March 01, 2019

திருக்குறள்-பதிவு-115


                     திருக்குறள்-பதிவு-115

“கல்வியும், விஞ்ஞானமும்
மதத்தின் கால் பிடித்து
அதற்கு அடிமையாக
இல்லாமல் ;
வியாபாரிகளுடைய
வியாபாரப் பொருளாக
இல்லாமல் ;
அரசியல் ஆதிக்கத்தின்
ஊடுருவல் இல்லாமல்  ;
சுதந்திரமாக தனித்து
இயங்கக்கூடியதாக 
இருந்தால் மட்டுமே
கல்வியும், விஞ்ஞானமும்
மனித இனத்திற்கு
பயனுள்ளதாக இருக்கும் ; “

“ மனித இனம்
அறிவு வளர்ச்சி பெற்று
அடிமையாக இல்லாமல் ;
சுயமாக சிந்தித்து
செயல்படக்கூடிய
நிலையில் இருக்கும் ; “

“ இல்லை என்றால்
அதாவது கல்வியும்,
விஞ்ஞானமும்
சுதந்திரமாக
இந்த உலகத்தில்
இல்லை என்றால்
மனித இனம்
மதத்திற்கு அடிமையாகவும்;
வியாபாரிகளுக்கு
வியாபாரப் பொருளாகவும் ;
அரசியல்வாதிகளுக்கு
தலையாட்டி
பொம்மைகளாகவும் ;
இருக்கக் கூடிய
சூழ்நிலை தான் ஏற்படும்: “

என்பதை இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதை விளக்கும்
வகையில் ஜியார்டானோ
புருனோ சிலையின்
கைகளில் புத்தகம்
உள்ளது. “

“ ஜியார்டானோ புருனோ
சிலையின் இரண்டாவது
முக்கியமான கூறு
எட்டு நபர்களைப்
பற்றிக் கூறுகிறது “

“ சிலையின்
இரண்டாவது கூறில்
உலகின் பல்வேறு
நாடுகளில் வாழ்ந்த
புகழ்பெற்ற சிறந்த
தத்துவ மேதைகள் ;
அறிவிற் சிறந்த
விஞ்ஞானிகள் ;
ஆகியோரில் குறிப்பாக
எட்டு நபர்களின்
உருவங்கள் ;
பதக்கங்களாக ;
(Medallions)
சிலையில்
செதுக்கப்பட்டுள்ளது “

“ அந்த எட்டு நபர்களில்
ஆறு நபர்கள்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்த
சமகாலத்தவர்கள் ;
(Contemporaries).
இரண்டு நபர்கள்
ஜியார்டானோ
புருனோவிற்கு முன்பு
வாழ்ந்தவர்கள் ; “

“ இந்த எட்டு நபர்களுக்கும்
ஒரு முக்கிய
ஒற்றுமை உள்ளது,
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
நடைமுறைப்படுத்தி
இருக்கும் பழக்க
வழக்கங்களை
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்றும் ;

சர்ச்சுகளில் கடை
பிடிக்கப்பட்டு வரும்
மத பழக்கங்களை
மாற்ற வேண்டும்
என்றும் ;

பைபிளில் உள்ளவைகளில்
பெரும்பாலான கருத்துக்கள்
தவறானவைகளாக
இருக்கின்றன அவைகளை
திருத்த வேண்டும் ;

என்றும் கருத்து சொல்லி
போராடியவர்களில்
இந்த எட்டு
நபர்களும் அடங்குவர் “

“ இந்த எட்டு நபர்களும்
கிறிஸ்தவ மதத்தில்
உள்ள தவறுகளை
தைரியமாக எதிர்த்தவர்கள் ;

கிறிஸ்தவ மதத்தில்
உள்ள பல்வேறு
தவறுகளைச்
சுட்டிக் காட்டி
அதை சரிசெய்ய
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
பல்வேறு துன்பங்களை
அனுபவித்தவர்கள் ;

சிறைச்சாலையில்
சித்திரவதைகளால்
கொடுமைப் படுத்தப்
பட்டவர்கள் ;

சொல்லொணாத்
துயரை வாழ்வில்
சுமந்தவர்கள் ;

சிலர் உயிரோடு
எரித்துக் கொல்லப்
பட்டவர்கள் ;

சிலர் கொடுமையான
சித்திரவதைகள் மூலம்
கொல்லப்பட்டவர்கள் ;

இந்த எட்டு பேரும்
தாங்கள் கொண்ட
கொள்கைக்காக எதைக்
கண்டும் அஞ்சாமல்
முன்வைத்த காலை
பின் வைக்காமல்
வாழ்க்கையை
இழந்தவர்கள்;
உயிரை துறந்தவர்கள் ; “

“ ஜியார்டானோ
புருனோவுக்கும் இந்த
எட்டு நபர்களுக்கும்
உள்ள ஒற்றுமை
இது தான் “

“ கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொல்லி போராடிய
காரணத்திற்காக
வாழ்க்கையை
இழந்தவர்கள் ;
அதற்காக உயிரைத்
துறந்தவர்கள் ; “

“இந்த எட்டு நபர்களுக்கும்
ஜியார்டானோ புருனோவுக்கும்
உள்ள ஒற்றுமையை
நாம் நன்றாக யோசித்துப்
பார்த்தால் ஒரு
வியக்கத்தக்க உண்மை
நமக்கு புலப்படும்
அந்த உண்மை……………………………? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  01-03-2019
//////////////////////////////////////////////