன் நினைத்துக் கூடப்
பார்க்கவில்லையா? ”

“தர்மம் செத்துவிடும்
என்பதை அரவான்
சிந்தித்துக் கூடப்
பார்க்கவில்லையா ? “

“துரியோதனன் வெற்றி
பெற்று விட்டால்
வருங்காலத்தில்
அக்கிரமக்காரர்கள் தான்
இந்த உலகத்தில்
வாழ்வார்கள் என்பதை
அரவான் யோசித்துக்
கூடப் பார்க்கவில்லையா?”

“நாளை இந்த உலகம்
நல்லவர்கள் வாழ முடியாத
நிலைக்கு தள்ளப்பட்டு
விடும் என்பதை யோசித்து
இருப்பானேயாகில்
இத்தகைய பெரும்
தப்பைச் செய்து
இருக்க மாட்டான்”

கிருஷ்ணன் :
“அரவானைக் குறை
சொல்லாதே
அது அவனுடைய குணம்”

பீமன் :
“எதை குணம் என்கிறாய்
கிருஷ்ணா ! பகைவனுக்கு
உதவி செய்வதையா ?”

கிருஷ்ணன் :
“பீமா நீ அரவானைப் பற்றி
புரியாமல் பேசுகிறாய் ? “

“அரவான்
32 லட்சணங்களும்
எதிர் ரோமமும்
கொண்டவன் மட்டுமல்ல ;
தெய்வத் தன்மையும் ;
வீரத் தன்மையும் ;
ஒருங்கே கொண்டவன் “

“கடவுள் தன்னை
நாடி வந்து கேட்டவருக்கு
தேவையானதை
நல்லவரா கெட்டவரா
என்று பார்க்காமல் எப்படி
வழங்குவாரோ - அப்படியே
அரவானும் தன்னை
நாடி வந்து கேட்டவருக்கு
தேவையானதை
நல்லவரா கெட்டவரா
என்று பார்க்காமல்
வழங்குபவன்  

“அதனால் தான் அரவான்
துரியோதனன் தன்னை
நாடி வந்து தனக்கு 
தேவையானதை கேட்டபோது
துரியோதனன் நல்லவனா
கெட்டவனா என்று
பார்க்காமல் அவனுக்கு
தேவையானதை அளிக்க
ஒப்புக் கொண்டு வாக்குறுதி
அளித்திருக்கிறான் “

“இது எப்படி குற்றமாகும்
இதில் அரவான் தப்பு
எதுவுமில்லை “

திரௌபதி :
“அதர்மம் தலை விரித்து
ஆடுவதற்கு காலமும்
துணை போகிறதே ?
நல்லவர்களும் தாங்கள்
என்ன செய்கிறோம்
என்று தெரியாமல்
அதர்மத்திற்கு துணையாக
சென்று கொண்டிருக்கிறார்களே?
நல்லவர்கள் இந்த நாட்டில்
வாழவே முடியாதா ?
நல்லவர்கள் வாழ்வதற்கு
இந்த பூமியில்
இடமே இல்லையா ? “
நாம் வெற்றி பெறுவதற்கு
வேறு வழியே
இல்லையா கிருஷ்ணா ?”

கிருஷ்ணன் :
“ஒரே ஒரு வழி
இருக்கிறது - துரியோதனன்
களப்பலி கொடுப்பதற்கு
முன் நாம் களப்பலி
கொடுப்பதே வெற்றி
பெறுவதற்கு ஒரே வழி”

பீமன் :
“துரியோதனனுக்காக
களப்பலியாவதாக அரவான்
வாக்கு கொடுத்து விட்டானே
நாம் யாரை களப்பலி
கொடுக்க முடியும் “

கிருஷ்ணன் :
“ஏன் களப்பலி
கொடுப்பதற்கான
தகுதியைக் கொண்டவன்
நான் இருக்கிறேனே - என்னை
களப்பலி கொடுங்கள்”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------15-01-2020
//////////////////////////////////////////


பொங்கல் வாழ்த்துக்கள்-15-01-2020


பொங்கல் வாழ்த்துக்கள்-15-01-2020 !

அன்பிற்கினியவர்களே !

“அன்பின் வழியது
உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த
உடம்பு

“அன்பை
எழுத்துக்களின் மூலம்
வெளிப்படுத்த முடியாது ;
அன்பை
வார்த்தைகளின் மூலமும்
செயல்களின் மூலமும் தான்
வெளிப்படுத்த முடியும் ;
அதாவது
அன்பை உணர்வுகளின்
மூலமே வெளிப்படுத்த
முடியும் “

“ஒவ்வொருவரும்
தங்களுடைய அன்பை
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமே
பண்டிகைகள் !
அதாவது பண்டிகைகள்
என்பவை அன்பை
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமாக
அமைகிறது ; “

“அன்பை நாம் வீட்டில்
இருந்து கொண்டே வாழ்த்து
அட்டைகளின் மூலமாகவோ
WHATS APP
மூலமாகவோ
FACE BOOK
மூலமாகவோ மற்றும்
எந்த ஒன்றை வைத்தும்
நாம் நம்முடைய அன்பை
வெளிப்படுத்த முடியாது ; “

“ஒருவரை நேரில் சந்தித்து
நம்முடைய அன்பை
உணர்வுகளின்
மூலமாகத் தான்
வெளிப்படுத்த முடியும் “

“ஐயிரண்டு திங்கள்
அங்கமெல்லாம்
நொந்து பெற்று நம்மை
பாராட்டி சீராட்டி
வளர்த்த தாய்க்கும் ;
சுற்றுப் புறச்
சூழ்நிலையிலிருந்து
நம்மைக் காத்து அறிவூட்டி
வளர்த்த தந்தைக்கும் ;
நம்முடைய அன்பை
நேரில் சென்று
நம்முடைய
உணர்வுகளின் மூலமே
நம்முடைய அன்பை
வெளிப்படுத்த வேண்டும் ;
வேறு எந்த ஒன்றினாலும்
வெளிப்படுத்தக் கூடாது ; “

“படிப்பதற்காக வெளியூர்
சென்று படித்தாலும் ;
வேலை நிமித்தம்
காரணமாக வெளியூர்
சென்று வெளியூரில் தங்கி
வேலை செய்தாலும்  ;
திருமணம் செய்து
கொண்டு குடும்பத்துடன்
வெளியூரில் இருந்தாலும் ;
பண்டிகைகள் என்று வந்து
விட்டால் பெற்றோர்களை
அவர்கள் இருக்கும்
இடத்தைத் தேடிச் சென்று
அவர்களுடன் அன்பை
பரிமாறிக் கொள்ள வேண்டும் “

“இந்த உலகத்தையே
பெற்றோர்களுக்கு
விலைக்கு வாங்கி
கொடுத்தாலும் மகிழாத
அவர்களுடைய மனம் ;
பெற்றோர்களை
பண்டிகை சமயத்தில்
அவர்கள் இருக்கும்
இல்லம் தேடிச் சென்று
அவர்களுடன் அன்பை
பரிமாறிக் கொள்ளும்போது
அவர்களுடைய
மனம் மகிழ்கிறது ;”

“நீங்கள் செலுத்தும்
அத்தகைய அன்பால்
அவர்கள் மனம் குளிர்ந்து
ஆனந்தத்தில் ஆனந்தக்
கண்ணீரே பெற்றோர்களுக்கு
வந்து விடும் ; “

“இது தான் நாம்
நம்முடைய அன்பை
பிறருக்கு
வெளிப்படுத்தும் முறை “

“அவ்வாறு செய்யாமல்
வாழ்த்து அட்டைகளை
அனுப்புவது
இணையதளங்கள் மூலமாக
அன்பை பரிமாறிக்
கொள்வதாக சொல்லிக்
கொண்டு அன்பை
பரிமாறுவது ; ஆகியவை
எல்லாம் அன்பைப்
பரிமாற்றம் செய்வது ஆகாது ; “

“யார் ஒருவர் நேரில்
சென்று தன்னுடைய
அன்பை இன்னொருவருக்கு
உணர்வுகளின் மூலமாக
வெளிப்பத்துகிறாரோ
அவரே உண்மையான
அன்பைக் கொண்டவர் ;
அவரே உடலில்
உயிர் உள்ள மனிதர் ;
யார் ஒருவர்
தன்னுடைய அன்பை நேரில்
சென்று இன்னொருவருக்கு
உணர்வுகளின் மூலமாக
வெளிப்படுத்தாமல்
இருக்கிறாரோ - அவர்
பிறர் மேல் அன்பு
வைத்திருப்பதாக நடிப்பவர் ;”
அவர் உடலில்
வெறும் எலும்பையும்
தோலையும் கொண்ட
மனிதர் என்பதைத் தான்
திருவள்ளுவர்

அன்பின் வழியது
உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த
உடம்பு “

என்ற திருக்குறளின்
மூலம் தெளிவுபடுத்துகிறார் “

“நம்முடைய அன்பை
பிறருக்கு
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமாக
பண்டிகைகளை
பயன்படுத்துவோம் ;
நேரில் சென்று
ஒருவொருக்கொருவர்
அன்பை பகிர்ந்து
கொண்டு மகிழ்வோம் ;

“பொங்கல் வாழ்த்துக்கள்
15-01-2020 “

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
---------15-01-2020
/////////////////////////////////////